Posts

Showing posts from September, 2025

நவதுர்க்கை (தேவநாகரி)

Image
 நவதுர்க்கை (தேவநாகரி) :नवदुर्गा) என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமஸ்கிருதத்தில் '#நவ#என்றால் ஒன்பது என பொருள்படும். #வேதங்கள்# #துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.  அவை சைலபுத்ரி, பிரமசாரிணி,  சந்திரகாண்டா, கூஷ்மாண்டா,  ஸ்கந்தமாதா,  காத்யாயினி,  காளராத்திரி,  மகாகௌரி,  சித்திதாத்திரி என அன்னை  ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.  இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர்.  இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம். 01.#சைலபுத்ரி (Shailaputri),  என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும்.  இவர், இந்து தெய்வமான துர்காவின் வெளிப்பாடாக அறியப்படுகிறார். இந்த வடிவம், #நவராத்திரியின்முதல் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் வடிவங்களில் ஒன்றாக உள்ளது இவர், #சதிபவானிபார்வதி அல்லது #ஹேமாவதி என்றும் அழைக்கப் படுகிறார்.  தாய் சைலபுத்ரி என்பது அன்னை இயற்கையின் முழுமையான வடிவம் ஆகும் 02.பிரம்மச்சாரின...

மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும்

Image
 நேற்றைய பதிவில் பஞ்ச தசிமந்திரம் மற்றும் மூன்று கூடங்களைக் கண்டோம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் உள்ள தொடர்பு என்ன என்ற பதிவைக் காணாலாம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் என்பது  இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் குறிக்கிறது.  இச்சை என்பது விருப்பம் அல்லது லட்சியம், ஞானம் என்பது அறிவு, கிரியா என்பது செயலில் ஈடுபடும் திறன், இந்த மூன்று சக்திகளும் மனிதர்களுக்கு இன்றியமையாதவை.  மூன்று சக்திகள் விளக்கம் இச்சா சக்தி ( इच्छा शक्ति ):  இது நமது விருப்பங்கள், லட்சியங்கள், மற்றும் குறிக்கோள்களை உள்ளடக்கியது. நாம் எதையாவது விரும்பும் போது அல்லது அடைய வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சக்தி செயல்படுகிறது. ஞான சக்தி ( ज्ञान शक्ति ):  இது அறிவையும், உணர்வையும் குறிக்கிறது. சரியான புரிதலுக்கும், விவேகத்திற்கும் இது அவசியம். கிரியா சக்தி ( क्रिया शक्ति ):  இது செயலில் ஈடுபடும் திறனைக் குறிக்கிறது. திட்டமிட்ட இலக்கை அடைய தேவையான செயல்களைச் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் இந்த சக்தி துணை புரிகிறது. இந்த மூன்று சக்திகளும...

#அபிராமிஅந்தாதிபாடல்-50

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-50 சகலும் அவளே! அவள் என்றாள் எவள் அவளே ஆதிபராசக்தி அவளின் பலசொரூபங்களை பட்டர் இங்கு விவரிக்கிறார். அவை நாயகி  நான்முகி நாராயணி  கை நளின  பஞ்சசாயகி  சாம்பவி  சங்கரி  சாமளை சாதி நச்சு வாயாகி மாலினி  வாராகி  சூலினி  மாதங்கி  என்று ஆயகியாதி உடையாள்  சரணம் அரண் நமக்கே பொருள் நாயகி - உலகனைத்துக்கும் தலைவி அவளே அன்னை ஆதிபராசக்தி நான்முகி -  நான்முகனான பிரம்மதேவரின் சக்தி அவளே சரஸ்வதி நாராயணி -  நாராயணனின் சக்தி லெக்ஷ்மியும் அவளே கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள் அவளே லலிதா சாம்பவி -  சம்புவான சிவபெருமானின் சக்தி  அவளே மலைமகள் சங்கரி - சங்கரனின் மனைவி இன்பம் அருள்பவள் சாமளை -  பச்சை வண்ணமுடையவள் அவளே மாதாங்கி மற்றும் மீனாக்ஷி சாதி நச்சு வாய் அகி -  கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள் அவளே காளி மாலினி -  பலவிதமான மாலைகளை அணிந்தவள்  வாராகி -  உலகங்கள் காக்கும் வராக ரூபிணி வராஹத்தின் பெண் சொரூபம் சூலினி -  திரிசூலம் ...

