ஆதியும் அந்தமும்
இதன் சிறப்பே அந்தாதி பெயர் என வரக் காரணம்.
அப்படி என்ன சிறப்பு இந்த அந்தாதி எனும் பெயருக்கு.
எதற்கும் ஆதியும் அந்தமும் இல்லாததோ அதைப் பற்றி பாடியதால் அந்தாதி என்று அழைக்கப்பட்டது.
எது ஆதியும் அந்தமும் இல்லாதது , அந்த பரம்பொருள்.
பரம்பபொருள் என்பது #சிவசக்தி# இணைவு ஐக்கிய சொரூபம்.
அது எவ்வாறு அம்பாள் சிவனை நோக்கி தவமிருந்ததால்.
திருவண்ணாமலையில் அம்பாளுக்கு காரத்திகை பௌர்ணமி அன்று காட்சிக் கொடுத்து தனது இடபாகத்தையும் கொடுத்தார். அதுவே கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபத்தின்று சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரர் ஆடி ஆடி சந்தோஷத்துடன் வந்த பிறகு தான் மலைஉச்சியில் மலை தீபம்.
இதன் தாத்பர்யம் அப்பனும் அம்மையும் இணைந்து இருக்கும்போது தான் அம்மைக்கு மிக ஆனந்தமான மனநிவையில் இருப்பாள் அப்போது தான் தீப சொருபமான ஐயனை மலை உச்சியில் அக்னி சொரூபமாக காணலாம்.
அது ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி பிளம்பு.
அந்த ஜோதியின் அடியை காண தான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியை துளைத்து சென்றார்.
ஆனால் முடியைக் காண மேல் பிரம்மா நோக்கி சென்றார்.
அடிமுடியை காண இயலவில்லை என்பதே இதன் தாத்பர்யம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை" என்பது மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் வரும் மாணிக்கவாசரின் பாடல்.
அந்த பரம்பொருளிலிருந்து வந்த ஒரு துணுக்கு தான் அம்பாள் எதற்காக இந்த லோக வியாபாரத்திற்கு தான்.
அதுவே பிரளய காலத்தில் பரம்பொருள் ஆடுக்கின்ற நடத்திற்கு இவளே சாட்சி.
ஆகையால் இங்கு அம்மையை குறிப்பிட்டால் அப்பனையும் குறிக்கும்.
ஆதலால் அவர்
#ஊமையொருபாகன்#.
#ஓம்சிவசக்திஐக்கியசொருபமேநமஹ#.
Comments
Post a Comment