#அபிராமிஅந்தாதிபாடல்60 :
#அபிராமிஅந்தாதிபாடல்60 :
பாலினும் சொல் இனியாய்!
பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க
நின்றோன்
கொன்றை வார் சடையின்
மேலினும்,
கீழ்னின்று வேதங்கள் பாடும்
மெய்ப்பீடம் ஒருநாலினும்,
சால நன்றோ அடியேனுடை
நாய்த் தலையே?
என்னை தண்டித்து விடாதே அம்மா என்று முந்திய பாடலில் சொன்ன அபிராமி பட்டர்,
இந்தப் பாடலிலே,
அபிராமி அன்னையின் அருளைப் பற்றிப் பேசுகிறார்.
உன்னை நெஞ்சில் நினைக்க இயலாத என்னை நீ தண்டிப்பது முறையா?
என்று சென்ற பாடலில் கேட்ட பட்டரின்,
தலையிலே தனது
பத்மபாதங்களை வைத்து அந்த அபிராமி அன்னை அற்புதம்
அல்லவா நிகழ்த்தி விட்டாள்!
நான் உன் குழந்தை,
தனது குழந்தையை எந்தத் தாயாவது தண்டிப்பாளா? என்று முந்திய பாடலிலே கேட்ட பட்டருக்கு தனது பாத கமலங்களையே அல்லவா அளித்து விட்டாள் அந்தத் தாய்!
அந்த அருளை நினத்து நினைத்து உருகிப் பாடுகிறார் பட்டர்.
அம்மா!
நீ என் தலையிலே உனது பாதங்களைப் பதித்து விட்டாய்.
இந்தப் பாத கமலங்களது தரிசனமாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலருண்டு.
"அம்மா! பாலை விட இனிய சொல் அல்லவா உனது சொல்!
உனது இதமான,
பனி போன்ற குளிர்ச்சி பொருந்திய பாத கமலங்களைத் தங்கள்
தலை மேல் வைத்துக் கொள்ள,
'என் மேல் வை, என் மேல் வை'
என்று தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தத் திருமால் மிக விருப்பத்தோடு உனது பாத கமலங்களைத் தனது தலை மேல் வைத்து அழகு பார்க்கிறார்.
அனைத்து தேவர்களும் வண்ங்கி நிற்கும் அந்த கொன்றைப் பூச்சூடிய எம் ஈசனும் நினது திருப் பாத கமலங்களைத் தனது தலை மேல் தாங்கிக் கொண்டு இருக்கிறார்.
வேதங்கள் நாலும், நினது தாளிணைக்குக் கீழே நின்று ஓதிக் கொண்டு இருக்கின்றன.
இப்படி, தேவர்கள் வணங்கி ஏத்தும் திருமாலின் மேலும்,
அந்த ஈசனாரின் மேலும்,
வேதங்கள் நான்ங்கின் மேலும் வைத்த நினது திருப்பாத கமலங்களை,
இந்த நாயேனின்,
கடையனிலும் கடையனான எனது தலையின் மேல் வைத்தாயே! உனது அருளை,
அந்தப் பேரருளை நான் என்னவென்று சொல்லிப்பாடுவேன்!" என்று உருகி நிற்கிறார் பட்டர்.
நாலினும் சால நன்றோ -
அடியேன் முடை நாய்த் தலையே
பொருள்:
இங்கு பட்டர்,
தம்மீது அம்பாள் கருணைக்கொண்டு அவள் பாதங்களை வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அதோடு தான் மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு கூறுகிறார். அந்த அடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி,
நாம் அடக்கத்தோடு இருந்தால், உயர்ந்த நிலை கிடைக்கப் பெறுவோம்.
இல்லாவிட்டால், இருளில் தள்ளப்படுவோம்.
அம்பாள்,
இனிய சொல் உடையவள்.
முன்பே
#மதுரபாஷினி#
#தேனார்மொழிவல்லி
என்றெல்லாம் அம்பாளை பற்றி பார்த்தோம்.
இங்கும், பட்டர்,
பாலினை காட்டிலும் இனிய சொல் உடையவள் என்று அன்னையை புகழ்கிறார்.
அத்தகு இனியவளின் தாமரை
(பனி மா மலர் - தாமரை) போன்ற பாதங்களை,
திருமால் மீதும்,
தேவர்களின் தலைவனான இந்திரன் மீதும்,
மாலும், இந்திரனும் வணங்கும் கொன்றைபூக்கள் சூடிய சடையுடைய சிவபெருமான் மீதும் அன்னை வைத்துள்ளாள்.
மேலும்
உயர்ந்த வேதங்கள் நான்கின் மீதும் அம்பாள் தன் பாதங்களை வைத்துள்ளாள்.
இவைகளைத்தவிர சிறியோனான தன் மீதும் (பட்டர்) அம்பாள் கருணைக்கொண்டு வைத்துள்ளாள். அவர்களை விட எந்த விதத்திலும் தான் சிறந்தவன் அல்ல.
எனினும் தன்மீது அம்பாள்
அவள் பாதத்தை வைத்தது,
அவள் #அவ்யாஜகருணாமூர்த்தி என்பதை நிரூபிக்கிறது.
#அவ்யாஜகருணாமூர்த்தி -
அவ்வித காரணமும் இன்றி கருணை காட்டுபவள் அம்பாள் என்பதை அம்பாள் விளக்குகிறாள்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.

Comments
Post a Comment