Posts

Showing posts from March, 2026

அபிராமிஅந்தாதிபாடல்99

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்99 . குயிலாய் இருக்கும்  கடம்பாடவியிடை;  கோல இயல் மயிலாய் இருக்கும்  இமயாசலத்திடை;  வந்துதித்த வெயிலாய்  இருக்கும் விசும்பில்;  கமலத்தின்மீது அன்னமாம்; கயிலாயருக்கு  அன்று இமவான்  அளித்த  கனங்குழையே               #பொருள் ஏ, அபிராமி!  அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு  மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே!  தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத் தையுடையவளே!  மதுரையில் குயிலாகவும்,  இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும்,  திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள்  என்பது வழக்கு). #பொருளுரை அன்னை எப்படி எல்லாம் இருக்கிறாள்?  எவ்வாறெல்லாம் அருள் பாலிக்கிறாள்?  ஒரு பட்டியல் போடுகிறார் பட்டர். கடம்ப வனத்திலே அவள் குயில் போன்று இருக்கிறாள் #கதம்பவனவாசினி' என்றே அவளுக்குத் திரு நாமம்.  இமய மலையின் மீதோ,  அ...

அபிராமி அந்தாதி பாடல் 98.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்98. தைவந்து நின் அடித் தாமரை  சூடிய சங்கரர்க்கு கைவந்த தீயும், தலை வந்த ஆறும்,  கரந்தது எங்கே?- மெய் வந்த நெஞ்சின்  அல்லால்  ஒருகாலும் விரகர்  தங்கள் பொய்வந்த நெஞ்சில்,  புகல் அறியா  மடப் பூங்குயிலே!         #பொருள் ஏ, அபிராமி!  நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள்.  பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும்,  முடிமேல் இருந்த ஆறும்  (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ? #பொருளுரை அன்னை ஊடல் கொண்டிருக்கிறாளாம்.  அந்த ஊடலைத் தணிக்க அந்த மகேசன் வருகிறான்.  அன்னையின் திருப்பாதங்களை வருடுகிறான்.  ஊடல் தணிகிறது. அம்மையும் அப்பனும் இணந்து காட்சி தருகிறார்கள். ஆனால்,  அம்மையின் குழந்தையான அபிராமி பட்டருக்கோ சில சந்தேகங்கள் எழுகின்றன.  வேடிக்கையான சந்தேகங்கள்! அந்த சங்கரனார்க்கோ, கையிலே நெருப்பு இருக்கிறது.  அந்த நெருப்புடனே அவன் தண்டவம்...

அபிராமிஅந்தாதிபாடல்97

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்97 . ஆதித்தன்,  அம்புலி,  அங்கி குபேரன்,  அமரர்தம் கோன், போதிர் பிரமன்  புராரி,  முராரி  பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன்,  கணபதி,  காமன்  முதல் சாதித்த புண்ணியர்  எண்ணிலர் போற்றுவர்,  தையலையே      #பொருள். என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து,  அவற்றின் பயனையும் அடைந்த  சூரியன்,  சந்திரன்,  அக்கினி,  குபேரன்,  தேவர்களின் தலைவன் இந்திரன்,  தாமரை மலரில் உதித்த பிரம்மன்,  முப்புரங்களை எரித்த சிவபெருமான்,  முரனைத் தண்டித்த திருமால்,  பொதியமலை முனியாகிய அகத்தியர்,  கொன்று போர் புரியும் கந்தன்,  கணபதி,  மன்மதன்  முதலாகிய  எண்ணற்ற தேவர்கள்  அனைவரும்  போற்றித்  துதிப்பர். #பொருளுரை       அவளைப் போற்றி வழிபட்டால்,  ஏழு உலகங்களுக்கும் அதிபராகலாம். உண்மை.  ஆனால்,  அவ்வாறு வழிபட்டு பெறும் பேறு அடைந்தவர்கள் யாரும் உண்டோ? அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?...

அபிராமிஅந்தாதிபாடல்96

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்96 கோமளவல்லியை,  அல்லியன்  தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை,  ஏதம் இலாளை,  எழுதரிய சாமள மேனிச்  சகலகலா மயில்தன்னை,  தம்மால் ஆமளவும் தொழுவார்,  எழு பாருக்கும் ஆதிபரே               #பொருள் என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை,  அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை,  குற்றமற்றவளை, எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை,  சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை,  தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே,  ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள். #பொருளுரை நீயே துணை என்று அவளது திருப்பாதங்களில் சரண் புகும் அன்பர்களுக்கு என்ன கிடைக்கும்? எடுத்துச் சொல்லுகிறார் பட்டர். அந்த மென்மையே வடிவான அபிராமித்தாயை,  கோமளவடிவான அவளை,  மென்மையான தாமரை மலரிலே வீற்றிருக்கும் அந்த யாமளாகமத்தினால் புகழ் பெற்றவளை,  ஒரு குறைவும் இல்லாதவளை, எழுத்திலேயும், வாக்கிலேயும் சொல்லவொண்ணா, எழுதவொண்ணா அழகுடையவளை, ஸ்யாமள நிறத...

அபிராமிஅந்தாதிபாடல்95

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்95 நன்றேவருகினும்,  தீதே விளைகினும்,  நான் அறிவது ஒன்றேயும் இல்லை;  உனக்கே பரம்:  எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்குன்றே,  அருட்கடலே;  இமவான் பெற்ற கோமளமே!                         #பொருள் ஏ, அபிராமி!  அழியாத குணக்குன்றே!  அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே!  எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை.  அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன்.  இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும்,  அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன்.  இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன். #பொருளுரை நன்றும் தீதும் அபிராமியின் அடியார்களுக்கு ஒன்றுதான். எதுவுமே,  அவளது செயல்தான்.  அப்படியிருக்க, ' இது நல்லது',  இது நல்லது இல்லை'  என்று ஏதெனும் இருக்க முடியுமா என்ன?  முடியாது.  அதைத்தான் பட்டரும் இங்கே பறை சாற்றுகின்றர். "அம்மா!  நான்,  எனக்கு என்று இருப்பவை யாவற்றை...

அபிராமிஅந்தாதிபாடல்94

Image
 அபிராமிஅந்தாதிபாடல்94 விரும்பித் தொழும் அடியார்  விழி நீர் மல்கி,  மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து சுரும்பின் களித்து,  மொழி தடுமாரி,  முன்சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்  அபிராமி சமயம் நன்றே                #பொருள் அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி,  மெய்சிலிர்த்து,  ஆனந்தம் ததும்பி,  அறிவு மறந்து,  வண்டைப் போல் களித்து,  மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச் சிறந்ததாகும். #பொருளுரை அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியார்கள் நிலை எப்படி இருக்கும்?  அவளின் மெய்யடியார்களின் கண்களிலே எப்போதும் கண்ணீர் ததும்பி நிற்கும்.  அவர்களது உடல் விதிர்விதிர்த்து ஒரு வித நடுக்கம் காணப்படும்.  அவர்களது மேனி சிலிர்த்து, அவர்களது மனதிலும்,  நினைவிலும், மேனியிலும் ஒருவித ஆனந்த மயக்கம் காணப்படும். அந்த ஆனந்த மயக்கத்திலே, அவர்கள் சுய அறி...

அபிராமிஅந்தாதிபாடல்91

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்91 மெல்லிய நுன் இடை  மின் அனையாளை  விரிசடையோன் புல்லிய மென்  முலைப் பொன் அனையாளை புகழ்ந்த மறைசொல்லியவண்ணம்  தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்தெழ,  வெண் பகடூரும்  பதம் தருமே              #பொருள் அபிராமித் தேவி!  நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்;  விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலை களையுடையவள்;  பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள்,  பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர,  வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர். #பொருளுரை அன்னை அபிராமியைத் தொழுபவர்கள் எதைத்தான் அடைய மாட்டார்கள்?  அந்த மெல்லிய இடை உடைய எம்பெருமாட்டியை,  அந்த மின்னல் போலும் ஒளி பொருந்திய எம் தேவியை,  அந்த விரிசடையோனாகிய சிவபெருமானை அணைத்து நிற்கும் எம் அபிராமித் தேவியை,  தினம் தினம் தொழுது,  அந்த வேதத்தில் கூறிய வண்ணம் பூசை செ...

அபிராமிஅந்தாதிபாடல்93

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்93 நகையே இஃது;  இந்த ஞாலம்  எல்லாம் பெற்ற நாயகிக்கு, முகையே முகிழ் முலை;  மானே முதுகண்;  முடிவுஇல்,  அந்த வகையே பிறவியும்;  வம்பே,  மலைமகள்  என்பது நாம்; மிகையே  இவள்தன்  தகைமையை  நாடி விரும்புவதே             #பொருள் உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை,  மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள்.  முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள் இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள்.  இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும். #பொருளுரை குழந்தைகள் பெற்ற ஒரு பெண்மணிக்கு, ஸ்தனங்கள் சற்றே தளர்ந்து, தாழ்ந்து இருக்கும்.  ஆனால், உலகையே பெற்றெடுத்த பெண்மணியாம் எம் அன்னைக்கு, ஸ்தனங்கள் தாமரை மொட்டு போல் இருக்கின்றன!  இது வியப்பானது இல்லையா!! முதுமை அடைந்துவிட்ட ஒரு பெ...