மாத்ருகா பஞ்சகம் ஐந்தாவது ஸ்லோகம்


மாத்ருகா பஞ்சகம் ஐந்தாவது ஸ்லோகம்.

மாதா பிதா முதலில் மாதா பின்பு தான் பிதா.

காரணம் 10மாத கர்ப்பகிரஹமான கர்ப்பையில் நம்மை சுமந்து வளர்க்கிறாள்.

கோயில் கர்ப்பகிரஹத்து ஈடனான தாயின் கர்ப்பபை குறிப்பிடுக்கின்றனர்.

அந்த கர்ப்பகிரஹத்தில் மூலமாக என்னை ஈன்றெடுத்த தாயின் பாதாரவிந்தங்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்

ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I

க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –

த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

தாயே, 

தாங்கள் பிரசவ வலியால் துடிக்கும் பொழுது கோவிந்தா கோபாலா என அரற்றினீர்கள். அந்த துன்பங்களுக்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தங்கள் திருவடித் தாமரைகளுக்கு என் சிரசை தங்கள் பாதங்களில் தண்டனிட்டு அஞ்சலி செய்கிறேன். கருணாசாகரமான தாங்கள் அதனை ஏற்று என் தவறுகளை க்ஷமித்து அருள வேண்டும் என பிரார்த்திக்கிறார்.

இந்த ஐந்து ஸ்லோகங்களால் சங்கரர் தாயன்பின் மகோன்னத்தை விளக்குகிறார். பகவத்பாதர் போன்ற மஹானே தாயன்பிற்கு தன்னால் ஈடு செய்ய இயலாது என்று கூறினால் பாமரர்களான நம்மால் என்ன செய்ய இயலும். நாம் செய்ய கூடியதெல்லாம் நம் பெற்றோர்களின் கண்கலங்காமல் அவர்களை பேணி காப்பது ஒன்றே.  பெற்றோரை பேணி காப்பதால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

#ஜயஜயசங்கரஹரஹரசங்கர#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.