#அம்பாள்உபாசனை#

 அம்பாளை நாம் பிராதிக்கவேண்டும் பிரபுசர்மா அண்ணாவின் அருமையான விளக்கம். 

 #ஶ்ரீகுருவாக்கிய_பரிபாலனம்*

#அம்பாள்உபாசனை#


""""""""""'''''''''"""""""""""""""""""""""

அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன். 

அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை.  

எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது. 

*"அம்மா! 

நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன். 

நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும். 

நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா" என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் - அதைவிடப் பெரிய, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை. 

எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு, 

நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல்லாமல் லேசாகிவிட்டால் அதைவிட பேரானந்தம் இல்லை.

‘ஈஶ்வர அநுக்ரஹம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? 

பரோபகாரமான, 

ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனஸு பக்குவப்பட்டால்தான், சித்த ஶுத்தி உண்டாகி, அந்த ஶுத்தமான சித்தத்தில் ஈஶ்வரனின் உருவத்தைப் பார்க்க முடியும். 

கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், 

*நாம் மனஸைக் கலக்கிக் கொண்டு ஈஶ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். 

பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனஸு தெளிவாகும்போது ஈஶ்வர ஸ்வரூபத்தை நாம் க்ரஹித்துக் கொண்டு, 

அவனுடைய அநுக்ரஹத்தைப் பெறமுடியும்.*

 _ஒருத்தன் பாபம் செய்ய அவனுடைய மனஸு, ஸந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. 

நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் ஸந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது,

 ‘அம்பிகே! 

இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு ஸந்தர்ப்பம் தராமல் நீ க்ருபை செய்தாய். அந்தக் க்ருபையை இவனுக்கும் செய்யம்மா’ என்று ப்ரார்த்திக்க வேண்டும்.

மநுஷ்யனைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் ஶக்திகள் காமமும் க்ரோதமும் என்றார் ....

ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். *பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது* ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. 

*_அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம்.


 அன்பே ஶிவம் என்பார்கள். 


நாம் எல்லோரும் அன்பே ஶிவமாக அமர்ந்திருக்கப் ப்ரயாஸைப்பட வேண்டும்._* 🙏🙏

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.