#அபிராமிஅந்தாதி-52 பாடல்

 #அபிராமிஅந்தாதி-52 பாடல்


வையம் துரகம் மதகரி 



மாமகுடம் 


சிவிகை


பெய்யும் கனகம் 


பெருவிலை ஆரம் 


பிறை முடித்த


ஐயன் திருமனையாள் 


அடித் தாமரைக்கு 


அன்பு முன்பு


செய்யும் தவமுடையார்க்கு


 உளவாகிய சின்னங்களே.


ஏ, அபிராமி! 


உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள்.


அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! 


கேள்: 


வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!


வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி


துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்


மதகரி - பெரிய பெரிய யானைகள்


மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள்


சிவிகை - அழகிய பல்லக்கு


பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்


பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்


பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்


அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு


அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு - 


பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு


உளவாகிய சின்னங்களே - கிடைக்கும் அடையாளங்கள்.


இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். 


அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.


***

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.