#அபிராமிஅந்தாதிபாடல்60 :
#அபிராமிஅந்தாதிபாடல்60 : பாலினும் சொல் இனியாய்! பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்னின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒருநாலினும், சால நன்றோ அடியேனுடை நாய்த் தலையே? என்னை தண்டித்து விடாதே அம்மா என்று முந்திய பாடலில் சொன்ன அபிராமி பட்டர், இந்தப் பாடலிலே, அபிராமி அன்னையின் அருளைப் பற்றிப் பேசுகிறார். உன்னை நெஞ்சில் நினைக்க இயலாத என்னை நீ தண்டிப்பது முறையா? என்று சென்ற பாடலில் கேட்ட பட்டரின், தலையிலே தனது பத்மபாதங்களை வைத்து அந்த அபிராமி அன்னை அற்புதம் அல்லவா நிகழ்த்தி விட்டாள்! நான் உன் குழந்தை, தனது குழந்தையை எந்தத் தாயாவது தண்டிப்பாளா? என்று முந்திய பாடலிலே கேட்ட பட்டருக்கு தனது பாத கமலங்களையே அல்லவா அளித்து விட்டாள் அந்தத் தாய்! அந்த அருளை நினத்து நினைத்து உருகிப் பாடுகிறார் பட்டர். அம்மா! நீ என் தலையிலே உனது பாதங்களைப் பதித்து விட்டாய். இந்தப் பாத கமலங்களது தரிசனமாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலருண்டு. "அம்மா! பாலை விட இனிய சொல் அல்லவா உனது சொல்!...