சௌந்தயலஹரி உருவான விதம் மற்றும் 100வதுஸ்லோகம்
சௌந்தயலஹரி உருவான விதம்
ஆதிசங்கரர் விஜயயாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார்.
கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம்,
பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள்,
" கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது".
இந்த இளம் வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது.
திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.
அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன.
ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார்.
மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார்.
நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை.
சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார்.
அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது.
இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார். எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார்.
அச்சமயம் அம்பாள்
"சங்கரா! நீ அழாதே!.என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது.
நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன்.
அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள் "என்றாள்.
முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்திருந்தார்.
அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே
59 ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார்.
இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி ஆகும்.
இதுவே செளந்தர்ய லஹரி பிறந்த கதை.
முதல் 41 ஸ்லோகம் ஆனந்த லஹரி என்று கூறப்படுகிறது.
இதை ஈசனே இயற்றி அன்னையை ஆனந்தத்தில்செளந்தர்யம் என்றால் அழகு, 100 பாடல்களிலும் அன்னையின் அழகும், அருளும் அற்புதமாக தாண்டவமாடுகின்றன.
செளந்தர்ய லஹரி 99 வது ஸ்லோகப்படி,
இதனை பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதிதேவியின் எல்லையில்லாத் அருளோடு, சரஸ்வதி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.
ஆடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின் அருளை பெறலாம்.
*அம்பிகையை ஆராதித்து
சகல செளபாக்கியம் அடைய,
நாம் பாராயணம்.
இன்று சௌந்தயலஹரியின் 100வது மற்றும் கடைசி ஸ்லோகம்.
சங்கரபகவத்பாதாள் நம்மை எவ்வாறு அம்பாளிடம் சரணாகதி அடையலாம் என்பதை விளக்குவது இந்த ஸ்லோகங்கள்.
கிட்டத்தட்ட 25வாரம் இந்த பணியில் என்னை ஈடுபடுத்தி என் மூலமாக மற்றவர்கள் பயன் அடையச் செய்தால் அம்பாள்.
#பகுதி100#
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு ஒப்பு நோக்க தக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
ஸகல சித்தி
All round success,freedom from dieser and accomplishments of all desires
#லலிதாசஹஸ்ரநாமம்#
#பரோமோதா#
#பசுபாஸ்விமோசிநீ#
#சௌந்தயலஹரி#.
தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது
ஸகல ஸித்தி
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம்
தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது,சூரியனுக்கு அவன் கிரணத்து அக்கினியால் தீபராதனை செய்தது போலாம்(ஸர்வசித்தி)
தாயே!
உன்னுடைய வாக்குகளால் இயற்றபட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது
கை தீவட்டிகளின் ஜ்வலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும்,
அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும் .
ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வதுப் போல இருக்கிறது.
இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆச்சார்யர் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தி னாலேயே செய்ததாகவும்,
அதில் தாம் ஒரு கௌரவமும் கொள்ளவில்லை என்ற விநயத்தை மிக அழகாகச் சொல்லிக்கிறார்.
#ஸ்வகீயை# என்கிற பதத்தை #ஸுர்யன்##சந்திரன்## ஸமுத்ரம்# ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கு பொருள் வருகிறது.
தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே சந்திரன் காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே, எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே.
இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார்.
சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்தரி, சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள், மலர்தாள் என் கருத்தனவே
சுந்தரி - அழகி
எந்தை - என் தந்தை -
சிவா பெருமான் (அபிராமி பட்டர், சிவனை தன் தந்தை என்று கூறுகிறார்)
துணைவி - மனைவி
அதாவது, அன்னை அபிராமி, பேரழகு கொண்டவள்.
அவள் என் தந்தை சிவனின் மனைவி.
எனது பாசத்தொடர்கள் அனைத்தையும் வந்து அரித்து விடுவாள் -
அரித்து என்றால், அழித்து என்று பொருள் கொள்ள வேண்டும்.
சிந்தூர நிறத்தினாள்.
அகந்தை நிறைந்த மகிடனின் (மஹிஷாசுரன்) தலை மேல் நின்று, அவனை (அவன் கர்வத்தை) அழித்தவள்.
நீல நிற சரீரம் கொண்டவள். அதனால் நீலி என்று அழைக்கப்பெற்றவள்.
அழிவே இல்லாத கன்னிகை (கன்னியா குமரி அம்மன்).
பிரம்ம கபாலத்தை தன் மலர்க்கரங்களில் ஏந்தியவள்.
(பரம சிவன், பிரம்மனின் கர்வத்தை அழிப்பதற்காக, பிரம்மனின் 5 தலைகளில், ஒரு தலையை கொய்தார்.
அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தால், அந்த கபாலம், அவர் கையை விட்டு வெளி வராமல், சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது.
அம்பாள் காசியில் அன்னபூரணியாக அந்த கபாலத்தில் அன்னம் இட்ட பிறகு, சிவனின் கையை விட்டு வெளிவந்தது.
அதை அம்பாள் தன் கையில் ஏந்தி தன்னுள் சேர்த்துக்கொண்டாள்.)
அவளது மலர்த்தாளே (பாதங்கள்) என்றும் என் சிந்தையில் இருக்கும்.
ஆலயங்களில், துர்கை, மகிடன் தலை மேல் நிற்பதை காணலாம்.
Comments
Post a Comment