#அபிராமிஅந்தாதிபாடல்-50
#அபிராமிஅந்தாதிபாடல்-50
சகலும் அவளே!
அவள் என்றாள் எவள்
அவளே ஆதிபராசக்தி
அவளின் பலசொரூபங்களை பட்டர் இங்கு விவரிக்கிறார்.
அவை
நாயகி
நான்முகி
நாராயணி
கை நளின
பஞ்சசாயகி
சாம்பவி
சங்கரி
சாமளை
சாதி நச்சு
வாயாகி
மாலினி
வாராகி
சூலினி
மாதங்கி
என்று
ஆயகியாதி
உடையாள்
சரணம் அரண் நமக்கே
பொருள்
நாயகி - உலகனைத்துக்கும் தலைவி
அவளே அன்னை ஆதிபராசக்தி
நான்முகி -
நான்முகனான பிரம்மதேவரின் சக்தி அவளே சரஸ்வதி
நாராயணி -
நாராயணனின் சக்தி லெக்ஷ்மியும் அவளே
கை நளின பஞ்ச சாயகி -
தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்
அவளே லலிதா
சாம்பவி -
சம்புவான சிவபெருமானின் சக்தி
அவளே மலைமகள்
சங்கரி - சங்கரனின் மனைவி
இன்பம் அருள்பவள்
சாமளை -
பச்சை வண்ணமுடையவள் அவளே மாதாங்கி மற்றும் மீனாக்ஷி
சாதி நச்சு வாய் அகி -
கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்
அவளே காளி
மாலினி -
பலவிதமான மாலைகளை அணிந்தவள்
வாராகி -
உலகங்கள் காக்கும் வராக ரூபிணி
வராஹத்தின் பெண் சொரூபம்
சூலினி -
திரிசூலம் ஏந்தியவள் சூலம் ஏந்தியவள் திரிசூலினி
மாதங்கி -
மதங்க முனிவரின் திருமகள் அவளே ச்யாமளா.
என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே -
என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
அம்மையின் திருப்பெயர்கள் பலவற்றைக் கூறி அவளைத் துதித்து அவள் திருவடிகளே நமக்குக் காவல் என்கிறார்
அருஞ்சொற்பொருள்:
நளினம் - வடமொழியில் தாமரை
பஞ்ச - வடமொழியில் ஐந்து
சாயகம் - வடமொழியில் அம்பு
சம்பு, சங்கர - சம் = இன்பம்; பு = பிறப்பிடம்; கர = செய்பவன்; ஆக சம்பு, சங்கரன் என்னும் போது இன்பத்தின் பிறப்பிடம், இன்பத்தைத் தருபவன் என்று பொருள்; சாம்பவி, சங்கரி அவற்றிற்குப் பெண்பால். இவையும் வடசொற்களே.
சாமளை - ஷ்யாமளை என்னும் வடசொல் - பச்சைநிறத்தவள்
கியாதி - க்யாதி என்னும் வடசொல் - புகழ்.
அந்தாதித் தொடை: நாயகியே என்று சென்ற பாடல் நிறைவடைந்தது. நாயகி என்று இந்தப் பாடல் தொடங்கியது. அரண் நமக்கே என்று இந்தப் பாடல் நிறைகிறது. அரணம் என்று அடுத்தப் பாடல் துவங்கும்.
எதுகை: நாயகி, சாயகி, வாயகி, ஆயகியாதி
மோனை: நாயகி - நான்முகி - நாராயணி - நளின, சாயகி - சாம்பவி - சங்கரி - சாதி, வாயகி - வாராகி - மாதங்கி, ஆய - அரண்.
Comments
Post a Comment