சகலும் அவளே ,அவளே ஆதிபராசக்தி

சகலும் அவளே ,அவளே ஆதிபராசக்தி . இன்றைய பதிவில் பரமாச்சாரியாள் தெளிவாக விளக்கி இருந்தார். அம்பாளை வணங்குவதற்கே பாக்கியம் செய்து இருக்க வேண்டும். அது சத்தியமான வார்த்தை. பரமாச்சாரியாளின் நேற்றைய அருளுரைக்கும், இன்றைய அருளுரைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அம்பாளை யாருக்கு தரிசிக்கும் பாக்கியம் உள்ளதோ அவர்களுக்கு தான் அம்பாளை தரிசிப்பதற்கான எண்ணத்தை தோன்றி வைப்பாள் அம்பாள். நாம் உன்னிடம் சரணகதி அடைந்து விட்டேன். நாம் ஒரு சிறு துரும்பு என்கிற எண்ணம் வேண்டும். காரணம் அனைத்திற்கும் மூலம் அவள். மஹான்கள் எப்போதும் தன்னை ஒரு துரும்பு என்று தங்களை சிறுமைபடுத்தி கொள்வார்கள். அவ்வாறே நேற்றைய பதிவில் சௌந்தயலஹரி என்ற மாபெரும் காவிய கிரந்ததை படைத்துவிட்டு. நீ கொடுத்த அக்ஷ்ரத்தால் நான் உனக்கு சௌந்தயலஹரி எனும் மாலையை தொடுத்தேன் என்று பவ்யமாக கூறுவார் சங்கபகவத்பாதாள். இதில் என் திறமை ஒன்றுமில்லை, அனைத்திற்கும் காரண கர்த்தா நீ, நான் ஒரு கருவி என்பதை தனது 90வது பாடலில் சரணாகதி தத்துவத்தில் கூறி, 100பாடலின் நான் ஒரு சிறு துரும்பு என்பதை வெளிபடுத்து இருப்பார். இதையே தான் பரமாச்சாரி...