ஸரஸ்வதி கடாக்ஷ்சம் லெக்ஷ்மி கடாக்ஷ்சம்

 பகுதி 96


ஸரஸ்வதி கடாக்ஷ்சம்

லெக்ஷ்மி கடாக்ஷ்சம்



Attaining knowledge and wealth.


லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.


#லலிதாசஹஸ்ரநாமம்#


#ஸதீ#


ஸதீ தேவி என்பது தேவி மஹாத்மியத்தில் குறிப்பிடப்படும் ஒரு தேவி.


தேவி மஹாத்மியத்தில் குறிப்பிடப்படும் சில தேவிகள்: 

உமா, கௌரி, சண்டீ, சுந்தரி, சுபகா, ஷிவா.


#ஸதாசிவாகுடும்பிநீ#


குடும்பினீ = குடும்பத் தலைவி - மனைவி


சதாஷிவ குடும்பினீ = சதாசிவனின் பத்தினி 


பிரபஞ்ச தோற்றத்திற்கு காரணமான பரம்பிரம்மம், சதாசிவன். 


அவரே பிரபஞ்ச உயிர்களின் தந்தை.


 லலிதாம்பிகையே தாய்.


 பரமபுருஷனின் பத்தினி. 


#ஸதாசிவபதிவ்ரதா#


சிவனுக்கு பல வடிவங்கள் உள்ளன, சதாசிவம் ( சதாசிவம் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக அல்லது வளமாக இருக்கிறது) அவற்றில் ஒன்று. 


சதாசிவத்தின் சில விளக்கங்கள் பின்வருமாறு .  


பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் , மகாதேவன் மற்றும் சதாசிவம் ஆகியவை ஐந்து கூறுகள் 

அதாவது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகஷி . சிவனின் அனைத்து வடிவங்களிலும் , 


சதாசிவ வடிவம் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, 


ஏனெனில் அவரே பிரளயத்திற்குப் பிறகு நிகழும் மறு உருவாக்கத் திற்குக் காரணம் ( மகா பிரளயம் ). சதாசிவம் என்பது முப்பத்தி நான்காவது கொள்கை அல்லது தத்துவம், அடுத்த இரண்டு கொள்கைகள் சக்தி மற்றும் இறுதியாக சிவம் , 


இதனால் முப்பத்தாறு கொள்கைகளை உருவாக்குகிறது. கொள்கைகள் உணர்வு நிலைகளைத் தவிர வேறில்லை.  


சதாசிவ கொள்கை என்பது பயிற்சியாளர் அஹம் இடம் என்று உணரும் நிலை .  


அஹம் என்றால் நான் என்றும் இடாம் என்றால் இங்கே என்றும் பொருள்.  இடமம் என்பது 'உடனடியாகப் பின்தொடரும் ஒன்றை' குறிக்கிறது.


இந்த சூழலில் அஹம் இடமம் என்றால் 'நான் இங்கே சக்தி மற்றும் சிவனுக்காகக் காத்திருக் கிறேன்' (நாமம் 999 ஐப் பார்க்கவும்).


 இது சுய உணர்தலுக்கு முந்தைய கட்டமாகும். சதாசிவ நிலையில் 'நான் உணர்வு' இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் இச்சா அல்லது விருப்பத்துடன் தொடர்புடையது .  


சதாசிவ தத்துவம் சக்திக்கு வழிவகுக்கிறது, இது இறுதியில் சிவனில் உச்சத்தை அடைகிறது. சிவனைத் தாண்டி எதுவும் இல்லை . 


இந்த நாமம் அவள் சதாசிவனின் மனைவி என்று பொருள்.


சிவன் நிர்குண பிரம்மம் அல்லது பண்புகளற்ற பிரம்மம், சதாசிவனின் மனைவி சகுண பிரம்மம் , 


ஏனெனில் அவள் படைப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலைப்புக்கான அனைத்து சக்திகளையும் பெற்றிருக்கிறாள். 


#சௌந்தயலஹரி#


தேவியின் பதிவிரதா மஹிமை


ஸரஸ்வதி கடாக்ஷ்சம்

லெக்ஷ்மி கடாக்ஷ்சம்


களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவ்யாஹ

ஶ்ரீயோ தேவ்யாஹ கோவாநபவதிபதிஹி கைரபி தனைஹி!


மஹாதேவம் ஹித்வா தவ சதி சதீனாமாச்சரமே

குச்சாப்யாசங்கஹ குரவகதரோரப்யசூலபாஹா!"


சதிதேவி என்று அழைக்கப்படும் பதிவிரதைகளின் தேவியே!.


பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதாவிலாசத்தால் அடைய வில்லையா.


சிறிதளவே செல்வத்தைக் கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்பதி என்று கூறபடுவத்திலையா?.


பதிவிரத்களில் முதன்மையாவளே!


உனது நிகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி ஒரு மரத்திற்க்கூட கிடைத்ததில்லயே.


மஹா கவிஞர்கள்  மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்களை சரஸ்வதி வல்லபவர்கள் என்றும்.


இதேபோல தனதான்ய செல்வங்களை வசமாக்கி கொண்டிருபவர்களை லெக்ஷ்மிபதி என்று கூறுவது வழக்கம்.


ஆனால் பார்வதீ பதி அல்லது சதீ பதி என்றோ யாரையும் கூறுவதில்லை.


வித்தையும் செல்வத்தையும் மனிதர்கள் தன்வசபடுத்திக் கொண்டாலும்.


