ஏன் அம்பாளைப் பற்றிய இவ்வளவு பதிவுகள்.
ஏன் அம்பாளைப் பற்றிய இவ்வளவு பதிவுகள்.
காரணம் லலித சஹஸ்ரநாமம்/சௌந்தயலஹரி/அபிராமி அந்தாதி இவற்றை படிக்க படிக்க பலவிதமான அர்த்தங்கள் எமக்குள் பிறக்கிறது.
பலரின் வியாக்கியாணங்கள் அதன் அர்த்தம் பல விதமானது இருக்கிறது.
உதாரணத்திற்கு திருக்குறளை 5ம் வயத்தில் படித்து இருப்போம் அந்த வயத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்து இருப்பார்கள்.
அதே மாதிரி 8வது /10வது/12வது மற்றும் கல்லூரிகளில் ஆனால் திருக்குறள் ஒன்றே அதன் விளக்கம் வயது தகுந்தற் போல் வேறுபடும் அதை தான் அபிராமி பட்டர் கீழே உள்ளது போல் விளக்கிறார்.
அது அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல இருக்கிறது.
அபிராமி பட்டரின்
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது.
கண்ணியது உன் புகழ் -
நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்
கற்பது உன் நாமம் -
நான் எப்போதும் கற்பது உன் நாமம்
கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் -
என் மனம் கசிந்து பக்தி
பண்ணுவதோ
உன் இரு திருவடித் தாமரைகளில்
(அம்புயம் -
அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு;
அம்பு - நீர்,
ஜம் - பிறந்தது;
நீரில் பிறந்த மலர் அம்புஜம்)
கற்பது உனது நாமம் கருசி உருக்கி என்பதுப் போல் இந்த அனுபவம் எனக்குள் ஏற்படுகிறது.
ஏன் மற்ற தெய்வங்களுக்கு இந்த பெருமை இல்லையா.
அவ்வாறு இல்லை எந்த ஒரு தெய்வத்தை நாம் இருக்க பிடிக்கிறமோ.அதை இருக்க பற்ற வேண்டும் என்பதே எனது சிந்தனை.
அவ்வழியில் அம்பாளாகிய தாயை இருக்கப்பற்றினேன்.
அனைத்திற்கும் மூலம் தாய், தாயிலிருந்து தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் உதிக்கின்றது.
இதுவே உலக நியதி.
அந்த தாய் லோகமாதா #ஆதிபராசக்தி# ஆவாள்.
அவளே மூலம் அதிலிருந்து
மூம்மூர்த்திகள்,
மூம்மூர்த்திகளுக்கு
தர்மபத்தினியாக அம்பாள் சொரூபங்கள் தோன்றின என்கிறது புராணங்கள்.
அம்பாளின் பல சொரூபங்கள் நேற்றைய பதிவாக கண்டோம்.
பல மஹான்களின் அம்பாளைப் பற்றிய விளக்கங்கள்.
#பகவத்பாதாளின்சௌந்தயலஹரி#
த்ராயணம் தேவானம் த்ரி-குண-ஜனிதானாம் தவ ஷிவே
பவேத் பூஜை பூஜா தவ சரணயோர் யா விராச்சிதா |
ததா ஹி த்வத்-பதோ'த்வாஹன-மணி-பிதஸ்ய நிகதே
ஸ்திதா ஹ்யேதே ஷஷ்வன் முகுலித-கரோத்தாம்ஸ-மகுதஹ் ||
ஓ ஸ்ரீதேவி பார்வதியே!
உன் மூன்று குணங்களால் பிறந்த மூன்று தேவர்கள்.
(பிரம்மா-விஷ்ணு-சிவன்),
உன் தாமரை பாதங்களை வணங்கும்போது வணங்கப்படு கிறார்கள்.
ஏனென்றால், நீ உன் தாமரை பாதங்களை வைக்கும் ரத்தின இருக்கைக்கு அருகில்,
அவர்கள் எப்போதும் தங்கள் கிரீடங்களில் கைகளைக் கூப்பி நிற்கிறார்கள்
(உனக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்)!
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
கண்ணியது உன் புகழ் - நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்
சிவனும் சக்தியும் ஒன்று.
நாராயணண் நாராயணினும் ஒன்றே
நாராயணின் தொப்பிள் கொடியிலிருந்து தான் பிரம்மவின் தோற்றம்.
இவற்றின் மூலாதாரம் #அம்பாள்# தான்
அம்பாளின் ஒவ்வொரு நககண்ணிலிருந்து நாரயணின்
தச அவதாரங்கள் தோன்றின என்கிறது லலிதா சஹஸ்ர நாமம்.
கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை.
கைவிரல் நுனிகளால் நாராயணனது தசாவதாரங்களை தோற்றிவித்தவள்.
தனது நகங்களில் இருந்து நாராயணனின் பத்து அவதாரங்களை தோற்றுவித்தவள்.
பண்டாசூரன் தனது சர்வாஸுர அஸ்திரத்திலிருந்து இராவணன் முதலான பத்து அசுரர்களையும் தோற்றுவித்தான்.
அந்தப் பத்து அசுரர்களும் நாரயாணன் மூலம் பத்து அவதாரங்களில் கொல்லப்பட்டார்கள்.
அவளே
நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
நாயகி -
உலகனைத்துக்கும் தலைவி
நான்முகி -
நான்முகனான பிரம்மதேவரின் சக்தி சரஸ்வதி அவளே
நாராயணி -
நாராயணனின் சக்தி லெக்ஷ்மியும் அவளே
கை நளின பஞ்ச சாயகி -
தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்
சாம்பவி -
சம்புவான சிவபெருமானின் சக்தி அவளே பார்வதியும் அவளே
இவ்வாறாக பல பெருமைகளை பல மஹான்கள் வர்ணித்து உள்ளனர்.
அவளை பல பிரம்மாகள் வணங்குகின்றனர்.
அன்னையைப் போற்றுபவர்கள்
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தம்கோன்,
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன் , கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
சூரியன்,
சந்திரன்,
அக்னி தேவன்,
குபேரன்,
இந்திரன்,
நான்முகன்,
சிவபிரான்,
திருமால்,
பொதிய முனி அகத்தியர்,
வேற்படை கொண்ட முருகன், கணபதி,
மன்மதன் முதலான எண்ணற்றவர்கள் அபிராமி அன்னையைப் போற்றுவர்.
அம்பாளின் பெருமைகளால் ஈர்க்கப்பட்டு அவளைப் பற்றிய தேடுதலில் எனது முயற்சி.
அவ்வாறு தேடிக்கிடைத்தவற்றை தான் தற்போது பதிவாக இட்டு வருகிறேன்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.
Comments
Post a Comment