பெண் என்பவளே சக்தியின் சொரூபம்

 பெண் என்பவளே சக்தியின் சொரூபம்


.


இதைத்தான் பாரதியும் தன் கண்ட அனைத்து பெண்களையும், ஆதிபராசக்தியின் ஸ்வரூபமாக கண்டார்.


பட்டரின் பாடலும் இதுவே


ஒன்றாய் அரும்பி 


பலவாய் விரிந்து இவ்வுலகு


 எங்குமாய் நின்றாள் 


ஒரே சக்தியாய் அரும்பி, 


பல்வேறு சக்திகளாய் விரிந்து,


அவளே ஆதிபராசக்தி/,மாகமாயி/காமாக்ஷி/மீனாக்ஷி/விலாக்ஷி/அகிலாண்டேஸ்வரி/லலிதாம்பிகை/திரிபுரசுந்தரி/இராஜராஜேஸ்வரி அனைத்து சக்தியும்.


இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து நின்றாள்..


பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள். 


இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி... 


சிறியேனான என்றன்


இதயத்தில் என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள்


அவளே ஒன்றை பல ஆக்குவாள்.


எதை ஒன்றை பலவாக்குவள்.


கருவில் உள்ள குழந்தைக்கு கை,கால் மூகம்,மூக்கு மற்றும் கண்கள் போன்றவை வளர்வதற்கு தனது கருவில் சுமந்து குடும்பத்தை விருத்தி ஆக்குபவள்.


அவளே தான் அந்த குடும்பத்தின் தலைவி.


நேற்று ஒரு காணொளி அசுரனுக்கு எவ்வாறு காளி உதவினாள்.


(அரக்கர் குல தலைவன் ரம்பா ஒரு எருமையை மணம் முடித்து அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷாசுரன் ஆவான். 


ஆணவம் தலைக்கேறிய காரணத்தால் தேவர்கள் மீது அவன் படையெடுக்க அவனை துர்காதேவி வதம் செய்தாள். 


மகிஷாசுரனை அழித்ததால் துர்க்கை, மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்படுகிறாள்).


ஆதிபராசக்தியை அழிப்பதற்கு அசுரன் காளியிடம் எவ்வாறு 

வேண்டினான் என்று திருமதி.பர்வீன் சுல்தான் அவர்களின் உரை.


அதில் ஆதிபராசக்தி அவளே சகல சக்தியின் மொத்த உருவம்.


பக்தன் கேட்டால் அம்பாளால் மறுக்க முடியாது. 


ஆதிபராசக்தியை அழிக்கும் சூக்ஷ்மத்தை துர்காசுருனுக்கு காளி தெரிவிக்கிறாள்.


உன்  முன்பு அவள் தோன்றும்போது 

நீ ஆயுதம் எதுவும் எடுக்காமல்  பேசாமல் இரு,


அவ்வாறு செய்தாள் அதை தனது அவமானம் என நினைப்பாள்.


அப்போது அவளுக்கு ஆக்ரோஷம் அதிகமாகும்.


அதன் பிறகு அவளைப் பற்றி வசைமொழிப்பாடு. 


அதாவது அவளை சிறுமைப்படுத்தி பேசு


நீ என்ன அழகா,


நீ அசிங்கமாக இருக்கிறாய்.


நீ என்ன ரொம்ப பலசாலியே 


நீ கோழை 


இவ்வாறு ,


நீ வசைபாட பாட அவளது சக்தி குறைந்து மிகவும் பலவீனமாக மாறுவாள். 


அந்த சமயம் பார்த்து உனது ஆயுதத்தால் அவளை தாக்கு என்று சூக்ஷ்மத்தை கூறினாள்.


காரணம் நீ அழகி, ரொம்ப தைரியசாலி மற்றும் பலசாலி என்று அவளை போற்ற போற்ற அவளது பலம் அதிகமாகும்.


அவ்வாறு அமைந்ததே லலிதா சஹஸ்ர நாமம். 


காளி எவ்வாறு கூறினாளோ அவ்வாறு துர்காசூரன் அம்பாளை நோக்கி கூற கூற அம்பாள் பலம் குறைந்த நேரம் பார்த்து ஆயுத்தால் தாக்க முற்படும் போது.


சிவன் அம்பாள் முன் தோன்றி அம்பாளை பார்த்து


நீ தான் எனது சக்தி.  


நீ இல்லையேல் என்னாள் இயங்க இயலாது. 


நீ எவ்வளவு அழகானவள். 


நீ எவ்வாறு பலசாலி என புகழ்து கூற கூற அம்பாளின் பலம் அதிகமாகி,


துர்காசுரனை அழித்தாள் அதன் பிறகு அவள் துர்கை ஆனாள்.


இதை தான் பட்டரும் தனது அபிராமி அந்தாதியில்


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

வந்தரி சிந்துர வண்ணத்தினாள்


 #மகிடன்தலைமேல்#


#அந்தரி#நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்


கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே


மகிடன் தலைமேல் அந்தரி -


அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; 


துர்க்கையே


எனவே ஒரு குடும்பத்தின் பலமே பெண் தான். 


அவளே ஆதிபராசக்தியின் சொரூபம்.


அவளானலேயே  நமது சந்ததி தலைக்கிறது. 


அந்த சக்தி சொரூபமான பெண் போற்றி குலம் தழைக்க துணை நிற்போம் என எண்ணுவோம்.


இதை உலகிற்கு பறைசாற்ற தான் சிவன் தனது இடப்பாகத்தை கொடுத்து


 #உமயொருபாகன்# ஆனான் .


அவனே #அர்த்தநாரீஸ்வரர்# ஆவார்.


காரணம் ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதே இந்த தத்துவத்தின் சூக்ஷ்மம்.


அந்த பெண்ணே ஒவ்வொரு வீட்டிலும் சக்தியான ஆதிபராசக்தியாக திகழ்கிறாள்.


அதற்கு மேறகூறிய உதாரணங்களே சான்று.


#ஓம்நமோதுர்கையேநமஹ#.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.