அபிராமிஅந்தாதிபாடல் -13#

 #அபிராமிஅந்தாதிபாடல் -13#



வைராக்கியம் தரும்


பூத்தவளே 


புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, 


பின் கரந்தவளே,  


கறை கண்டனுக்கு

மூத்தவளே, 


என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,


மாத்தவளே 


உனை அன்றி 


மற்றோர் தெய்வம் வந்திப்பதே


ஈரேழு = பதினான்கு உலகங்களை படைத்தவளே


 (14 உலகம் - பூலோகம் (பூமி), பூமிக்கு மேல் 6 லோகங்கள் - புவர் லோகம், சுவர் லோகம் (சுவர்க்கம்), மஹர் லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம் (பிரம்மா இருப்பிடம்) மற்றும் பூமிக்கு கீழ் உள்ள 7 லோகங்கள் - அதள , விதள, சுதள, தளாதள, ரசாதள, மகாதள, பாதாள 


ஆதி சேஷன் இங்கு இருந்துக் கொண்டு அண்டத்தை தன தலையில் தாங்குகிறார்.) லோகங்கள்.),


படைத்த வண்ணம் அவற்றை காப்பவளே, 


பிரளயத்தின் போது அனைத்துலகினையும் தன்னுள் ஈர்த்துக்கொள்பவளே 


(இதுவே அழித்தல் எனப்படும்),


கறை கண்டன் - விஷம் அருந்தியதால் நீல நிற கறை உடைய கழுத்து கொண்ட சிவா பெருமான் - கண்டம் - கழுத்து


சிவ பெருமானுக்கு மூத்தவளே - ஆதி சக்தியிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றினர்.


விஷ்ணு என்றும் இளமை வடிவானவர். 


அவருக்கு அம்பாள் தங்கை.


மாத்தவளே - மலையத்வஜன், மதங்க முனி, காத்யாயன மஹரிஷி முதலியோர் பெருந்தவம் செய்து அம்பாளை தங்கள் மகளாய் பெற்றெடுத்தனர்.


உன்னை விட வேறு தெய்வத்தை நான் வணங்குவேனோ? என்று பட்டர் பாடுகிறார்.


இந்த மூன்று தொழில்களை 


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் -


ஸ்ருஷ்டிகர்த்ரீ பிரம்ம ரூபா, 


கோப்த்ரீ கோவிந்த ரூபிணி,


 சம்ஹாரினீ ருத்ரரூபா 


என்று வர்ணிக்கிறது.


அதாவது படைக்கும் பொருட்டு பிரம்மாவாகவும், 


காக்கும் பொருட்டு விஷ்ணுவாகவும்,


 அழிக்கும் பொருட்டு ருத்ரனாகவும் அம்பாள் வடிவெடுக்கிறாள்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.