மாயா உலகத்தில் அனைத்தும் மாயை

 எது மாயை என்பதற்கு மற்றொரு விளக்கம் வேந்தாந்ததிலிருந்து.


மாயை என்பது வேதாந்தத்தில் முக்கியமாகக் கருதப்படும் விடயமாகும்.


சங்கர வேதாந்தம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் #மாயை# முக்கியமாகக் கருதப்படுகிறது.


மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கி செல்வதே #ஆன்மீகம்# என்று சொல்லப்படுகிறது.


ஆன்மீகம் என்பது ஆன்மாவை மிகைப்படுத்தல் என பொருள்.


அது எவ்வாறு இருளாகிய மாயையை நீக்கி உள்ளே இருக்கும் பரம் பொருளை உணர்த்துதல்.


எது மாயை? 


எது ஞானம்? என்பது முதலில் தெரிந்தால்தானே ஞானத்தை நோக்கி செல்வது சாத்தியமாகும்.


மாயை வயம் நின்று செய்யும் 

உலக வாழ்வு மாய வாழ்க்கை எனப்படுதற்கும் இதுவே காரணமாகும்.


மாயா வாழ்க்கையின் தொடர்பு விலகுதற்கு #இறைவன்திருவருள்# தொடர்பு பெறவேண்டும்.


அத்வைதிகளின் கருத்துப்படி பிரம்மத்தை மறைத்து,


நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை. 


எது நிலையில்லாதது இந்த உடல் எது நிலையானது உள்ளே இருக்கும் ஆன்மா.


மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும்.


எது இல்லை என நினைக்கிறோமோ அது இருக்கு எனவும்


எது இருக்கு என நினைக்கிறோமோ அது இல்லை என உணர்த்துவது மாயை.


சகல சம்பத்து மயமான விருத்திக்கு சம்பத்கரி என்று பெயர்.


ஞானம்,ஞாத்ரு,ஞேயம் 


முறையே 


அறிவு,அறிகிறவன், அறிவிக்கப்படும் பொருள் இம்மூன்றுக்கும் திரிபுடி என்று பொருள்.


ஞானம்   அறிவு

ஞாத்ரு   அறிகிறவன்

ஞேயம்.  அறியபடும் பொருள் அம்பாள்.


கேவல ஞானம் அல்லது கைவல்யா ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது, 


இது ஜைனத்தில் சர்வ அறிவைக் குறிக்கிறது. 


முழுமையான புரிதல் அல்லது உயர்ந்த ஞானம் என்று தோராயமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


கேவல ஞானம் அனைத்து ஆத்மாக்களின் உள்ளார்ந்த குணம் என்று நம்பப்படுகிறது.  


இந்த குணம் ஆன்மாவைச் சுற்றியுள்ள கர்ம துகள்களால் மறைக்கப்படுகிறது.


உதாரணம்


ஒரு விளக்கின் ஓளியை அரங்கில் உள்ள பத்து பேரிடம் கொடுத்து அவர்கள் என்ன காண்கிறார்கள் என்பதை பதியச் சொன்னாள்.


ஒவ்வொருவரின் பதிவு ஒரே மாதிரி இருக்குமா என வினாவினாள் அது சந்தேகமே.


காரணம் அவர்களின் ஞானத்தை பொருத்து அவர்கள் என்ன கண்டனரோ அதை பதிவர்.


அதற்காக என்னுடைய கருத்து தான் உன்னுடைய கருத்து தவறு உன கூற இயலாது.


அவர்கள் கண்ணோட்டத்தில் அது சரி நமது கண்ணோட்டத்தில் இது சரி.


இந்த பார்வையில் இதை சீர்தூக்கி பார்ப்பதே கைவல்ய ஞானம் என்கிறார்கள் ஜைனர்கள்.


அதையே அவர்கள் உயரிய ஞானம் என எண்ணுகிறார்கள்.


(அதுவே தமிழில், மாயம் என்பது தெளிவில்லாமை, குழப்பம், மறைந்து போகும் தன்மை என்ற பலப் பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது.)


Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.