காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ-3
#காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ
ஒரு குரு வந்து இதோ பாரப்பா…
நீ என்ன தேடுகின்றாய்.
வாழ்க்கை என்றால் என்ன… என்று தொடங்கி கோயில், வழிபாடு, துதிகள், மந்திர உபதேசம், வழிபாடு,
உபாசனை என்று பெரிய பட்டியல் போட்டு சித்தாந்தம், வேதாந்தம் என்று மேலே மேலே சென்று மனதை நன்கு பக்குவப்படுத்திய பிறகு இவையெல்லாம் #அபரஞானம் என்று சொல்வார்.
இவற்றிற்கும் மேலாக அந்த பரஞானத்தை அப்படியே அறிந்து கொள்ள வேண்டுமென்றும் சொல்வார்.
இது பாரத தேசத்தில் உள்ள எல்லாவிட சம்பிரதாயத்திலும் இருக்கும் விஷயமாகும்.
இந்த அபரஞானத்தை ஒதுக்கவும் முடியாது. ஒதுக்கவும் கூடாது.
பாதை என்னவென்று தெரிந்தால் பாதையே இல்லை என்று தெரியவும் ஒரு பக்குவத்தை பெறமுடியும். எனவே,
இந்த இடத்தில் அபரஞானமும் முக்கியமே ஆகும்.
இல்லையெனில் ஞானம் என்கிற சொல் கூட நம் காதில் விழாது.
பிரம்ம என்று ஒன்று இருப்பதையே வேதங்கள் போன்ற நூல்கள்தான் சுட்டிக் காட்டுகின்றன.
ஏன் சைவம் எனில் தேவார திருவாசகங்கள்…
வைணவம் எனில் பாகவதம், பாசுரங்கள்… என்று எல்லா சம்பிரதாயங்களிலும்
சுட்டிக் காட்டுகின்ற விஷயங்கள் நேரடியான ஞானமாக இல்லாமல் அபரஞானமாக இருக்கின்றன.
இப்போது இதை புரிந்து கொண்டு #பரஞானத்தை அப்படியே உணர வேண்டியதுதான் பாக்கி.
ஏனெனில், ஒரு கட்டத்தில் இந்த நூல்கள் கொடுக்கும் அறிவானது வித்வத்வத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.
நம் மூளையிலிருந்து இறங்காமல் மிகுந்த கனமாகிவிடும்.
எனவே, பரஞானத்தில் எல்லையை உணர வேண்டும் என்பதற்காகவே அம்பிகையின் இரண்டு ஸ்தனங்களையும் இங்கு உவமையாக்கி இருக்கிறார்கள்.
ஒரு குழந்தை தாய்ப்பால் அருந்தும்போது எப்படி இரண்டு ஸ்தனங்களிலிருந்து அருந்துமோ அதுபோல #பரஞானத்தையும் #அபரஞானத்தையும் அம்பிகையே இங்கு அமுதமாக ஊட்டுகின்றாள் என்று அர்த்தம். இல்லையெனில்,
ஜீவன்கள் எப்படி கரையேறும்.
காமேஸ்வரர் தனித்த பிரேமையை அம்பிகையிடம் அளித்தால், அம்பிகையோ எல்லோரையும் கடைத்தேற்றும் பொருட்டு இரண்டு ஞானமாக திருப்பி அளிக்கின்றாள்.
அப்போது உலகிலுள்ள மார்க்கங்கள் காட்டும் அனைத்து விஷயங்களும் அம்பிகையின் கருணையே ஆகும்.
இப்போது அந்த மார்க்கங்களையும் தாண்டி தனித்து தானே தானே… என்றிருக்கும் சொரூபத்தையும் அவளே காட்டுகின்றாள். இரண்டையும் அவளே அருள்கிறாள்.
காமேஸ்வரர் அளிக்கும் பரஞானத்தை நம்மால் பிடிக்க முடியாது என்று அம்பிகை தெரிந்து கொண்டே இப்படி இரண்டு விதமான பிரேமையோடு நம்மை உய்விக்கின்றாள்.
சம்சாரம் எனும் பெருங்கடலிலிருந்து மீட்டெடுக்கிறாள்.அத்வைதமாக இருப்பதை… நமக்காக துவைதமாக்கி காட்டி… அபர ஞானத்தை உண்டு பண்ணுகிறாள்.
ஏனெனில், எல்லாமுமே வாக்குக்கு அப்பாற்பட்டதெனில் எதைப்பற்றி யார் பேசமுடியும். எதை அடைய முடியும். சாத்தியம் இங்கு பரஞானம் எனில், அதற்கான சாதனமாக அபரஞானத்தை உண்டு பண்ணுகிறாள்.
சாதனையும் சாத்தியமும் இரண்டுமே சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே இரண்டு ஸ்தனங்களாக காண்பிக்கப்படுகின்றது.
இந்த நாமத்திற்கான கோயில் சீர்காழி தோணியப்பர் ஆலயமாகும். இங்கு அம்பிகையான பெரிய நாயகியான திருநிலையா நாயகியானவள் ஞான சம்மந்தருக்கு நேரடியாகவே பாலூட்டுகின்றாள்.
அதைப்பற்றி கொஞ்சம்பார்ப்போம் வாருங்கள்.
சோழவள நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி அம்மையார் தம்பதியருக்கு ஆளுடைப் பிள்ளை என்கிற திருஞானசம்பந்தர் தெய்வீகக் குழந்தை யாக பிறந்து சீரும் சிறப்போடும் வளர்ந்து வந்தார்.
தந்தையார் நீராடும் பொருட்டு சீர்காழி திருக்கோயிலில் உள்ள திருக்குளத்தை அடைந்தார் குளக்கரையில் திருஞானசம்பந்தரை அமரச்செய்து சிவபாத இருதயர் நீருள் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தா்.
சிறிது நேரமாக தந்தையாரைக் காணாமல் அழுதார். அப்போது அம்மையப்பராக எழுந்தருளிய சிவபெருமான் திருக்குளத்தின் கரையை அடைந்து
“”அழுகின்ற பிள்ளைக்கு முலைப்பாலைப் பொன் கிண்ணத்தில் ஊட்டுக ” என அம்மையிடம் சொன்னார்.
அம்மையும் அவ்வாறே திருமுலைப்பாலை பொற்கிண்ணத்தில் கறந்தருளி சிவஞானமாகிய அமிழ்தத்தை குழைத்து அழுகையை தீர்த்தருளினார்.
இறைவன் அருளால் ஞானம் உண்ட ஆளுடைய பிள்ளையாரை சேக்கிழார் பெருமானார்…
எதிலும் வியாபித்து இருப்பவள் அவளே
#அவளேஅபரஞானம்
#பரஞானமும்அவளே#
Comments
Post a Comment