லலிதா அன்னையின் ஆயுதங்கள்

 லலிதா அன்னையின் ஆயுதங்கள்


ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம்.


பகுதி 2.


1.பாசம்

2.அங்குசம்


மற்ற இரு ஆயுதங்கள்


3 .புஷ்பபானம்

==============


சப்தம்,

ஸ்பரிசம்,

ரஸம்,

ரூபம்,

கந்தம் 


என்ற பஞ்ச தன்மாத்திரைகளே ஸ்ரீஅன்னையின் புஷ்ப பானம்.


புஷ்பபானத்தின் அதிஷ்டான தேவதை ஸ்ரீ வாராஹி அம்பிகையின் 


புஷ்ப பானத்திலிருந்து தோன்றிய அன்னை ஸ்ரீவாராஹி. 


அன்னையின் சதுரங்க படையின் தலைவி.. 


#க்ரியாசக்தி#யின் வடிவம்.


ஸ்ரீலலிதா அன்னை தன் புருவ நெறிப்பிலிருந்து ஒரு தண்டத்தை உருவாக்கி ஸ்ரீவாராஹி தேவிக்கு கொடுத்தாள்.


அதனால் #தண்டநாதா# என்ற பட்டம் ஸ்ரீவாராஹி தேவிக்கு வந்தது.


கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் நமக்கு தெரியாது.


#,மஹாபாவங்களைசெய்யதூண்டுவதுகோபம்#.


"க்ருத்தோ ஹன்யாத் குரூன்னபி" இந்த வாக்யத்திற்கு அர்த்தம் சொல்ல விரும்பவில்லை.


ஏனென்றால் கோபத்தினால் செய்யபடும் இப்பாவத்திற்கு உலகம் அழியும் வரை நரக வாசத்தை தருவது. 


மனதால் கூட நினைக்க கூடாத பாவம்.


எல்லா பிராணிகளை  விட வராகத்திற்கு பலம் ஜாஸ்தி.


அதனால் இந்த ரூபம் அன்னைக்கு.


கோபத்தை அடக்குவதற்கும்  


சத்ரு ஜெயம் ஏற்பட ஸ்ரீவாராஹி அன்னையை வணங்குதல் வேண்டும்.


சத்ரு என்பது மனித எதிரிகள் மட்டும் அல்ல நாம் செய்த பாவ கர்மவினையே  நமக்கு  உண்மையான சத்ரு.


அதனால் எதிரிகள் உருவாகின்றனர்.


" பூர்வ ஜன்ப க்ருதம் பாபம் சத்ரு ரூபேன பாததே" என்கிறது சாஸ்திரம்.


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில்


#கிரிசக்ரரதாரூடதண்டநாதாபுரஸ்கிருதா#


கிரி என்றால் காட்டுப்பன்றி.


காட்டு பன்றிகள் பூட்டிய ரதத்தில் வரும் தண்ட நாதாவால் வழிகாட்டவள் .


அதாவது பண்டாஸுர யுத்தத்தில் சதுரங்க படையுடன் ஸ்ரீஅன்னைக்கு முன் சென்றவள்.


#விசுக்ரப்ராணஹரணவாராஹிவீர்யநந்திதா#.


விசுக்ரனை கொன்ற வாராஹியின் வீர்யத்தை மெச்சுபவள் அன்னை ஸ்ரீலலிதா தேவி என்கிறது.


விசுக்ரன் என்ற பண்டாசுரனின் தம்பிகளில் ஒருவன் .


பண்டாசுர படைத்தலைவனை அழித்தவள்.


(பண்டாசுரனின் அமைச்சர்களான ஏழு பிலாஸ்கரர் கண்களை குருடாக்கி அழித்தவள் .


அசுரன் நம்மில் உள்ள அரக்கதனம் தான் அசுரன்.


ஒன்றைப்பங்கு அக்ஷௌகினி சேனையையும் அழித்தவள் 

ஸ்ரீ வாராஹி


#தமோகுண#த்தையும்,


தீய சக்திகளையும் அழிப்பவள் ஸ்ரீவாராஹி


திருவானைக்காவல் 

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோயில் 


சக்தி பீடங்களில் ஸ்ரீவாராஹி பீடமாக போற்றப்படுகிறது.


ஸ்ரீ வாராஹி அன்னையை உபாசனை இல்லாதவர்கள் ஆலயம் சென்று வழிபடலாம்.


ஏனென்றால்  வீட்டில்  வழிபட ஆசார அனுஷ்டாங்கள்  தேவை   என்பது  பெரியோர்கள் வாக்கு.


சப்த மாதாக்களில் ஒரு மாதா அதனால் சப்த மாதா ஆலயத்திலும்  வழிபடலாம் 


 (சப்த கன்னியர்கள்வேறு)


ஸ்ரீஅன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.


4.கரும்பு வில்

--------------------------


ஞானிகள் தொழில்படுவதற்காக 

புற உலகினரால் காணப்படும்   மனமே ஸ்ரீஅன்னையின் கரும்புவில்.


ஸ்ரீஸ்யாமளா என்றால் 


பச்சை நிறத்தில் ஜ்வலிப்பவள்


ஸ்ரீ ச்யாமளா தேவி அம்பிகையின் கரும்பு வில்லிலிருந்து தோன்றியவள்.