நவராத்திரி மேன்மை

Image
 நவராத்திரி-4 மஹாபெரியவா தனது பக்தைக்கு நவராத்திரி மேன்மை யைச் சொல்லி அருளிய கதை. நவராத்ரி பரிசு ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை ஒடனே எங்கிட்ட அனுப்பு…” கனவு கலைந்து திடுக்கிட்டு நெஞ்சு படபடக்க எழுந்து உட்கார்ந்தவள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள். “ரமணி….கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம் நவராத்ரி கொலு ஏன் வைக்கிறதில்லேன்னு கேக்கறா.ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றா டா!..” ‘பெரியவா இப்போ எங்கியோ வடக்கேலேன்னா இருக்கார். அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே? ஏதோ கனவு வந்திருக்கு உனக்கு .” ” நான் இதை வெறும் கனவா நினைக்கலேடா ரமணி. பெரியவா கூப்டிருக்கா? கட்டளை. கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்டா ….” விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பவர்கள். “அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளன்னிக்கி நார்த் இண்டியா டூர் போறோம். திரும்பி வர எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்ட...

அபிராமிஅந்தாதிபாடல்-49

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-49 குரம்பை அடுத்து  குடிபுக்க ஆவி  வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து  அப்போது  வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த  அரிவையர் சூழ  வந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்து  இசை வடிவாய்  நின்ற நாயகியே பகவான் நாமத்தை எப்போது சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு பட்டரின் அருமையான விளக்கம். நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே!  அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க,  நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன்.  அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்!  எனக்கு அருள் புரிவாய்! குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி - உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர் வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது - வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது வளைக்கை அமைத்து -  வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து -  அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து அஞ்சல் என்பாய் -  அஞ்சா...

நவராத்திரி-1

Image
 நாளை முதல் அடுத்த பத்து நாட்களுக்கு ஊரங்கும் விழா கோலம் பூண்டு காணப்படும். அதுவும் மைலாப்பூர்/மாம்பலம்/நங்கநல்லூர் போன்ற இடங்களில் கேட்கவா  வேண்டாம். ஒரே கன்னியா பெண்கள் மற்றும் சுங்கமலிகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும் இடங்கள் இவை. கடந்த பல தினங்களாக மேமாம்பலம் ஆரியாகௌடா வீதியில் எங்கும் நவராத்திரி கொலுபொம்மைமயம். அந்த நவராத்திரியின் தாத்பர்யம் என்ன என்பதை தற்போது பதிவாக காணலாம். நவராத்திரி ஸ்பெஷல்:  கொலுவை ஏன் .. பெரியவாளின்  (காஞ்சி மகா பெரியவா)  பார்வையில் கொலு என்பது நவராத்திரியின் முக்கிய அம்சமாகும்.  அவர் கொலுவை வைப்பதையும், அதில் பல தெய்வங்கள்,  மகா பெரியவாளின் அவதாரங்கள் மற்றும் சாஸ்திரங்கள் பற்றிய பொம்மைகளை வைப்பதையும் வலியுறுத்தினார்.  கொலு வைப்பது என்பது நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாகும். இது வீடுகளைக் கோலாகலமாக்கி, தர்மத்தைப் போற்றும் விதமாக அமைகிறது.  கொலுவின் சிறப்பு: மகா பெரியவாளின் அருளாட்சி: கொலு வைப்பதன் மூலம் தேவி ஆதிபராசக்தி அருளாட்சி செய்கிறாள் என்று நம்பப்படுகிறது.  இந்த வழிபாட்டு முறையை பலரும் பின்பற்றுகின்ற...

#அபிராமிஅந்தாதிபாடல்-48.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-48. சுடரும் கலைமதி துன்றும்  சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும் பரிமளப்  பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில இடரும் தவிர்த்து  இமைப்போது  இருப்பார் பின்னும்  எய்துவரோ குடரும் கொழுவும்  குருதியும் தோயும்  குரம்பையிலே பலன்: உடல் மீதுள்ள பற்று விலகும் பொருள்: சுடரும் கலைமதி - ஒளிவீசுகின்ற பிறை சந்திரனை, சடைமுடிக் குன்றில் - தன் குன்றினை ஒத்த சடைமுடியில் அணிந்தவரான சிவபெருமானின் நெஞ்சில் நிறைந்த, பரிமள பச்சைக்கொடி - வாசமிகுந்த பச்சைக்கொடியே,உன்னை தன் நெஞ்சில் வைத்து, எப்போதும் வழிபடும் அடியார்கள், துன்பத்தை தவிர்த்து, மீண்டும் குருதி, தோல், குடல் நிறைந்த இப்பிறவியை பெறாமல் என்றும் மகிழ்வாய் இருப்பார்கள். சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் -  சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு குன்று போன்ற சிவபெருமானின் மேல் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் -  ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை பதித்து நெஞ்சில் -  மனத்தில் நிலையாகக் கொண்டு இடரும் தவிர்த்து -  இன்ப துன்பங்க...

