மாத்ருகா பஞ்சகம் மூன்றாவது ஸ்லோகம்

மாத்ருகா பஞ்சகம் மூன்றாவது ஸ்லோகம்

தாயானவள் தனது உதிரத்தை பாலாகக் நமக்கு கொடுத்து வளர்க்கிறாள்.

அந்த தாயிக்கு இது சமர்பணம்.

3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா

ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I

ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:

அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

தாயே, 

நான் மூன்று தவறுகள் செய்து உள்ளேன். 

முதலாவதாக, 

தங்கள் மரணத்தருவாயில், 

தங்களின் உலர்ந்த தொண்டைக்கு கங்கா ஜலமோ, துளசி தீர்த்தமோ தரவில்லை.  

ஓர் சத்புத்ரன் தன் தாயையோ, தந்தையையோ, 

மரணத்தருவாயில் தன் மடியில் ஏந்தி,

வாயில் கங்கா ஜலத்தையோ, 

துளசி தீர்த்தத்தையோ தரவேண்டும். 

நான் காசியில் பிரவாகிக்கும் கங்கை கரையில் இருந்தேன். 

ஆயின் தங்களுக்கு ஒரு வாய் கங்கா ஜலம் தந்தேனில்லை. 

இரண்டாவதாக, 

நான் பிரம்மசாரியாகவோ,

கிரஹஸ்தனாகவோ 

இருந்தால் தங்களுக்கு உரிய திதியில், 

ஸ்வதா எனும் ஹவிஸையோ,

பிண்டப்பிரதானமோ செய்யமுடியும்.

என் இந்த சந்நியாசத்தால் அதையும் செய்ய இயலாது. 

மூன்றாவதாக, 

தங்களுக்கு கர்ண மந்திரமான தாரக மந்திரமாகிய ராம நாமாவை கூறவில்லை. 

காசி க்ஷேத்திரத்தில் பலர் முக்தியடைய அனவரதமும் ராமநாம ஜபம் செய்ய இயன்ற என்னால் தங்களுக்கு கர்ணமந்திரத்தை கூறவில்லை. 

இந்த மூன்று தவறுகள் புரிந்த என்னை தாங்கள் கருணை கூர்ந்து மன்னித்து என் இறுதி காலத்தில் ரக்ஷிக்க வேண்டும் என வேண்டுகிறார். 

இந்த தவறுகளுக்காக நான் தங்கள் பாத கமலங்களில் சிரசை வைத்து நமஸ்கரிக்கிறேன். 

ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.


#தாயேலோகஜனனி#


இது பகவத்பாதாள் தனது தாயிக்கு கூறுவது போல் நமக்கு உணர்த்துகிறார் என எண்ண தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.