#அபிராமிஅந்தாதிபாடல்-46#

 #அபிராமிஅந்தாதிபாடல்-46#



வெறுக்கும் தகைமைகள் 


செய்யினும் 


தம் அடியாரை மிக்கோர்


பொறுக்கும் தகைமை


புதியது அன்றே 


புது நஞ்சை உண்டு


கறுக்கும் திருமிடற்றான் 


இடப்பாகம் கலந்த பொன்னே


மறுக்கும் தகைமைகள் 


செய்யினும் யானுன்னை


 வாழ்த்துவனே


பொருள்:


விடத்தை உண்டதால், கருத்த நிறமான கழுத்தை உடைய நீலகண்டனின் இடப்பக்கத்தில் கலந்த பொன் போன்றவளே, 


இங்கு அம்மையை அப்பனையும் அழகாக விவரிக்கிறார்.


உலக நம்மைக்காக விஷயத்தை உண்டதால் அவர் நீலகண்டன் ஆனார்.


அவரை காக்கும் பொருட்டு கண்டத்தில் விஷயத்தை நிறுத்தியதால் அவரது கண்டம் நீலமானது.


அவரது வாமபாகத்தை அம்பாள் கேட்டுப் பெற்றாள். அதனால் வாமபாகத்தை உடையவள்.


தகாத செயல்களை அறிவிற் சிறியோர்கள் செய்தால், 


அதை ஞானிகள் பொறுத்து அருள்வது வழக்கமான ஒன்று. 


அது ஒன்றும் புதியது அல்ல.


அதுபோல உன் அடியவனாகிய நான், உனக்கு விருப்பம் இல்லாத செயல்களில் ஈடுபட்டாலும், இறுதியில் உன்னை சரணடைந்தால்,


பகைவனை அரவணைப்பது பகவானின் செயல்.


பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" 


என்பது மகாகவி பாரதியாரின் பாடல் வரியாகும். 


இது ஒருவரை ஒருவர் வெறுக்காமல், அன்புடனும் கருணையுடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைப் போதிக்கிறது. 


பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கைக்கூலி வாங்கிக்கொண்டு பாரதியாரைப் பிடித்துக்கொடுக்க வந்த நண்பனை வரவேற்றதால் மனமுடைந்திருந்தபோது, 


பாரதியார் கூறிய வார்த்தையாக இந்தப் பாடல் வரி அமைந்துள்ளது. 


அதை மன்னித்து விடுவாய். அத்தோடு, 


உன்னை வாழ்த்தி பாடவும் வைப்பாய். 


என்னே உனது கருணை!


வெறுக்கும் தகைமைகள் செய்யினும்


 - வெறுக்கும் செயல்களைச் செய்துவிட்டாலும்


தம் அடியாரை - தம் அடியவர்களை


மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே - 


பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளும் செயல் புதியது இல்லையே.


புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே - 


அப்போதே தோன்றிய ஆலால விடத்தை உண்டு அதனால் கறுக்கும் திருத்தொண்டையை உடைய சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்த பொன்மகளே


மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே - 


நான் தகாத வழியில் செல்பவன்; ஆயினும் யான் உன்னை எப்போதும் வாழ்த்துவேனே.


***


பொருள் விளக்கம் தேவையில்லை. மிக எளிமையான பாடல் இது.


***

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.