மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும்

 நேற்றைய பதிவில் பஞ்ச தசிமந்திரம் மற்றும் மூன்று கூடங்களைக் கண்டோம்.


மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும்



உள்ள தொடர்பு என்ன என்ற பதிவைக் காணாலாம்.


மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் என்பது


 இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் குறிக்கிறது. 


இச்சை என்பது விருப்பம் அல்லது லட்சியம், ஞானம் என்பது அறிவு, கிரியா என்பது செயலில் ஈடுபடும் திறன், இந்த மூன்று சக்திகளும் மனிதர்களுக்கு இன்றியமையாதவை. 


மூன்று சக்திகள் விளக்கம்


இச்சா சக்தி ( इच्छा शक्ति ): 

இது நமது விருப்பங்கள், லட்சியங்கள், மற்றும் குறிக்கோள்களை உள்ளடக்கியது. நாம் எதையாவது விரும்பும் போது அல்லது அடைய வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சக்தி செயல்படுகிறது.

ஞான சக்தி ( ज्ञान शक्ति ): 

இது அறிவையும், உணர்வையும் குறிக்கிறது. சரியான புரிதலுக்கும், விவேகத்திற்கும் இது அவசியம்.

கிரியா சக்தி ( क्रिया शक्ति ): 


இது செயலில் ஈடுபடும் திறனைக் குறிக்கிறது. திட்டமிட்ட இலக்கை அடைய தேவையான செயல்களைச் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் இந்த சக்தி துணை புரிகிறது.


இந்த மூன்று சக்திகளும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டு, 

ஒரு மனிதனை ஆளுமை மிக்கவனாகவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

 இந்த சக்திகளை ஒருவர் பெற்றுவிட்டால், அவர் வாழ்க்கையில் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும், மேலும் அவர் தன்னம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருப்பார் என்பர்.

முப்பெரும் தேவிகளில் இச்சா சக்தி, சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூர் பக்கமுள்ள மேலூரிலும், 


ஞானசக்தி திருவொற்றியூரிலும்,


 கிரியா சக்தி, திருமுல்லைவாயிலிலும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து காக்கும் தெய்வங்களாக அருள் பாலிக்கின்றனர்.

இச்சா சக்தியான திருவுடை அம்மன் சமேத மருந்தீஸ்வராகவும், 

ஞான சக்தியான வடிவுடையம்மன் சமேத வேதபுரீஸ்வரராகவும், 

கிரியா சக்தியான கொடியிடை அம்மன் சமேத மாசிலாமணீஸ்வரராகவும் தன்னைத் தஞ்சமென்று அடைவோரைத் தாங்கும் சக்திளாக வீற்றிருக்கின்றனர்.

அந்த மூன்று சக்திகளைப் பற்றிய வழிபாடே நவராத்திரி திருவிழாவாகும்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.