ஸ்ரீலலிதா அன்னைக்கு ப்ரியமான  தேவி.


அன்னையால் மந்திரிணியாக நியமிக்கப்பட்டவள்                                           


ஸ்ரீலலிதா தேவி ஆக்ஞையின்படி எல்லா லோகங்களான ராஜ்யத்தை  ஆள்பவள்.


ஸ்ரீஅன்னைக்கு அடுத்த நிலையில் உள்ள தேவி.


ஸ்ரீஸ்யாமளாவின் மூன்று 

உபாங்க தேவதைகள் 


லகு மாதங்கி, 

வாக்வாதினி, 

லகுலி என்பர்


ஸ்ரீவராஹி தேவிக்கு தண்டம் அளித்தது போல் 


ஸ்ரீஅன்னை  ஸ்ரீ மந்திரிணி தேவிக்கு ஸர்வலோக அன்னையின் சாம்ராஜ்ய பரிபாலன த்திற்கு பிரதிநிதியாக  நியமித்தின்  அடையாளமாக


#முத்ரை# மோதிரத்தை  அளித்தாள்.


 ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில்


#மந்திரிணீந்யஸ்தராஜ்யதூ#=


ஸ்ரீமந்திரிணீ தேவியிடம் அரசாட்சி பொறுப்பை ஒப்படைத்தவள் அன்னை


#கேயசக்ரரதாரூடமந்திரிணிபரிஸேவிதா#


கேயம் என்றால் இசை .


ஏழு ஸ்வரங்களையும் ஏழு தட்டுகளுடைய கேய சக்ரம் என்ற மந்திரிணியின் ரதம்.


மந்திரிணி தேவியின் கேய சக்ர ரதத்திற்கு நான்கு வேதங்களும் சக்கரங்களாக உள்ளது.


சதுர்வித புருஷார்த்தங்களும்  குதிரைகளாக உள்ளது.


அந்த கேயசக்ர ரதத்தில் ஏறிய மந்திரிணியால் ஸவிக்கப்படுபவள் ஸ்ரீலலிதா தேவி

.

#மந்திரிணிஅம்பாவிரசித விஷங்கவததோஷிதா#


மந்திரிணி தேவி விஷங்கனை அழித்ததை கண்டு மகிழ்ந்தவள் அன்னை பண்டாஸுர யுத்தத்தில் பண்டாஸுரன் ருத்ரனின் அருளால் இடது தோளிலிருந்து விஷங்கனையும் வலது தோளிலிருந்து விசுக்ரனையும் படைத்து தனது சக்தியாள் போற்றினான்.


கன்ம மலத்தின் பிரதிநிதி யான  தீய செயல்கள் புரியும் விஷங்கனை அமைச்சராக்கினனான்.


கன்ம மலரூப விஷங்கனை மந்திர சக்தியான ஸ்ரீச்யாமளா என்கிற மந்திரிணி அழித்தாள்


ஸ்ரீ கதம்ப வன வாஸினி மதுரை மீனாக்ஷி அன்னை ஸ்ரீஸ்யாமளா தேவியே.


ஒரு பிரளய காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார்.


அந்த நேரத்தில் பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர் (மதங்கம் என்றால் யானை).


பிரம்மதேவரின் உத்தரவை ஏற்று மதங்க முனிவர், 


திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யம் என்ற வனத்தில் ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றியபோது இறைவனின் காட்சி கிடைத்தது. 


என்ன வரம் வேண்டும்? 


என இறைவன் கேட்டபோது,


ஆதிபராசக்தியே தன் மகளாகப் பிறந்திட வேண்டும் என்று வேண்டினார் மதங்கர். 


இறைவனும் அப்படியே வரம் தந்தார். பின்னர், 


சிவனாரின் ஆசியோடு அவர் அருளிய பஞ்சதக்ஷாரி மந்திரத்தை ஒரு சோலையில் அமர்ந்து ஜெபம் செய்தார் மதங்கர். 


அங்கே, முனிவருக்குக் காட்சி தந்த பராசக்தி. 


என் மனதின் வாக்கின் படி மந்திரிணியே உமக்கு மகளாய் பிறப்பாள் என்று வரமருளினாள்.


மதங்க முனிவரின் மகளாக தோன்றியதால் #ஸ்ரீமாதங்கி#என்று அழைக்கப்பட்டாள்


ஸ்ரீராஜமாதங்கி என போற்றப்படும் அன்னையை பூலோகம் மட்டுமில்லாமல்  


தேவலோக, மங்கைகள்,

யக்ஷ, கந்தர்வ,

கின்னர மங்கைகள் சித்தலோகவாசிகள்  தினமும் பூஜிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.


சங்கீதம்,

கல்வி,

ஞானம்,

விஞ்ஞானம்,

மேதாவிலாசம் 

ஞாபக சக்தி   

தைர்யம் 

ஆளுமை திறன் போன்ற 


எல்லாவித நன்மையை தரும் 

ஸ்ரீ ச்யாமளா அன்னையை வணங்குவோம் ஐயமின்றி வாழ்வோம்.


படித்தில் பிடித்தது


நண்பரின் பதிவு


Kadanthethi B Sivaganesan

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.