#பஞ்சதசிமந்திரம்#

Image
 #பஞ்சதசிமந்திரம்# பஞ்சதசி மந்திரம் லலிதா அம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி மந்திரமாகும்.  பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டதல்ல. உதாரணமாக #ஸ#என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம்,  ஹ்ரீம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் உண்டு. உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால்  அது ஓம் என்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது,  அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற தன்மையினையும் தரும். பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்படும். பஞ்சதசி என்றால் பதினைந்து என்று பொருள்.  இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசி எனப்படுகிறது. பஞ்சதசி மந்திரம் பீஜங்களை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இந்த மூன்று கூடங்களும் முறையே வாக்ப கூடம்,  காமராஜ கூடம்,  சக்தி கூடம்  எனப்படும். வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும்,  காமராஜ கூடம் கழுத்தி தொடக்கம் இடை வரையிலான பக...

காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ-3

Image
 #காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ ஒரு குரு வந்து இதோ பாரப்பா…  நீ என்ன தேடுகின்றாய்.  வாழ்க்கை என்றால் என்ன… என்று தொடங்கி கோயில், வழிபாடு, துதிகள், மந்திர உபதேசம், வழிபாடு, உபாசனை என்று பெரிய பட்டியல் போட்டு சித்தாந்தம், வேதாந்தம் என்று மேலே மேலே சென்று மனதை நன்கு பக்குவப்படுத்திய பிறகு இவையெல்லாம் #அபரஞானம் என்று சொல்வார்.  இவற்றிற்கும் மேலாக அந்த பரஞானத்தை அப்படியே அறிந்து கொள்ள வேண்டுமென்றும் சொல்வார். இது பாரத தேசத்தில் உள்ள எல்லாவிட சம்பிரதாயத்திலும் இருக்கும் விஷயமாகும்.  இந்த அபரஞானத்தை ஒதுக்கவும் முடியாது. ஒதுக்கவும் கூடாது.  பாதை என்னவென்று தெரிந்தால் பாதையே இல்லை என்று தெரியவும் ஒரு பக்குவத்தை பெறமுடியும். எனவே,  இந்த இடத்தில் அபரஞானமும் முக்கியமே ஆகும்.  இல்லையெனில் ஞானம் என்கிற சொல் கூட நம் காதில் விழாது. பிரம்ம என்று ஒன்று இருப்பதையே வேதங்கள் போன்ற நூல்கள்தான் சுட்டிக் காட்டுகின்றன.  ஏன் சைவம் எனில் தேவார திருவாசகங்கள்…  வைணவம் எனில் பாகவதம், பாசுரங்கள்… என்று எல்லா சம்பிரதாயங்களிலும் சுட்டிக் காட்டுகின்ற விஷயங்கள் நேரடியா...

காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ

Image
 #காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ இங்கு காமேஸ்வரர் அம்பிகையின் மீது பிரேமையை செலுத்துகிறார் என்பதற்கு என்ன அர்த்தம் எனில், காமேஸ்வரருடைய சுத்தமான ஞான சொரூபம்தான் அம்பாள் ரூபத்தில் வருகிறது.  இப்போது அவர் பிரேமை அம்பிகையிடம் வருகின்றது. அம்பிகையானவள் இதை பெற்றுக் கொண்டது எதற்காக எனில்,  இந்த ஜீவாத்மாக்களை தன்னுடைய குழந்தைகளாக நினைத்து,  இந்த ஒட்டுமொத்த ஜீவாத்மாக்களை ஞான சொரூபமாக உள்ள காமேஸ்வரரிடம் சேர்க்க வேண்டியதுதான் வேலை. காமேஸ்வரரிடம் இருப்பது சுத்தமான ஞானம் என்று வைத்துக் கொண்டால், அம்பிகையின் பிரேமை இரட்டிப்பாகின்றது.  எப்படி இரண்டு மடங்காக மாறுகின்றது எனில்,  ஒன்று பர ஞானம்.  இன்னொன்று அபர ஞானம்.  இந்த பர ஞானமும் அபர ஞானமும்தான் அம்பிகையினுடைய அம்பாளுடைய இரண்டு ஸ்தனங்களாக இருக்கின்றன. இப்போது பர ஞானம்.  அபர ஞானம் என்பதன் விளக்கத்தை கொஞ்சம் பார்ப்போமா… இதற்கான ஒரு விளக்கம் முண்டகோ உபநிஷத்தில் இருக்கின்றது.  ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், முதலான வேதங்களும்…  அந்த வேதங்களுக்குரிய அங்கங்கங்கள், ஆறு தரிசனங்கள், ...

