அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி?
எவ்வாறு அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி?
எனது நண்பர் திரு.இராஜராஜம் அவரது கூற்று தான் எனது சிந்தனையில் உதிக்கின்றது.
அவர் கூறியது பகவான் நமது வாழ்க்கையை சிறு சிறு வட்டங்களாகி ஒரு வட்டத்தில் நம்மை விட்டு சில பல சிக்கல்களைக் கொடுத்து அதிலிருந்து மீள்கிறோமா என பார்பார். அதிலிருந்து மீண்டு வந்தாள். நம்மை அடுத்த வட்டத்தில் எடுத்துச் செல்வார் தற்போது எனது அனுபவத்திலிருந்து புலப்படுகிறது.
அவ்வாறாகவே என்னை ஒவ்வொரு வட்டத்தில் இட்டு அடுத்த வட்டத்துக்கு எடுத்துச்செல்கிறாள்.
அவ்வாறான அடுத்த வட்டம் இந்த பதிவு.
இந்த காலகட்டம் சுமார் 2021 எனது மாமியாரின் மரணம்.
அவர்கள் கிட்டத்தட்ட 50வருட காலம் சௌந்தயலஹரி லோகம் பாரயணம் செய்தவர்கள் அவர்கள் கூட எனது மனைவி மற்றும் இரு சகோதரிகளும் பாராயணம் செய்து வந்தனர்.
எனது மாமியார் மரணம் செவ்வாய் கிழமை அன்று இராகு காலத்தில் அதாவது 3 to 4.30மணிவாக்கில் எனது மனைவியை விட்டு அம்பாளுக்கு விளக்கு ஏற்றச் சொல்லி மற்றும் எனது மனைவி கையால் குங்குமத்தை வாங்கி இட்டுக் கொண்ட பிறகு அவர்களது மரணம் சம்பாவித்து.
அதன் பிறகு அவர்கள் பூஜை செய்த அனைத்து அம்பாகளையும் இன்று நான் பூஜை செய்து வருகிறேன்.
காரணம் அம்பாள் அவளது பாதார விந்தத்தில் என்னை சரணடைய வைத்து.
தனக்கு விருப்பமானவர்கள் கையால் பூஜை ஏற்க்கிறாள் என்பதை என்னால் உணர முடிகிறது.
காரணம் என்னை விட வெகுகாலமாக சௌந்தயலஹரி பாராயணம் செய்தவர்களிடம் செல்லாமல் எனது வீட்டில் வீட்டிற்கிறாள் என்றால் அது அவளது திருவிளையாடலே என்பதே உண்மை.
அதற்காக தான் வெகுகாலமாக எனது குலத்தெய்வதை காணாத எனது குடும்பம்,எனது திருமணத்திற்கு பிறகு அவளை தரிசிக்கும் பாக்கியத்தைக் கொடுத்தாள்.
இது நடந்த பிறகு மற்ற பல நிகழ்வுகள் ஒன்று பின் ஒன்றாக நடந்து வருகிறது அதுவும் பல காலகட்டங்களில் என்னை பக்குவபடுத்தி படுத்தி அதை உணர வைத்து அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கிறாள்.
இவ்வாறு அடுத்த கட்டமாக அர்த்த மஹாமேரு முதியோர் இல்லத்தில் பஜனையில் போது தேவிகட்கமாலா ஸ்தோத்திர புத்தகம் கிடைக்கப் பெற்றேன்.
இதற்கு அடுத்ததாக மஹாமேரு இராமவரத்தில் எழுந்தளியுள்ள ஶ்ரீலலிதா திரிபுரசுந்திரி சந்நிதியில் கிடைக்கப்பெற்றேன்.
தற்போது நண்பரின் மூலம் ஶ்ரீசக்கரத்தில் அனைத்து தேவதைகள் ஒம்பது ஆவாரணத்தில இருக்கும் திருவுருவப்படம் கிடைக்கப்பெற்றேன்.
இவ்வாறாக 2004வது ஆண்டிலிருந்து எனக்கும் அம்பாளுக்கும் இடையான பந்தம் ஆரம்பம் ஆனது.
அப்போது அது சாதாரணமாக தெரிந்தது தற்போது அதை திரும்பி பார்க்கும் போது அவள் எவ்வாறு 2004லிருந்து வழி நடத்து இருக்கிறாள் என்பது புரிக்கிறது.
இந்த வருடம் ஶ்ரீமஹாலலிதா திரிபூரசுந்தரியின் திருவரு படம், மஹாமேரு மற்றும் ஶ்ரீசக்கரம் திருவுருப்படம் ஆகியவற்றற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
அவள் எனது கையால் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்திற்கு தமிழ் பொழிப்புரை எழுத வைத்தாள் அதன் பிறகு சௌந்தயலஹரி ஸ்லோகத்திற்கு தமிழ் அர்த்தம் மற்றும் அபிராமி அந்தாதி பொருள் என்று பதிவிட்டு வருகிறேன்.
இவ்வாறாக ஒவ்வொரு காலகட்டத்திற்கு இட்டுச்சென்று மற்றும் என்னை பக்குவபடுத்தி அவளுக்கு பூஜைச்செய்யும் பெரும்பாக்கியத்தை அருளினாள்.
இதன் மூலமாக அவள் என்னை கொஞ்சம் கொஞசமாக அவளைப் பற்றிய ஞானத்தை வழங்குகிறாள் என்பதை எனது பதிவு மூலமாக நீங்கள் உணருவீர்கள்.
எல்லாமே அவள் அதில் நான் கருவி என்பதே உண்மை.
இதுவே மஹாபெரியவா அருளுரையாகும்.
அவள் நம் மூலமாக தனது காரியத்தை நடத்துக்கிறாள்.
அதை விடுத்து நான் செய்கிறேன் என்ற அகந்தை தலைக்கு ஏறினால் நாம் அழிவை நோக்கி பயணிக்கிறோம் என்பதை உண்மை.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.
Comments
Post a Comment