மாத்ருகா பஞ்சகம் முன்னுரை
மாத்ருகா பஞ்சகம்
என்பது ஆதிசங்கரரால் எழுதப்பட்ட ஒரு சிறிய கவிதை அல்லது ஸ்தோத்திரம்.
இந்த கவிதை தாய்மார்களின் பாசத்தையும், தியாகத்தையும் போற்றி,
மகனாக தன் தாயின் பெருமையை பாடும் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
இது ஆதிசங்கரரின் உணர்ச்சிகரமான வெளிப்பாடாகவும், தாய்மார்களுக்கு ஒரு மகனின் மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது.
மாத்ருகா பஞ்சகத்தின் அர்த்தம்:
இந்த ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர்,
தன் தாயின் பாசம்,
கருணை,
தியாகம்,
மற்றும் மகனைப் பெற்றெடுத்த தாயின் தியாகம் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க பாடுகிறார்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக எந்த அளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை இந்த கவிதை மூலம் உணர்த்து கிறார்.
மாத்ரு பஞ்சகம் முதல் ஸ்லோகம் ...
இந்த கவிதை, தாய்மார்களின் மகத்தான பாசத்தை போற்றும் ஒரு கவிதையாக பார்க்கப்படுகிறது.
இது தாய்மார்களுக்கு ஒரு மகனின் மரியாதையாகவும், நன்றி செலுத்துவதாகவும் உள்ளது.
மாத்ருகா பஞ்சகம்
பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம்.
அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது.
உலக பற்றை துறந்த பரமேஸ்வலனின் ஸ்வரூபமான ஆதிசங்கரரையும் அது விட்டு வைக்கவில்லை.
தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுதான்தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத்தறுவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை
கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார்.
அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது
*மாத்ருகா பஞ்சகம்* எனும் ஐந்து ஸ்லோகங்கள்.
இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டிக்காட்டி தாயின் மன்னிப்பை கோருகிறார்.
இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும்,
அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.
Comments
Post a Comment