அபிராமிஅந்தாதிபாடல்-49

 #அபிராமிஅந்தாதிபாடல்-49



குரம்பை அடுத்து 


குடிபுக்க ஆவி 


வெங்கூற்றுக்கு இட்ட


வரம்பை அடுத்து 


அப்போது 


வளைக்கை அமைத்து


அரம்பை அடுத்த 


அரிவையர் சூழ 


வந்து அஞ்சல் என்பாய்


நரம்பை அடுத்து 


இசை வடிவாய் 


நின்ற நாயகியே


பகவான் நாமத்தை எப்போது சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கு பட்டரின் அருமையான விளக்கம்.


நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! 


அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க,


 நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். 


அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! 


எனக்கு அருள் புரிவாய்!


குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி -


உடலை அடிப்படையாகக் கொண்டு அதனில் குடிவந்த உயிர்


வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது -


வெம்மையுடைய கூற்றுவன் (யமன்) வரும் கால அளவினை அடையும் போது


வளைக்கை அமைத்து - 


வளையல்கள் அணிந்த உன் திருக்கரங்களை அசைத்து


அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து - 


அரம்பையைப் போன்ற பெண்கள் சூழ வந்து


அஞ்சல் என்பாய் - 


அஞ்சாதே என்று கூறுவாய்


நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே - 


நரம்பைக் கொண்டு இசை எழுப்பும் வீணையைப் போன்ற இசைக்கருவிகளின் இசை வடிவாய் நிற்கும் தலைவியே.


***


உடலில்லாமல் உயிர் இல்லை;


 உயிரில்லாமல் உடல் இல்லை.


உடலை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயங்குகிறது. 


அதாவது சிவனும் சக்தியும் சேர்ந்தது இந்த உலகு.


உடல் சிவன் உயிர் சக்தி அதுவே #அர்த்தநாதீஸ்வரர்தத்துவம்.


#சக்தி இல்லையேல் #சிவன் இல்லை #சிவன் இல்லையேல் #சக்தி இல்லை என்ற உயரிய தத்துவம்.


அந்த உடலும் உயிரும் இணைந்திருக்க ஒரு கால 

அளவு விதிக்கப்படுகிறது. 


அந்தக் கால வரம்பு வரை காலன் வருவதில்லை. 


அந்தக் கால வரம்பு முடிந்தவுடன் காலன் வரும் நேரத்தில் உயிர்,


இந்த உடலை விட்டுச் செல்ல பயந்து மறுகுகிறது. 


அந்த நேரத்தில் ஒரு நல்ல இசை கேட்டால் உயிருக்கு அந்த மரண வேதனை குறையும். 


இசையே வடிவாய் நிற்கும் 


அபிராமி அன்னை 


அந்த நேரத்தில் அழகில் 

சிறந்த மகளிர் சூழ வந்து தன் திருக்கரங்களை அசைத்து அஞ்சாதே என்று சொன்னால்? 


அந்த மரண பயமும் மரண வேதனையும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுமில்லையா?


அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார் அபிராமி பட்டர்.


எது எதார்த்தம் என்பதை அழகாக விளக்குகிறார் பட்டர்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.