நவராத்திரி மேன்மை

 நவராத்திரி-4

மஹாபெரியவா தனது பக்தைக்கு நவராத்திரி மேன்மை


யைச் சொல்லி அருளிய கதை.


நவராத்ரி பரிசு


” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை ஒடனே எங்கிட்ட அனுப்பு…”


கனவு கலைந்து திடுக்கிட்டு நெஞ்சு படபடக்க எழுந்து உட்கார்ந்தவள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.


“ரமணி….கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம் நவராத்ரி கொலு ஏன் வைக்கிறதில்லேன்னு கேக்கறா.ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றா டா!..”


‘பெரியவா இப்போ எங்கியோ வடக்கேலேன்னா இருக்கார். அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே? ஏதோ கனவு வந்திருக்கு உனக்கு .”


” நான் இதை வெறும் கனவா நினைக்கலேடா ரமணி. பெரியவா கூப்டிருக்கா? கட்டளை. கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்டா ….”


விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பவர்கள்.


“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளன்னிக்கி நார்த் இண்டியா டூர் போறோம். திரும்பி வர எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்.


 …..இல்லேன்னா பாவம் நீ இதையே நம்பி இருக்கறவ, ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்பறம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சி ருக்கு. 


அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம்! சரியா?’


‘சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார். கண்ணீர்

பெருக


“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்

டார்னு தோணறது . 


இன்னிக்கி விடி காலம்பற பெரிய வா என் கனவுல வந்து நவராத்ரி கொலு வை” னு சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்.


 பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட் டார்!. பெரியவா வட தேசம் போயிருக்கா ளாம் . எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடிபக்கம் பார்த்தார்.


“வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..”

“இதோ வரேன் சித்தப்பா!…” என்று பதில் கொடுத்துக் கொண்டு ஒருவர் கீழே இறங்கி வந்தார்.


“அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸிஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக் காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவா ன். நேத்திக்கு தான் வந்தான். 


இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா. ..ரமணியை இவனோ ட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”


”பகவானே, இதுவும் மஹா பெரியவாளின் அடுத்த அனுக்ரஹமா. ரமணியை அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து…..


….என்னால் நம்பமுடியல்லையே ”

ஆனந்த கண்ணீர் விட்டாள் தர்ம கர்த்தா மனைவி.


“அது தான் பெரியவா! புரியறதா …” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊர். அங்கே பெரியவாளு டைய முகாம். வேம்புவோடு போனான் ரமணி. 


நல்ல கூட்டம்! ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’ வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி! 


இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப் படாதே. ..எனக்கு உள்ளே வேலையிருக்கு .பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நான் வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?”- வேம்பு போய்விட்டார்.


சிறுவன் ரமணி. கூட்டத்தை பார்த்தான். ,


“அடேயப்பா, எத்தனை பேர்!. இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நான் பெரியவா ளைப் பாக்கறது!” மலைப் போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவா ளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!


“சரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்”. காத்திருந்தான். ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடி சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ அவனை லேஸாக தட்டவே கண்களைத் திறந்தான்…


“நீ தானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…. யாரோ கூப்பிட்டார்கள் . மிரள மிரள விழித்தான். இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?..”


“என்னடா முழிக்கிறே? வேம்பு சொன்னான். உன்னை காட்டினான். நானும் வேம்பு மாதிரிபெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..”


கையைப் பிடித்து அவன் ரமணியை அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பெரியவா முன்னால் கொண்டு போய் நிறுத்தினான்.ஒரு க்ஷணம்! 


ரமணி துருவன் அவன் முன்னே பெரியவா தான் மஹாவிஷ்ணு ஶங்கு சக்ரதாரியாக நிற்பது போல் பிரமை. பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் அவன் இதுவரை பண்ணியதில்லை. 


கும்பலில் அம்மாவின் கையை விட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காம, ஸந்தோஷப்படாமல் அழுமே, அது போல் ரமணி ஓவென்று வாய்விட்டு அழுதான்.


“பெரியவா! என்று அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித் தான்…..


“ரமணி!….அழாதே…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…


பெரியவாளுக்கு அவன் பேர் எப்படி தெரிந்தது? அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லா விஷயமும் சொன்னான்.


“பெரியவா..எங்கப்பா அம்பாள் கோயில் தர்மகர்த்தா.. 


அம்பாள் மேலே ரொம்ப பக்தி. திடீர்னு செத்துப் போய்ட்டா. நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சா.,ஆனா அண்ணாக்கள் எல்லாம் எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா….