மனத்துக்கும் வாக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசபடுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கு வசப்பட்டவள் என்கிறார்.


குரவகதரோ: 


என்றால் மருதோன்றி(மருதாணி) மரம்.  முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டபடவேண்டும் என்று 85ஆம் ஸ்லோகத்தை இங்கே சொன்னது போல் ,


மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம்.


ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யபடுவது ஶ்ரீபரமேஸ்வரன் ஒருவனே எனாறு கூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறுகிறார் ஆச்சாரியர் பகவத்பாதாள்.


#அபிராமிஅந்தாதி#


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா


சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்


முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த


புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே. 


தவம் செய்பவர்கள் அடையும் இலக்குகள் பல. 


சிலருக்கு இலக்கு, அந்தத் தவத்தின் வாயிலாக, பல சித்திகளை அடைதல். மற்ற சிலருக்கு இலக்கு, 


அந்த சித்திகளை அருளும் அந்த தெய்வத்தையே அடைவது. இன்னும் சிலருக்கோ, அந்த தெய்வம் தரும் முக்தியே குறிக்கோள்.


ஆனால், இங்கோ, அந்த சித்தியும், அந்த சித்திகளைத் தரும் தெய்வமும், இரண்டும், ஒன்றேயாக அல்லவா காட்சி தருகிறது!


அந்தச் சக்தி, எப்படிக் காட்சி தருகிறது? 


தனித்தே இல்லை. 


சிவத்துடன் காட்சி தருகிறது. 


அதைத்தான், 'சக்தி தழைக்கும் சிவமும்' என்று சொல்கிறார் பட்டர்.


இந்த சக்திதான், முக்தி வேண்டி நிற்போருக்கு, முக்தியும் அளிக்கிறது. முக்தி அளிப்பது மட்டுமல்ல. 


அந்தச் சக்தி இல்லையேல், அந்த முக்தி வேண்டி நிற்போ எப்படி தவம் செய்ய முடியும்? 


அப்படி, முக்தி அளிப்பது மட்டுமல்ல, அந்த முக்தி வேண்டுவோர் செய்ய்ய வேண்டிய தவமுமாகி, அந்தத் தவத்திற்கு வேண்டிய வித்தாய், 


அந்த முயற்சிக்கு மூலமாய் அமைகிறதும் அந்த சக்தியேதான். அந்த முயற்கி ஏற்பட, முதலில் புத்தி வேண்டும் அல்லவா? 


அப்படி, இந்த சக்தியே, அந்த முயற்சி முதன் முதலில் எழும் புத்தியுமாகி இருக்கிறது.


இப்படி, சித்தியாகி, சித்தி தரும் சக்தியும் ஆகி, அந்தச் சக்தியும் கூட, சிவத்துடன் நின்று, அந்தச் சக்தி பெரும் தவமுமாகி, அந்தத் தவத்தினை விளவிக்கும் புத்தியுமாகி நிற்கும் இந்த பெரும் வடிவம் யார்?


அந்த முப்புரங்களும் கொண்ட திரிபுர சுந்தரியே அல்லவா?


அவளே அனைத்தையும் புரப்பதால், 'புரத்தை' என்று அவளைச் சொல்கிறார் பட்டர்.


இப்படி, முயற்சிக்கு உண்டான பலனாய் மட்டுமல்லாது, முயற்சியாகவும், அவளே இருக்கிறாள் ; 


முயற்சியாக மட்டுமல்லாது, அந்த முயற்சியை விளைவிக்கும் புத்தியும், அந்த புத்தியும் சிந்தனையும் விளையும் வித்தாகவும் கூட அவளே இருக்கிறாள் என்று மிக அழகாகச் சொல்லுகிறார் பட்டர்.


இங்கே, ரமணர் பற்றிய ஒரு சிந்தனை எழுகிறது. மகரிஷி ரமணர் திருவண்ணாமலையில் தவம் செய்துகொண்டு இருந்த சமயம்.


சேஷாத்ரி மகானும் அப்போது அங்கே இருந்தார்.


ஒரு நாள், சேஷாத்ரி மகான், ரமணர் தவம் செய்து கொண்டு இருந்த இடத்துக்குச் சென்றபோது, ரமணரிடம், திருவண்ணாமலை யானை தரிசிக்கச் சென்று வந்ததாகச் சொன்னார். 


அப்போது, ரமணர் கேட்டார் :


 "தரிசிக்கச் செல்பவன் யார்?


தரிசிக்கப் படுவது யார்? 


தரிசனம் என்பது எது? 


எல்லாமும் ஒன்றே அல்லவா"? என்று சொன்னதாக ஒரு கதை உண்டு.


அது போல, இங்கேயும், அந்த சக்தியே அனத்துமாகி நிற்கிறது. பாரதியார்


 #யாதுமாகிநின்றாய்காளி# என்று சொல்வது போல்,


நம் அன்னை, அபிராமி, தவத்தின் பயனாய் மட்டுமில்லாது, 


அந்த தவமாகவும் அவளே இருக்கிறாள். 


அந்தத் தவத்தினை விளைவிக்கும் வித்துமாகவும் அவளே இருக்கிறாள்.


சகலமும் அவளே அவளே நம்மை உள்ளிருந்து இயக்கும் ஆக்க சக்தி.


அதனாளையே அவளை #ஆதிசக்தி# அல்லது #ஆதிபராசக்தி#என அழைக்கிறோம்.


#ஓம்ஆதிபராசக்தியேநமஹ#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.