#பஞ்சதசிமந்திரம்#
#பஞ்சதசிமந்திரம்#
பஞ்சதசி மந்திரம் லலிதா அம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசி மந்திரமாகும்.
பீஜம் என்பது தனியே ஒரு சமஸ்க்ருத எழுத்தினை மட்டும் கொண்டதல்ல.
உதாரணமாக #ஸ#என்பது ஒரு சமஸ்க்ருத எழுத்தினைக்கொண்ட பீஜம்,
ஹ்ரீம் என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம். சமஸ்க்ருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் உண்டு.
உதரணமாக முதலாவது எழுத்தான் "அ" வினை எடுத்துக்கொண்டால்
அது ஓம் என்ற பிரணவத்தினை தோற்றுவிப்பது,
அது ஒருமைப்படுத்தலையும், அழிவற்ற தன்மையினையும் தரும்.
பீஜங்க்களின் அர்த்தம் அது பாவிக்கப்படும் இடத்தினை சார்ந்து பொருள் கொள்ளப்படும்.
பஞ்சதசி என்றால் பதினைந்து என்று பொருள்.
இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது,
அதனால் பஞ்சதசி எனப்படுகிறது.
பஞ்சதசி மந்திரம் பீஜங்களை முன்று பகுதிகளாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு வரியும் கூடம் எனப்படும், இந்த மூன்று கூடங்களும் முறையே
வாக்ப கூடம்,
காமராஜ கூடம்,
சக்தி கூடம்
எனப்படும்.
வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும்,
காமராஜ கூடம் கழுத்தி தொடக்கம் இடை வரையிலான பகுதியையும்,
இடைக்கு கீழ்பகுதி சக்தி கூடத்தினையும் குறிக்கும்.
இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப் படிருக்கின்றது.
இந்தக் காரணத்தினால் தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.
இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும்
கீழ் நோக்கிய கோணம்
தேவியின் யோனியினை குறிக்கும்.
இதுவே பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலம்.
இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம்,
காமராஜ கூடம் மேற்புறம்,
சக்தி கூடம் முக்கோணத்தின்
இடது புறம் காணப்படும்.
வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது;
க - ஏ - ஈ - ல - ஹ்ரீம்
காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது;
ஹ - ஸ - க - ஹ - ல - ஹ்ரீம்
சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது;
ஸ - க - ல - ஹ்ரீம்.
ஆக மொத்தம் Disbursement கொண்டது தான் பஞ்ச தசி மந்திரம் ஆகும்.
இவற்றில் கூறிய மூன்று கூடங்களை நாளை காணலாம்.
Comments
Post a Comment