நேற்றைய பதிவில் விநாயகர் காப்பு என்ற பதிவு.
காரணம் உலகே அம்மையும் அப்பனின் இணைவே..
அது எவ்வாறு உடல் அப்பன், உயிர் அன்னை,
இரண்டின் இணைவே உடலின் அசைவு.
உடலில் தனியாக மற்றும் உயிர் தனியாக இருந்தால் எந்த பிரோஜனமும் இல்லை.
இரண்டும் இணைந்தால் தான் உலகத்தின் இயக்கம்.
கணபதியின் இந்த உலகு என அழைப்பர்.
அவர் தான் முழு முதற் கடவுள் என்பதால் இந்த விநாயகர் காப்பு.
காமேஸ்வரா முகலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா.
கணேஷ் கடவுளை தன் இறைவனின் முகத்தினால் படைத்தவள் காமேஸ்வரர் .
அம்பாளை முகத்தை காமேஸ்வரர் பார்த்தவுடன் கணேசர் தோன்றினார்.
வாம பாகத் துமை
மைந்தனே உல கேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி
காரர் கணபதி நிற்க கட்டுரை யே.
உலகத்தை தமது கர்பத்தில் வைத்து படைத்தால் சகல சகல ஜீவராசிகளுக்கும் அம்பாளுக்குள் அடக்கம்.
அதனால் அவள் லோகமாதாவானாள்.
உலகு என்பது கணபதி என்பதால் உலகில் தோன்றிய மண்ணை வைத்து பிள்ளையார் செய்து கணபதி விஜர்சனம் என்று நீரில் பிள்ளையாரை கரைபத்தின் தாத்பர்யம்.
அதில் தோன்றிய முதல் தாவரம்.
பூல், அதை அவருக்கு அருகம்பூல் மாலையாக அணிவிக்கிறோம்.
புல்லிலிருந்து மனிதன் தோன்றினான்.
இதைதான் திருவாசம் தெரிவிக்கிறது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"
இங்கே நாம் ஒரு செல் அமீபாவிலிருந்து மனிதனாவது
வரை உள்ள பரிணாம வளர்ச்சியை சொல்கிறார் மணிவாசகர்!
கல்லாய் - புல்லாய் - பூடாய்
- மரமாய் - புழுவாய் - பாம்பாய் - பல்விருகமாய் - பறவையாய் - பேயாய் - கணங்களாய்
- வல்லசுரராய் - தேவராய் - மனிதராய் - முனிவராய் இப்படியே நம் பிறப்பு
எண்ணிலா பிறப்பாம் !
அவரவர் கர்ம வினைக்கேற்ப பிறப்பு எண்ணிலா பிறப்பாம்!
அவரவர் கர்ம
வினைக்கேற்ப பிறப்பு மாற்றி மாற்றியும் அமைந்து விடும்!
அதுவே விதி! "
தாவர சங்கமம் " என பிறப்பு நிலையை ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ளதை
குறிப்பிடுகிறார்!
விஞ்ஞானம் பேசும் அறிவில்லாதவர்கள் குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்கிறார்கள்!
மெய்ஞ்ஞானம் சொல்வது ஓரறிவு தொடங்கி ஆறறிவு மனிதனாகி பின் அவரவர் வினைக்கேற்ப பிறப்பு அமைகிறது!
அது வினைக்கேற்ப
எப்படி வேண்டுமானாலும் அமையலாம்!
இப்படி எல்லா பிறப்பும் பிறந்து பிறந்து நொந்து போனேனே இறைவா எம் பெருமானே இனியாவது பிறவா நெறி தந்து என்னை இரட்சிப்பாய் என வேண்டுகிறார் மணிவாசகர்!
புத்தர், தான் ஒரு செல் அமீபாவாக இருந்ததை உணர்கிறேன் என்கிறார்!
மாணிக்கவாசகர் சொல்வது சரிதான்! விஞ்ஞானிகள் சொல்வது போல, நான் குரங்கிலிருந்து
பிறந்தேன் எனக் கூறவில்லை!
விஞ்ஞானம் நாளுக்குநாள் மாறுவது! அறிவில்லாதவர் கூற்று,
ஒரு வரையறைக்கு உட்பட்டது! மெய்ஞ்ஞானம் - பரிபூரணமானது!
தன்னை அறிந்து பின் இறைவனை உணர்ந்த ஞானிகள் கூறுவது! பரிபூரண - தெளிந்த அறிவே
மெய்ஞ்ஞானம் தருகின்றது!.
அவரு தன்னை உணர்ந்த பட்டரின் வாயால் அம்பாள் உலகறிய செய்தது தான் அபிராமி அந்தாதி அருமருந்து சம்சாரசஹாரத்தில் தத்தளிபவனுக்கு.
#ஓம்மஹாகணபதையேநமஹ#.
Comments
Post a Comment