#அபிராமிஅந்தாதிபாடல்-46#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-46# வெறுக்கும் தகைமைகள்  செய்யினும்  தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே  புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்  இடப்பாகம் கலந்த பொன்னே மறுக்கும் தகைமைகள்  செய்யினும் யானுன்னை  வாழ்த்துவனே பொருள்: விடத்தை உண்டதால், கருத்த நிறமான கழுத்தை உடைய நீலகண்டனின் இடப்பக்கத்தில் கலந்த பொன் போன்றவளே,  இங்கு அம்மையை அப்பனையும் அழகாக விவரிக்கிறார். உலக நம்மைக்காக விஷயத்தை உண்டதால் அவர் நீலகண்டன் ஆனார். அவரை காக்கும் பொருட்டு கண்டத்தில் விஷயத்தை நிறுத்தியதால் அவரது கண்டம் நீலமானது. அவரது வாமபாகத்தை அம்பாள் கேட்டுப் பெற்றாள். அதனால் வாமபாகத்தை உடையவள். தகாத செயல்களை அறிவிற் சிறியோர்கள் செய்தால்,  அதை ஞானிகள் பொறுத்து அருள்வது வழக்கமான ஒன்று.  அது ஒன்றும் புதியது அல்ல. அதுபோல உன் அடியவனாகிய நான், உனக்கு விருப்பம் இல்லாத செயல்களில் ஈடுபட்டாலும், இறுதியில் உன்னை சரணடைந்தால், பகைவனை அரவணைப்பது பகவானின் செயல். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே"  என்பது மகாகவி பாரதியாரின் பாடல் வரியாகும்.  இது ஒருவரை ஒருவர் வெறு...

#அபிராமிஅந்தாதிபாடல்45#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்45# பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே. தொண்டு செய்யாது  நின் பாதம் தொழாது  துணிந்து இச்சையே பண்டு செய்தார்  உளரோ இலரோ  அப்பரிசு அடியேன் கண்டு செய்தால்  அது கைதவமோ  அன்றிச் செய்தவமோ மிண்டு செய்தாலும்  பொறுக்கை நன்றே  பின் வெறுக்கை அன்றே தொண்டு செய்யாது -  உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல் பொருள்:- அன்னை அபிராமியே,  உனக்கு தொண்டு செய்யாமலும், உன் பாதம் தொழாமலும் இருந்துக்கொண்டு,  தன் விருப்பப்படியே கடமைகளை மட்டுமே செய்து வாழ்ந்த ஞானிகள் இருந்தனர்.  அவ்வாறு நானும் இருந்தால் அது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் என்னை வெறுக்காது பொறுத்தருள வேண்டும். இங்கு பூர்வ மீமாம்சர்களை குறிக்கிறார்.  கர்மமே பிரம்மம் என்ற நம்பிக்கையினை உடையவர்கள் பூர்வ மீமாம்சர்கள்.  குமரில பட்டர், மண்டன மிஸ்ரர் போன்றோர்.  பிறகு, ஆதி சங்கரரால் வாதத்தில் வெல்லப்பட்டு கர்மம், பக்தி, ஞானம் இம்மூன்றுமே அவசியம். கர்மம் மட்டும் போதாது என்று அத்வைத சித்தாந்தத்தினை ஒப்புக் கொண்டனர்....

