மஹாபெரியவா கூறிய இருகடமைகள்.

 மஹாபெரியவா கூறிய இருகடமைகள்.



ஒன்று பித்ருக்களுக்கு செய்ய வேண்டியக்கடமை மற்றொன்று குலத்தெய்வ வழிபாடு.


கடந்த 15தினங்கள் மிகவும் அற்புதமான நாட்கள்.


ஒன்று நவராத்திரி மற்றொன்று புரட்டாசி சனிக்கிழமை குலத்தெய்வம் ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுதள்.


எங்களுக்கு அடிமை காவு செங்கனூர் பகவதி. 


காரணம் எங்கள் மூதாதையர் origin, கேரளா வர்கலா அதாவது கழகூட்டம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள்.


அதனால் அம்பாள் செங்கனூர் பகவதி எங்களுக்கு பெண் தெய்வம் ஆவாள்.


அம்பாள் சிவன் பார்வதி சொரூபமாக இந்த சந்நிதியில் எழுந்தளியுள்ளார்.


இந்த கோவில் பெண்களுக்கு மிகவும் விசேஷம். 


காரணம் ஏற்படுகின்ற மாத விலக்கு மாதிரி அம்பாளுக்கு ஏற்படும் போது .


அம்பாளுக்கு தனி அறையில் வைத்து பூஜை நடக்கும். 


அப்போது அம்பாள் மூலவர் சந்நிதி மூடப்பட்டு இருக்கும்.


மூன்று நாட்கள் முடிந்த பிறகு ஆராட்டு விழா முடிந்து அம்பாள் சந்நிதிக்கு எழுந்து அருளும்போது சுவாமி அம்பாளை எதிர்க்கொண்டு அழைப்பார்.


அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


அவர்கள் இருவரும் யானை மீதி ஏறி உளபிராகாரம் பவனி வரும்போது இருவரும் குலுங்கி குலுங்கி பவனி வருவர்.


சந்நிதி உள்ளே மரியாதைகள் முடிந்து அம்பாள் சந்நிதிக்கு ஏழுந்து அருள்வார்.


இந்த நிகழ்வை ஆராட்டு விழா என அழைப்பர் கேரள மக்கள்.


செங்கனூர் பகவதி சொரூபமான ஶ்ரீலலிதாமாபிகை வழிபாடு நவராத்திரி போது நன்கு நடந்தது.


அது முடிந்து சனிக்கிழமை அன்று குலதெய்வம் ஏழுமலையானுக்கு எனது மனைவியின் ஏற்பாட்டில் பெருமாளுக்கு மாவிளக்கு போடப்பட்டது.


பெருமாள் மலையேறும் போது மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம்.


மஹாபெரியவா அடிக்கடி கூறுவது இரு காரியங்கள் மிக முக்யம்.


ஒன்று மூதாதையர் வழிபாடு அது மஹாளய பக்ஷ்த்தில் நன்கு நடந்தது.


மற்றொன்று குலத்தெய்வ வழிபாடு அதுவும் மஹாளய பக்ஷ்ம் முடிந்த பிறகு நவராத்திரி மற்றும் புரட்டாசி சனி கிழமையன்று நன்கு நடத்தினார்கள் என்பதே மனத்திற்கு மிகவும் திருப்தி இருந்தது.


அதை தங்களிடம் பகிரவேண்டும் என்பதற்காக இந்த பதிவு.


#ஓம்மாத்ரேநமஹ#

#ஓம்ஏழுமலையானேநமஹ#.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.