சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும்
சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும்
சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும்
திருவையாறில் ஸப்தஸ்தானம் மிகவும் விமர்சையாக கொண்டாடபடுகிற ஒரு விழா.
திருவையாறு தர்மசவர்த்தினி சமேத ஐயாறப்பர் தம்பதி சமேதராக கண்ணாடி பல்லாக்கில் எழுந்த அருளுவர்.
இதன் தாத்பர்யம் ப்ரம்ம உற்சவத்தின் போது திருவையாற்றில் அனைத்து ஊர் ஸ்வாமிகளும் ஒன்று கூடுவர்.
அவை
திருவையாறு
திருபழனம்
திருவேதிகுடி
திருசோற்றுதுறை
திருகண்டியூர்
திருப்பத்துருத்தி
திருநெய்தானம்
திருவையாறு சப்தஸ்தானத்தில் உள்ள ஏழு ஸ்வாமிகள்:
ஐயாறப்பர் (திருவையாறு),
ஆபத்சகாயர் (திருப்பழனம்),
ஓதனவனேஸ்வரர் (திருச்சோற்றுத்துறை),
வேதபுரீஸ்வரர் (திருவேதிகுடி),
கண்டீஸ்வரர் (கண்டியூர்),
புவனநாதர் (பப்பூந்துருத்தி),
நெய்யாடியப்பர் (நெய்த்தானம்).
தேர்திருவிழாயன்று யாரிடமும் சொல்லாமல் தேர் ஏறியதால் அனைத்து ஆறு ஊர் ஸ்வாமிகளும் ஊர் திரும்புவர்.
அவர்களை சமாதானபடுத்தி ஈவர்களை திருவையாறுக்கு அழைத்து வரும் விழா.
ஏழு மாமுனிவர்களான (சப்தரிஷிகள்)
காசியபர் (கண்டியூர்),
கௌதமர் (பூந்துருத்தி),
ஆங்கிரசர் (சோற்றுத்துறை),
குத்ஸர் (பழனம்),
அத்திரி (திருவேதிகுடி),
பிருகு (நெய்த்தானம்),
வசிட்டர் (ஐயாறு) ஆகியோர்
இங்கு இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
ஏழூர் திருவிழா
சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று திருவையாறு உறையும் ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஏழு ஊர்களுக்கு பல்லக்கில் செல்வார்.
அங்குள்ள இறைவன்கள் அவரை எதிர்கொண்டு அழைப்பார்கள். மறு நாள் காலை ஏழு சிவமூர்த்திகளும் ஊர்வலமாகக் கிளம்பி திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவார்கள்.
தில்லைஸ்தானம் என்னும் இடத்தில் ஆற்றங்கரையில் வாணவேடிக்கை நிகழும்.
திருவையாறில் ஒரு பொம்மை ஏழு தெய்வங்களுக்கும் பூச்சொரிந்து வரவேற்கும் சடங்கு நிகழும்.
இதுவே திருவையாறில் நடக்கும் சப்தஸ்தான விழா ஆகுமா
Comments
Post a Comment