செங்கனூர் பகவதி கோவில்-1

முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில்


பற்றிய பதிவு.

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி


கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்-


கதை 


ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில்


அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார்.


அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே , 


அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா ! 


திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின; 


இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி, 


கடைசியில், பகவதி கோவிலில் அவரைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மன்னர் படிப்படியாக பெரிய பெரிய பதவிகளை வழங்கி கெளரவித்தார் . சூரிய நாராயணன் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 


3 முறையாவது செங்கன்னூருக்கு பகவதியைத் தரிசிக்க வந்துவிடுவார்.


கதை 


கும்பகோணத்தில் ஒரு பணக்கார ராயர் இருந்தார். அவருடைய மனைவிக்கு  பேய் பிடித்தது. மலையாள


மக்கள், மன நோய் வந்துவிட்டால்  பேய் பிடித்து விட்டது என்றே சொல்லுவார்கள்;  நம்புகிறார்கள்.


 (ALL MENTAL DISEASES ARE ATTRIBUTED TO EVIL SPIRITS; MALAYALI APPROACH).


கும்பகோணம் ராயரும் பேயோட்டும் மந்திரவதிகளை  அழைத்து ஓம் சூம் மந்திரக்காளி, 


மலையாள பகவதி என்றெல்லாம் மந்திரம் போட்டுப் பார்த்தார். மனைவி குணம் அடையவில்லை; அவரை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதுரையில் தங்கினார்.


 அப்போது யக்ஞவேத சாஸ்திரி என்பவரைச் சந்தித்தார்; 


அவர் அந்த தம்பதிகளை செங்கன்னூருக்குச் சென்று பிரார்த்தியுங்கள், குணம் ஆகிவிடும் என்றார்.


 ராயரும்   அவ்வாறே செய்தார் . கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலியும் பஜனையும் செய்தார்; அவருடைய மனைவி குணம் அடைந்தவுடன் அவர் அணிந்த நகைகளை எல்லாம் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்.


கதை 


பெருந் தச்சன் என்பவர் கேரளத்தில் உள்ள பல பெரிய கோவில்களைக் கட்டியவர் ஆவார் ; 


ஒரு நாள்  அவர் பம்பா நதியில் படகில் செங்கன்னூருக்கு வந்தார். பிராமணர்கள் பூஜை செய்து மிஞ்சிய பூக்களும் பழங்களும் இலைகளும் நதியில் மிதந்து வந்தன .


பிராமணர்களின் பக்தியைப் பார்த்த அவர், இப்படியே போனால் பிராமணர் அல்லாதோர் இறைவனை வணங்க வாய்ப்புகள் குறையும் என்று எண்ணி கோவில் கட்டுவதில் மாறுதல்களை செய்தார். 


பிராமணர்கள் உட்கார்ந்து வேதம் சொல்லும் முக மண்டபத்தை வழக்கத்துக்கு மாறாக தாழ்வாக கட்டினார் . 


இதற்குப் பின்னர் நடந்த விபத்தில் அவர் சொந்த மகனையே இழந்தார்.


கீழைக் கோபுரத்தின் மேல் பகுதியில் பெரும் தச்சன் வேலை செய்து கொண்டிருந்தார் ; 


அப்போது அவர் கையில்  வைத்திருந்த கூர்மையான ஆயுதங்கள் கைதவறி விழுந்து, கீழே பணியாற்றிக்கொண்டிருந்த மகன் மீது விழுந்தன.மகன் உயிரும் பறி போனது.


பெரும் தச்சன் கட்டிய நம்பூதிரி இல்லங்களும் அழிந்து நம்பூதிரிகளின் எண்ணிக்கையும் விறல் விட்டு என்னும் அளவுக்கு குறைந்தன. 


தவறான முறையில் வடிவமைத்ததே இதற்குக் காரணம்  என்ற பழிச் சொல்லும் அவர் மீது விழுந்தது.


கோவிலின் தோற்றம் நாளைய பதிவாக காணலாம்.

Sources

Tamil and Vedas

https://rajathathaskeralatemples.blogspot.com/2010/02/chenganoor-mahadeva-and-bhagawathi.html?fbclid=IwdGRzaANQLNljbGNrA1AsvWV4dG4DYWVtAjExAAEeTAe_M39i9x5LxDq8_li6IOKraa-wTXqCz3fPh7J9OxnGZxsEFAuT3QfcCfI_aem_psF8tzjOCo051yxAkK09hg&m=1


Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.