பரஞானம் மற்றும் அபரஞானம்

Image
 பரஞானம் மற்றும் அபரஞானம் அம்பாளின் ஸ்தனங்கள் என்பது,  உலக சம்பந்தமான அறிவைத் தரும் "அபர ஞானத்தையும்", மெய்ப்பொருளை (பிரம்மத்தை) உணர்த்தும் "பர ஞானத்தையும்" குறிக்கின்றன.  உலகைப் பற்றிய ஞானமான அபரஞானம் ஐம்பொறிகள் மூலமும், வேத, ஆகம, விஞ்ஞான அறிவு மூலமும் பெறப்படுகிறது.  பரஞானம் என்பது மெய்ப் பொருளையே நேரடியாக உணரும் ஞானமாகும்.  அபர ஞானம் (கீழ் ஞானம்)  உலக விஷயங்களைப் பற்றிய அறிவாகும். ஐம்பொறிகளின் மூலம் புற உலகை உணர்ந்து பெறப்படும் ஞானம். வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் போன்றவை இந்த ஞானத்தின் கீழ் வருபவை. பர ஞானம் (மேல் ஞானம்)  மெய்ப்பொருளை (பிரம்மத்தை) நேரடியாக உணர்ந்து கொள்ளும் ஞானமாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களில் தன்னைத்தானே உணர்ந்து அடையும் உயர்நிலை ஞானம். அம்பாள் ஸ்தனங்கள் ஏன் இவை இரண்டும்? அபர ஞானம்:  அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து உலக விஷயங்கள் தோன்றுகின்றன என்ற வகையில், இவை அபர ஞானத்தைக் குறிக்கின்றன.  பர ஞானம்:  இவை மெய்ப்பொருளை உணர்த்தும் உயர்நிலைப் பெரும் கருணையைக் குறிக்கின்றன.  அம்பாளின் கருணை:...

அபிராமிஅந்தாதி - 44

Image
 ##அபிராமிஅந்தாதி - 44 தவளே  இவள்  எங்கள் சங்கரனார்  மனை மங்கலமாம் அவளே  அவர் தமக்கு  அன்னையும் ஆயினள்   ஆகையினால் இவளே  கடவுளர் யாவர்க்கும்  மேலை  இறைவியும்  ஆம்துவளேன்  இனி ஒரு தெய்வம்  உண்டாக  மெய்த் தொண்டு செய்தே: பொருள் அபிராமி அன்னை,  பொருள்:- நம் தலைவரான சங்கரரின் (சிவனின்) இல்லத்தரசி.  அவரது இல்லத்தில் மங்களம் விளங்க வைப்பவள்.  அவளே, சிவனின் தாய். மற்றவர்களுக்கும் அன்னையே தலைவி, இறைவி.  ஆகையினால், அவளுக்கு மட்டுமே தொண்டு செய்து இன்பம் பெறுவேன்.  தொண்டு செய்யாமல் துன்பத்தில் துவள மாட்டேன் என்கிறார் அபிராமி பட்டர். அன்பரின் விளக்கவுரை:- தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் -  நமக்குத் தாயான இவளே  எங்கள் சங்கரனாரின் மனை மங்கலம் - இல்லத்திற்கு நன்மையைச் சேர்ப்பவள். பரமசிவத்துக்கு வீடு என்பது அவருடைய மனதே.  அதில் அம்பாள் வீற்றிருந்து அவரைத் தொழில்படுத்துகிறாள்.  சங்கரன் என்ற சொல்லுக்கு ஹிதத்தைச் செய்கிறவன். மகிழ்ச்சியைக் கொடுப்பவன் என்று அர்த்தம். அபிராமியும் தவமிருந...

அபிராமிஅந்தாதிபாடல்43#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்43#                                                          அன்னையின் அழகினை ரொம்ப அருமையா வர்ணனை பண்ணியிருக்கார் பட்டர்.  பரிபுரச்  சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி  இன்சொல் திரிபுரசுந்தரி  சிந்துர மேனியள்  தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை  அஞ்சக் குனி  பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி  இறைவர்  செம்பாகத்து இருந்தவளே அருஞ்சொற்பொருள். முந்திய பாடல் 42 ல் கூறியது போல, சிலம்பணிந்த சிவந்த திருவடிகளை உடையவளும், கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் உடையவளும்,  இனிய சொற்களை உரைப்பவளும், சிவந்த மேனியினை உடையவளும், தீய எண்ணம் கொண்ட வஞ்சனை நிறைந்த அரக்கன் புரனையும், அவன் இருப்பிடமான திரிபுரத்தினையும் அழித்தவரான சிவபெருமானின் இட பாகத்தில் இருப்பவளும்  அன்னை அபிராமியே! பரிபுரம்: சிலம்ப சீறடி: சிறிய அடி பொருப்பு: மலை (இங்கே மேரு மலை) சிலை: வில் குனித்தல்: வளைத்தல் எரி: நெருப்பு  ...