#அம்பாள்உபாசனை#

அம்பாளை நாம் பிராதிக்கவேண்டும் பிரபுசர்மா அண்ணாவின் அருமையான விளக்கம். #ஶ்ரீகுருவாக்கிய_பரிபாலனம்* #அம்பாள்உபாசனை# """"""""""'''''''''""""""""""""""""""""""" அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. *"அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா" என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் - அதைவிடப் பெரிய, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமு...