இந்துக்கள் கற்பூரத்தை பூஜையில் உபயோகப்படுத்துவது ஏன்
இந்துக்கள் கற்பூரத்தை பூஜையில் உபயோகப்படுத்துவதின் காரணம் மற்றும் தனிச்சிறப்பு என்ன?
தற்சமயம் நிறைய கோவில்களில் கற்பூரம் தவிர்த்து நெய்விளக்கே மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
தற்சமயம் கற்பூரத்தில் மெழுகு கலக்கப்படுவதால் கற்பூரம் எரிந்த பின்னர் சாம்பல் மற்றும் கரியை ஏற்படுத்தும் காரணத்தால்,
ஆலய தூய்மையை கருத்தில் கொண்டு பெரும்பாலான கோயில்களில் கற்பூரம் பயன்படுத்துவதில்லை.
தூய கற்பூரம் முழுவதும் எரிந்த பின்னர் எந்த விதமான சுவடும் இல்லாமல் கரைந்துவிடும்.
பொதுவாக நெருப்பானது எந்த ஒரு பொருளை எரித்தாலும் எரிந்த பொருளின் சாம்பல் மீதம் இருக்கும்.
தூய கற்பூரமானது முழுவதும் எரிந்து ஒன்றுமில்லாமல் போய்விடும்.
ஆன்மீகத்தின் நோக்கமும் அது தான் கடைசியில் ஒன்றுமில்லாமல் கரைந்து போவது.
முக்தி என்பது என்ன திரும்பி பிறக்கும் அடிப்படை கட்டமைப்பே தகர்த்து பிறவாநிலை அடைவதே ஆகும்.
தத்துவ விளக்கம்.
ஆத்மா, பரமாத்மாவோடு கலப்பதைக் குறிக்கும்.
கற்பூரம் வெண்மையானது. அது சுத்த சத்துவ குணமுள்ள ஆத்மாவைக் குறிக்கும்.
கற்பூரத்தை ஏற்றியவுடன் தீபம் போல் எரிவது ஞானாக்கியால் மலம் நீங்கப் பெற்ற ஆன்மாவானது சிவகரணம் பெற்று நிற்பதைக் காட்டும் கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றிக் கரைந்து போவது போல் ஆன்மாவானது சரீரங்களெல்லாம் நீக்கி இறைவனோடு ஒன்று படும்.
இதைக் காட்டுவதே கற்பூர தீபாராதனையின் தத்துவமாகும்.
படித்தில் பிடித்தது
Comments
Post a Comment