பகவதியின் பாத நீரும் பாரதியின் தாம்பூல ரஸமும்.
பகுதி 98.
வாக்கு ஸித்தி).
பகவதியின் பாத நீரும் பாரதியின் தாம்பூல ரஸமும்.
Mastery over words, eloquence,magnetic speech.
#லலிதாசஹஸ்ரநாமம்#
#ச்ருதிஸீமந்தஸிந்தூரிக்ருதபாதாப்ஜதூலிகா#.
ஸஹஸ்ரநாமம் ரொம்பவும் அழகாக,
வேதமாதாவின் வகுட்டில் அப்பிய ஸிந்தூரமாக எந்தக் குங்குமம் இருக்கிறதோ.
அதையே தன் பாததூளியாகப் பண்ணிக் கொண்டவள்:
#ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரி-க்ருத-
பாதாப்ஜ தூளிகா# என்று வர்ணிக்கிறது.
#தாம்பூலபூரிதமுகீதாடிமீகுஸீமப்ரபா#
தாம்பூல பூரித முகீ -
வாய் சிவக்க சிவக்க கோவைப்பழம்போல வெற்றிலை பாக்கு தாம்பூல தரித்து சுகிப்பவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர்.
அவள் ஏற்கனவே சிவந்த மேனியள். மேலும் கேட்கவேண்டுமா தாம்பூலத்தால் சிவந்த இதழ்கள் அவளுக்கு கூடும் தனி அழகை.
அது மேலும் நல்ல தாம்பூலம் தரிக்கும்போது கம்மென்று ஒரு மணம் சேர்ந்துவிடும்.
கிராமத்துப்பக்கம் சுமங்கலி பெண்கள் செக்கசிவந்த வாய் கூடுதலாக தாம்பூல தரித்து செக்க சிவந்த வாய் இதைதான் ஞாபக படுத்துகிறது அதே அழகில் அம்பாள்.
#தாடிமீ குஸுமப்ரபா#
அம்பாளின் நிறத்தை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தால் உடனே நினைவுக்கு வருவது மாதுளை மணிகள்.
மாணிக்கங்கள். கருஞ்சிவப்புக்கு எப்போதுமே தனி அழகு.
செம்பருத்திப் பூவையும் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது.
அம்பாள்
சிறந்தவள்
சிவந்தவள்.
தாயே!
உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன் ஜலமானது ப்ரமஹ ஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போதும் பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள்.
பிறவிலேயே ஊமையுனவர்களுக்கு கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடையது.
உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயிலா சேரும்?.
கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும்.
அதனையே ஆச்சார்யர் இங்கு குறிப்பிடுகிறார் என்று அருணா-மோதினியில் சொல்லபட்டுகிறது.
பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள். அன்னயின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும்.
அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி.
அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்கிறார் ஆச்சாரியர்.
#அபிராமிஅந்தாதி#
பொருளே,
பொருள் முடிக்கும் போகமே,
அரும் போகம் செய்யும்
பொருளே,
பொருள் முடிக்கும் போகமே,
அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி
ஒளி வெளி ஆகி இருக்கும்
உந்தன்
அருள் ஏது!-
அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே! -
அம்பிகை,
நம் கைப்பொருளாக இருக்கிறாள். அந்தப் பொருளால் வரும் போகமாகவும் அவளே இருக்கிறாள்.
போகம் அனுபவித்ததனால் வரும் மருளாகவும்,
மயக்கமாகவும்கூட இருப்பது அவள்தான்!
அந்த மருளிலே, மயக்கத்திலே ஈடுபட்டு முடித்து, வரும் தெளிவாகவும் இருப்பது அவளே!
இப்படி,
பொருளாகவும், பொருளினால் வரும் போகமாகவும்,
போகத்தினால் வரும் மருளாகவும், மருளின் முடிவில் வரும் தெளிவாகவும்,
இப்படி எல்லாமாகவும் விளங்குவது, நமது அம்மையேதான்!
அந்த அம்பிகைதான்,
பட்டரின் மனத்து இருள் அனைத்தையும் போக்கி,
ஒளி வெள்ளமாக ஆக்கியவள்.
அப்படி ஒளி வெள்ளமாக பட்டரின் மனத்தினை மாற்றி அமைத்த அந்த அம்பிகையின் அருளுக்குக் காரணம் ஏது?
ஒன்றும் தெரியவில்லையே என்று வியக்கிறார் பட்டர்.
Comments
Post a Comment