.மூணு அக்காக்களுக்கும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம் னு அம்மாவை துளைச்சு, பிச்சு எடுக்கறா பெரியவா.. 


அம்மா! எங்க போவா பணத்துக்கு?


எங்க வீடு மேலே பழைய கடனே 80,000 ரூபாய் இன்னும் பாக்கி இருக்கு! வித்துட்டு கடனை அடைக்கலாம் னா, கஷ்டத்ல விக்கறோம்னு தெரிஞ்சுண்டு, அடி மாட்டு வெலைக்கு 10,000 த்துக்கு விலை பேசறா! 


நான் படிப்பை நிறுத்திட் டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்.அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலேயே பெரியவா……”


பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறின ரமணியை பரிவோடு பெரியவா பார்த்தார்.


“அழாதே……


கண்ணைத் தொடச்சுக்கோ! நா ..சொல்றதக் கேளு.


இப்போல்லாம் ஒங்காத்ல நீங்க கொலு வெக்கற தில் ல. நவராத்ரி பூஜையும்    பண்றதில்ல.. அப்டித்தானே?”


“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம் னு நிரூபிச்சுட்டாரே!” என்று ஆச்சர்யத்தோடு அதிர்ந்து போனான் ரமணி.


“ஆமா…பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”


“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி,


 அண்டா குண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா நாலு பொம்மை கொலு வெச்சு,


மனஸார ஒம்போது நாளும் அம்பா ளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”


எதிரே இருந்த மூங்கில் தட்டிலிருந்து ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.


“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, 


இந்த வருஷ நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்க றது. 


நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே!


 மறுநாள் காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…”

பெரியவா அருகே இருந்து தொண்டரிடம் ஏதோ சொன்னார்.


“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! 


இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக் கோ!…”


“என்ன பெரியவா இது! 


ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோ ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா ….


இன்னிக் கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! 


இதுக்குத் தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…”


அழுகையும், ஏமாற்றமுமாக கண்கலங்க கேட்டான் ரமணி.

பெரியவா லேஸாக புன்னகைத்து விட்டு, 


பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார் .


ப்ரஸாதத்தோடும் அழுகையோடும் ரமணி வேம்புவிடம் சென்று நடந்ததை சொன்னான். “ரமணி! பெரியவாகிட்ட இப்டியா பேசறது.


”இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன் னேள்?’-ன்னு கேட்டியாமே! 


பெரியவா சொன்ன தோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப. உனக்கு இப்போ புரியாது.


சரி சரி. ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு..பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! “


“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன்.


 இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ!


 [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்கள் ) ரயில்ல ஒன்னை ஏத்திவிட வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! 


பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்…. 


பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! அவர் ஒன்னை ஒங்காத்துல கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, உடனே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”


ரமணி ஊர் வந்து சேர்ந்தான். 


போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு அதிர்ச்சி. “என்னடா ஆச்சு ரமணி? பெரியவாளைப் பாத்தியா? இல்லையா?என்ன சொன்னார்?….அம்மா…அம்மா!


பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் பெரியவா என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் கொடுத்தா. நம்மளோட கஷ்டம் எல்லாத்தை யும் அவர்கிட்ட அழுதுண்டே சொன்னேன்.


ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு,


உடனே கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…


இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமு ம் கொஞ்சமா அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணினாப் போறு ன்னுட்டார்’-ம்மா!..”


“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்னடா வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலு பொம் மைப் பொட்டியை கீழ எறக்கு,சின்ன கொலுப்படியை யும் எறக்கு… வேற என்னடா சொன்னா பெரியவா?


கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”


பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, 


நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். 


என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.


“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சது மே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

ரமணிக்கு உள்ளே ஏதோ ஒரு உறுத்தல். 


”நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை இருக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே.. 


இத்தனை நாள் பாக்கலியே. ஒரு நசுங்கின தகர பொட்டி வேறே இருந்ததே, 


அதை இறக்கலியே அதிலே என்னஇருக்கும் னு பார்த்துடு வோம்.”கிடுகிடுவென்று மறுபடியும் ஏணியைப் போட்டு, 


பரணில் ஏறி சுவற்றோரமாக. மூலையில்ஒரு நசுங்கிப்போன தகரப் பொட்டியை எடுத்து இறக்கினான்.


“அம்மா! பரண்லே இந்த இன்னொரு பொட்டியும் இருந்துது. அதிலேயும் எதாவது பொம்மை இருந்தா எடுத்து அதையும் கொலுல சேத்துக்கோ.”

திறந்தபோது பெட்டியில் பொம்மை இல்லை! 


ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது! பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தான். 


