ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம்

 லலிதா அன்னையின் ஆயுதங்கள் ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம்


================================= 1.பாசம் ======= ஆசையின் வடிவம் பாசம்.   "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பர்.  அம்பிகையிடம் பற்றாகிய பக்தியையும்.  அவள் காலடியில் ஆசைவைத்தால் மற்ற பற்றுகளும்  ஆசையும் அறுபடும்.  அம்பிகையிடம் உண்மையான பக்தி செலுத்துவோர்க்கு நற்கதிஅடைய வழி வகுக்கும் ஆயுதம்.  #ராகஸ்வரூபபாசாட்யைநம#.  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம நாமம் ஆசையின் வடிவமான பாசத்தை இடது கையில் தாங்கி நிற்பவள்  "இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞானரூபிணம்  கிரியாசக்திமயே பாணதனுஷீ ததஜ்வலம்"  என்ற ஸ்லோகத்தின் படி   பாசம்= #இச்சாசக்தி#ஆகும்.  இந்த  இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக   மூன்று சக்திகளும் எல்லா தெய்வங்களும் இயங்க  காரண சக்திகள்.  சில புருஷ தெய்வங்களுக்கு   மூன்று சக்தியின் ஒன்றே.  சில புருஷ தெய்வங்களுக்கு   இரண்டு அம்பிகை   இம்மூன்று சக்தியாக விளங்குவர்.  (அம்பிகை என்பது அந்தந்த தெய்வங்களின் பத்னிகள்)  ஸ்ரீசாஸ்தாவிற்கு  தனி விசேஷம் ----------------------------------------------------------  "இச்சாசக்திமயீம் பூர்ணாம் கிரியாசக்தீச புஷ்களாம்  த்வயம்ச பார்ச்வயோர் தேவ்யௌ   ஞான சக்தி சக்தி மயம் ப்ரபும்"  #இச்சாசக்தி#  ஸ்ரீபூர்ணாதேவி,  #கிரியாசக்தி#  ஸ்ரீபுஷ்களாதேவி  ஸ்ரீசாஸ்தாவே   ஞானசக்தி   ரூபமாகவும் விளங்குகிறார்   என இந்த ஸ்லோகம் சொல்கிறது.  இதே கருத்தை   ஸ்ரீசுப்ரமணியருக்கு ஞானசக்தியையே   தேஹமாக கொண்டவர் என  ஸ்ரீதத்வ நிதி கூறுகிறது  பாசத்தின் அதிஷ்டான தேவதை.  ஸ்ரீஅன்னையின் பாசத்திலிருந்து   தோன்றிய   ஸ்ரீஅஸ்வாரூடாதேவி  ஸ்ரீஅம்பிகையோட  குதிரைப்படதலைவி,   குதிரையின் பெயர் #அபராஜிதம்#  அபராஜிதம் என்றால் வெல்ல  முடியாதது  "#அஸ்வாரூடாஅதிஷ்டதஅஸ்வகோடி கோடிபிராவ்ருதா#.  ஸ்ரீ அஸ்வாரூடாவின் தலைமையில் இயங்கும் கோடிக்கான குதிரைப் படைகளால் சூழப்பட்டவள் அன்னை.  ஸ்ரீ அன்னையின் பாசாயுதத்தை தியானித்தால் #மனக்குதிரை# என்று கூறப்படும் மனத்தில் தோன்றும்  தீய எண்ணங்கள், விபரீத கற்பனைகள் நீங்கி எண்ணங்களை நெறிப்படுத்தி நற்கதி தரும் பாதையில் செல்லலாம்.  2.அங்குசம் ==========  #க்ரோதாகாராங்குஶோஜ்வலா#=  குரோதத்தின் வடிவமான   அங்குசத்தை தாங்கி ப்ரகாசிப்பவள்  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்  #அங்குசம்#  என்பது யானையை அடக்கும் கருவி.  மதங்கொண்ட யானையை அங்குசம் அடக்குவது போல்.  நமது அடங்காத ஆணவத்தை               ஸ்ரீ அம்பிகை அடக்கி அருள்புரிவார்.  நாம் பாவங்களை செய்ய காரணமாக இருப்பது.  காமம், குரோதம், லோபம், மதம்,  ஆச்சர்யம்"   இவைகளின் மிகுதியால் பாவங்களை செய்து அதனால் வரும்  கர்மவினையால் துன்பப்படுகிறோம்.  #காமம்#என்றால் ஆசை அதனால் பாவங்களையும்,  துர்மோக ஆசையையும்   பாசத்தினால்  ஸ்ரீஅம்பிகை நீக்குகிறாள்.  குரோதத்தை போக்கி அதனால் வரும் பாவ கர்மவினையை     ஸ்ரீ அம்பிகை  அங்குசத்தால் நீக்கி நம்மை ஆட்கொள்கிறாள்  மூன்று சக்திகளில்   #அங்குசம்#ஞானசக்தி# ஆகும்  அங்குசத்தின் அதிஷ்டான தேவதை=   #ஸ்ரீசம்பத்கரி#  ஸ்ரீஅம்பிகையின் அங்குசத்திலிருந்து தோன்றிய சக்தி   ஸ்ரீசம்பத்கரி.   ஸ்ரீஅம்பிகையின் யானைப்பட தலைவி.  வாஹனம் யானையின் பெயர் #ரணகோலாகலம்# யானைப்படையை வழிநடத்துபவள்.  #ஸம்பத்கரிஸமாரூடஸிந்தூர வ்ரஜஸேவிதா#  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்.  ஸ்ரீசம்பத்கரியின் யானைப் படைகளால் சூழப்பட்டவள் ஸ்ரீசம்பத்கரி பெயர் விளக்கம் ---------------------------- சகல சம்பத்து மயமான விருத்திக்கு சம்பத்கரி என்று பெயர்.  ஞானம், ஞாத்ரு, ஞேயம்  முறையே   அறிவு, அறிகிறவன்,  அறிவிக்கப்படும் பொருள்.  இம்மூன்றுக்கும் #திரிபுடி#என்று   பொருள்.  இம்மூன்றினுடைய வித்யாசங்களை தெரிந்து கொண்டு.  அவைகளை சம்பந்தப்படுத்தும்  ஞான ரூபமான சித்த விருத்திக்கு   #ஸுகசம்பத்கரி# என்று பெயர்.  ஸ்ரீசம்பத்கரி தேவியை வணங்கி #குரோதங்களை# விட்டு  #ஞானம்# பெற்று சகலவித சம்பத்துடன் ஐயமின்றி வாழ்வோம்.  #ஒம்ஶ்ரீகாமாக்ஷியைநமஹ#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.