நவதுர்க்கை (தேவநாகரி)

 நவதுர்க்கை (தேவநாகரி)


:नवदुर्गा) என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்.


சமஸ்கிருதத்தில் '#நவ#என்றால் ஒன்பது என பொருள்படும்.


#வேதங்கள்# #துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. 


அவை


சைலபுத்ரி,


பிரமசாரிணி, 


சந்திரகாண்டா,


கூஷ்மாண்டா, 


ஸ்கந்தமாதா, 


காத்யாயினி, 


காளராத்திரி, 


மகாகௌரி, 


சித்திதாத்திரி என அன்னை 


ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். 


இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். 


இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.


01.#சைலபுத்ரி (Shailaputri), 


என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும். 


இவர், இந்து தெய்வமான துர்காவின் வெளிப்பாடாக அறியப்படுகிறார்.


இந்த வடிவம், #நவராத்திரியின்முதல் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் வடிவங்களில் ஒன்றாக உள்ளது


இவர், #சதிபவானிபார்வதி அல்லது #ஹேமாவதி என்றும் அழைக்கப் படுகிறார். 


தாய் சைலபுத்ரி என்பது அன்னை இயற்கையின் முழுமையான வடிவம் ஆகும்


02.பிரம்மச்சாரினி

 (Brahmacharini; சமசுகிருதம்: ब्रह्मचारिणी) என்பர் தனது குருவுடன் மற்ற மாணவர்களுடன் ஆசிரமத்தில் வசிக்கும் அர்ப்பணிப்புள்ள மாணவியைக் குறிக்கிறது.


மகாதேவியின் நவதுர்க்கை வடிவங்களில் இரண்டாவது அம்சமாக இவர் இருக்கிறார்.


மேலும் நவராத்திரியின் இரண்டாம் நாளில் (நவதுர்க்கையின் ஒன்பது தெய்வீக இரவுகள்) வழிபடப் படுகிறாள். 

#பிரம்மச்சாரினி தேவி பார்வதியின் அம்சமாகத் திகழ்ந்து, வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, வலது கையில் ஜெபமாலையையும் இடது கையில் கமண்டலத்தையும் ஏந்தியுள்ளார்.


03.#சந்திரகாந்தா (Chandraghanta) இந்து மதத்தில், துர்கையின் மூன்றாவது வடிவமாக கருதப்படுகிறார். 


இவரது பெயருக்கு, "மணி போன்ற அரை நிலவைக் கொண்டவர்; இவருடைய மூன்றாவது கண் எப்போதும் திறந்திருக்கும் எனவும், இவர், எப்போதும் அரக்கர்களுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பவர் " என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. 


இவர், சண்டிகா அல்லது ராண்சண்டி என்றும் அழைக்கப்படுகிறார். 


இவரது வழிபாடு நவராத்திரியின் மூன்றாம் நாளில் ( நவ துர்காவின் ஒன்பது தெய்வீக இரவுகள்) நடைபெறுகிறது. 


இவர் தனது அருள், துணிச்சல் மற்றும் தைரியத்தால் மக்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்பப்படுகிறது. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.


04.#குஷ்மாண்ட தேவி (Kushmanda) (சமசுகிருதம்:कुष्माण्डा])


நவதுர்கைகளில் நான்காமவர்.


இவரே பிரபஞ்சப் படைப்பிற்கு காரணமானவர். சூரியனின் ஆற்றலை மற்ற படைப்புகளுக்கு பகிர்ந்து அளிப்பவர்.


நவராத்திரி விழாவின் நான்காம் நாளில் குஷ்மாண்ட தேவிக்கான மந்திரங்கள் கூறி வணங்குபவர்.


மற்ற துர்கைகளை நாளைய பதிவாக காணலாம்.


#ஓம்விஜயதசமிவாழ்த்துகள்

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.