உள்ளே நாலைந்து ஓலைச் சுவடிக் கட்டுகள்! மஹா அரதப் பழஸு என பார்த்தாலே புரிந்தது.”என்னடா ரமணி இது! 


இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில உங்கப்பா சுத்தி வெச்சிருக் காருன்னா…இது ஏதோ ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”


“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத்துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”


“ஓடு! பெரியவாளிடம்!..”.

சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட் டான்! 


முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இப்போது ரமணி யிடம் இல்லை! ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும். 


பிறகு எப்படி இந்த அமைதி? தெளிவு? இது பெரியவா தந்தது. ரமணி பாக்கியசாலி.


ரமணி போனபோது , தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். சில அணுக்க தொண்டர்கள் தான் கூட இருந்தார்கள். ஜாஸ்தி கூட்டமே இல்லை! பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு பெரியவாளிடம் ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.


“தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹால்லே விஜாரிச்சியோ?. —பெரியவா.


“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரிய வா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, 


ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட விட்டு வைக்கலே. 


எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலையறேன் பெரியவா.. .அதை யாரு, 


எங்க ஒளிச்சு வெச்சிருக்காளோ இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டா ளோன்னு வேறே ரொம்ப பதட்டமா இருக்கு….எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச் சாக்கூட போறும்! 


எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடு வேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவா யில்ல பெரியவா! ஆனா, 


அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக் கூடாது……இதான் என்னோட பயம் கலந்த ப்ரார்த்தனை!”


பெரியவா எதிரே அந்த பண்டிதர் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கும் போதுதான்,


 ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான். பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,


“வாடா! கொழந்தே! வா.வா.


 நீ வருவேன்னு நான் எதிர் பார்த்தேன்” ரமணி தகரடப்பாவை பெரியவா எதிரே ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.


“பெரியவா! நீங்க சொன்னமாதிரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! மேல பரண்ல கொலுப் பொட்டி யோட, இந்த தகரடப்பாவும் இருந்துது அதிலே ஏதோ ஓலைச் சுவடி அப்பா வச்சிட்டு போயிருக்கா. .


என்னன்னு தெரியலே. அம்மா அதை உங்க கிட்டே கொடுக்கசொன்னா.”

“ம்ம்….நல்லதாச்சு போ! 


அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத் துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு!”


“.நீங்க அது என்னன்னு படிக்க வேணாமா?..”


பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை எதிரே இருந்த பண்டிதரிடம் கொடுத்தான். அவர் பக்தி ஸ்ரத் தையோடு வாங்கிக் கொண்டார். 


பெரியவா அவரிடம்

நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சு ண்டு இருந்தியே! இதான்…..அது! ” ஓ ….பெரியவா! 


என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டி யொரு கருனை வெள்ளமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல


பெரியவா!….இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……”

பண்டிதர் கண்ணீர் மல்க,


 ஓலைச்சுவடிகளை கண்ணில் ஒற்றிக்கொண்டு bag ஐ திறந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹா ப்ரபோ!


இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத் துக் கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்..


.அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்….”


”எல்லாத்தையும் கொடுத்திட்டீளே ஊருக்கு போய்ச்சேர பணம் இருக்கா,. 


நடராஜா ஸர்வீஸ் தானா? ”

இல்லே பெரியவா, 


இங்கே எனக்கு ஹெல்ப் பண்ண மனுஷா இருக்கா”


“ரமணி,இதோ பாரு! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக் கார்!


..இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப் போறது க்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! 


இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!……

“ஹா…!! பெரியவா.! நா.ரெண்டுலக்ஷ ரூவா கொண்டு வந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள்.”

அதிர்ந்தார் பண்டிதர். புன்னகைதான் பெரியவாளின் பதில்.


“சரி சரி ரமணி, ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு துணையா வேம்பு ஊருக்கு வருவார். பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!”


கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, மஹா பெரியவா ப்ரஸாதம் குடுத்தார்.


அப்புறம் என்ன. வீட்டு மேலே இருந்த 80,000 ரூபாய் கடன் அடைக்கப்பட்டு நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே,


துர்க்கை அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, 


மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் மஹா பெரியவா தானே காமாக்ஷி அம்பாள்.


வீட்டை ரிப்பேர் செயது வாசல் பக்கம் ஒரு மளிகைக் கடை வைத்து ரமணி வியாபாரம் செய்தான். நல்ல வருமானம்! நல்ல பேர்!


படித்ததில் பிடித்தது


பேசும் தெய்வம் – 


நங்கநல்லூர் J K SIVAN


மஹாபெரியவா அறுகிரஹம்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.