#அபிராமிஅந்தாதிபாடல்-16#
#அபிராமிஅந்தாதிபாடல்-16#
முக்காலமும் உணரும் திறன் கிடைக்கும்
கிளியே,
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே,
ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே,
வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிர்க்கு
அளவானது அதிசயமே
முந்தைய பாடலில்,
பட்டர் , அன்னையை பைங்கிளியே என்று அழைத்தார்.
இந்த பாடலிலும் கிளியே என்று அழைக்கிறார்.
பொதுவாக ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்றால், நாம், கிளி போல இருக்கிறாள் என்று சொல்வோம் அல்லவா?
அதுபோல், அன்னை பேரழகி. அதனால் கிளியே என்று வர்ணிக்கிறார்.
மேலும் மீனாக்ஷி அம்மையின் கையில் உள்ளது கிளி.
ஆண்டாளின் கையில் உள்ளது கிளி. பல பறவைகள் இருப்பினும், கிளிக்கு அம்பளிடத்தில் தனி இடம் உண்டு.
லலிதா சஹஸ்ரநாமத்தில் "சுககரி" என்று கையில் கிளியை வைத்துள்ளாள் என்று ஒரு நாமம் வருகிறது.
(சுமங்கலி சுககரி சுவேஷாட்யா சுவாசினி)
ஆதலால் அன்னையே, கிளி போன்ற அழகு கொண்டவளே,
உன்னை வணங்குவோரின் மனதில் குடிகொண்டு பிரகாசிக்கும் சுடர் ஒளியே,
அந்த ஒளிக்கு ஆதாரமே, வெற்றிடமான வெளியே (vacuum - space - ether) - ஆகாசம்,
ஆகாசம், காற்று, தீ, நீர், மண் முதலிய பூதங்களாகி விரிந்த அன்னையே,
அவளே உலகு என்பதை இவ்வாறு கூறுகிறார்.
#பூத்தவளேபூத்தவண்ணம்உலகுஏழும்காத்தவளே#
எளியவனான என் மனதிற்கும் புலப்படுமாறு நீ இருப்பது அதிசயம் தான்.
இவ்வாறு பட்டர் துதிக்கிறார்.
நாமும் துதிப்போம்.
Comments
Post a Comment