அபிராமி அந்தாதிபாடல் - 15

 அபிராமி அந்தாதிபாடல் - 15

பெருஞ்செல்வமும் பேரின்பமும் நல்கும்

தண்ணளிக்கு என்று 

முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? - 

மதி வானவர் தம்

விண்ணளிக்கும் செல்வமும், 

அழியா முக்தி வீடும் அன்றோ?

பண்ணளிக்கும் 

சொல் பரிமள யாமளை பைங்கிளியே

அன்னை அபிராமி - 

இனிய இசையினை எழுப்பக்கூடிய பசுங்கிளி (பச்சை கிளி - பைங்கிளி)

அன்னை மீனாக்ஷியை குறிப்பிடுகிறார்.

பண் - இசை , 

பண்ணளிக்கும் - இசை தரக்கூடிய ,

சொல் - இனிமை. 

எப்படிப்பட்ட இனிமை ? 

நல்ல வாசனை போன்ற இனிமை (பரிமள)

எவை தலை சிறந்த செல்வங்கள்

என்பதை குறிப்பிடுகிறார்.

அன்னையின் அருளுக்காக முற்பிறவியில் பலகோடி தவங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடியது இவ்வுலகில் இருப்பதற்க்கான செல்வமா? 

இல்லை இல்லை.

தேவர்களுக்கு இணையான தேவப்பதவி. 

பின்னர் என்றும் அழியாத வீடு பேறு - முக்தி. 

இவையே தலை சிறந்த செல்வங்கள் ஆகும்.

இந்த மனித பிறவியின் நோக்கமே கர்மாவை கழித்து முக்தி அடைவது.

அதை தான் பட்டர் இங்கு விளக்கிறார்.

இங்கு முக்தி அனைவருக்கும்


கிடைப்பதில்லை.


அந்த பேறுபேற்றவர் சிலரே.


#ஓம்ஶ்ரீமஹாலெக்ஷ்மிதாயே#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.