Posts

Showing posts from July, 2025

இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக நகரத்தை அமைத்தார்

Image
முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக வைத்து நகரத்தை அமைத்தான்?.  உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான்,  இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன.  அவ்வளவு கோயில்கள் ஏன்?  அதற்கான அவசியம் என்ன?  சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. ஆகவே சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.  அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் கிடையாது.  லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.  இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.  இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம்  படையெடுத்து வந்த வந்தேறி  ராஜவின் படைகளால் கொள்ளைய டிக்கப்பட்டது. 500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது. #வருவாய்மேலாண்மை# #RevenueManagement# இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? எல்லாம் கடல் வாணிபம் ஏற்றும...

கர்ம வினைகளும்... இறைவனின் அனுக்கிரஹமும்...

Image
 கர்ம வினைகளும்... இறைவனின் அனுக்கிரஹமும்... உலகில் படைக்கப்பட்ட ஜீவர்களில், மனிதனுக்கு மட்டுமே,  ஒரு வாய்ப்பை இறைவன் அளித்திருக்கிறார்.  அது என்ன வாய்ப்பு அது நம்மை எதிர் நோக்கும் நமது கர்மாவின் செயல்களில், நாமே முடிவு எடுக்கும் ஒரு சுதந்திரம்.  அந்த முடிவுக்கு ஏற்ப நமது கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து ஒன்றை திருப்பி விடுகிறார்.  இது எவ்வளவு நுட்பமான திருப்பம் என்பதை உணரும் போது... மெய் சிலிர்த்துப் போகிறது  !  வினைகள் என்னவோ நம்முடையதுதான்,  ஆனால் அதை எந்த வரிசையில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை, நமது செயல்கள்தான் தீர்மானிக்கிறது என்பதை உணரும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. இதை ஒரு சின்ன உதாரணம் மூலம் அனுபவிப்போம்.  பழைய திரைப்படத்தில் வரும் ஆரம்ப காட்சியில்,  ஒரு சிறுவன் டீக்கடை முன்னே நின்று கொண்டிருப்பான். பசியில் இருக்கும் சிறுவன் யாராவது , ஏதாவது வாங்கிக் கொடுப்பார்களா என்று காத்திருப்பான்.  எவரும் அவனுக்கு உதவாத போது, அவனுக்கு இப்போது இரண்டு வாய்ப்புகளை இறைவன் அளிக்கிறார்,  ஒன்று, கடைக்காராரிடம் தனக்கு ஒரு வேலை கிடைக்கும...

கர்மா

Image
 கர்மாவைப் பற்றிய எனது அனுபவம். இன்று அம்பாளை பிராத்தனை செய்கிறேன் மற்றும் பூஜைகள் செய்கிறேன் என்றால்.  அதற்கு முன் சொல்லால் துயரத்தை அவள் எனக்கு கொடுத்து அவள் மீது நான் வைத்த பக்தியின்  தன்மையை சோதித்த செய்த பிறகு, அவள் என்னை ஏற்றுக் கொண்டால். எப்போது எனது கெட்ட கர்மா குறைந்த பிறகே, அவளை துதிப்பதற்கான எண்ணத்தை எண்ணில் உருவாக்கினால் என்பது சத்யமான வார்த்தை.  இது எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இதே அனுபவம் இருக்கும் என நம்புகிறேன். இது எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம். எனக்கு நிறைய சித்த வைத்தியர்கள் மற்றும் ஜோதிடகர்ளுடன் நட்பு உண்டு. அவர்களுடன் உறையாடும்போது அவர்கள் சொல்கிற சொல் #கர்மா# என்பதாகும். அவ்வாறு எனது சித்த மருத்துவர்ஒருவர், நாள்பட்ட வாதத்தை சரிசெய்வதில் வல்லவர். அவருக்கு யாரோ ஒருவர் நாள்பட்ட வாதம் என்றால் அது  அவரது கர்மாவை அனுபவிக்கிறார்.  அதை நீ சரி செய்தால் அந்த கர்மா உன்னை தாக்கும் என கூறி இருக்கிறார்கள்.  அதனால் இனி வைத்தியம் பார்பத்தில்லை என்று வந்து விட்டேன் என்று எங்களது சித்த குருப்பில் பதிவிட்டு இருந்தார். அதற்கு...

தான்# எனும் அகந்தை

Image
இதற்கு முன் பார்த்த மும்மலங்களில் முதலானது அகந்தை ஆணவம் கன்மம் மாயை  அதாவது #தான்# எனும் அகந்தை எங்கு மேல் எழும் என்பதை கல்யாண பந்தில் பரிமாறும் பதார்தங்களை காரணமாக வைத்து பெரியவாளின் அருமையான விளக்கம்.   கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக  வீடுகளில் போஜனம்  எப்படி சாப்பிடுறோம் என்று பெரியவா கேட்டா.   வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம்.   அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"   ஓ அதை கேக்கறேளா  பெரியவா.   மொதல்ல சாம்பார்,  அடுத்தது ரசம்,  அப்புறம் பாயசம்,  பட்சணம்,  கடைசியா மோர்  அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.   ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?  மகாபெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.  மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார்  என்று.    இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா.  அப்பறம் பாயசம், அதுக்கு எத...

#அபிராமிஅந்தாதிபாடல்-32#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-32# பலன் -  #துர்மரணம்#வராமல்#இருக்கும்# ஆசைக்கடலில் அகப்பட்டு,  அருளற்ற அந்தகன்  கைப் பாசத்தில் அல்லல்  பட இருந்தேனை,  நின் பாதம் என்னும் வாசக்கமலம்  தலைமேல் வலிய வைத்து  ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்லுவேன்,  ஈசர் பாகத்து நேரிழையே. பொருள்: ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே,  ஈசனின் இடப்பாகம் அதாவது வாமபாகம் வீற்றிருக்கும் அன்னை அபிராமி. நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன்.  ஆசை என்ற சம்சார சாஹரத்தில் தத்திளித்துக்கொண்டு இருக்கிறேன். சேஷாத்ரி சுவாமிகள் கூறியது மாதிரி பிறப்பு எனும் முதல் குச்சியை நட்ட நாம். அடுத்த குச்சியை எதற்காக எங்கு நடவேண்டும் என தெரியாமல் மனசஞ்சலப்பட்டு கொண்டு இருக்கிறது. கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன்.  அதற்கு உன்னிடம் சரணாகதி என்பது ஒரே தீர்வு. அப்போது,   நின் பாதமாகிய தாமரை மலரை  என் தலைமேல் நீயாகவே  (நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய்.  அப்படிப்பட்ட நின் நேசத்...

சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்கள்

Image
கர்மாவை கழிப்பது எவ்வாறு என்ற பதிவை பார்க்கும் முன். சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்களை காண்போம் சைவசித்தாந்தின் படி அவை மூன்று விஷயங்களை கூறுகிறது. மூன்று விஷயங்கள் எதை குறிக்கிறது. அவை  #ஆணவம்கன்மம்மற்றும்மாயை# ஆகியவை ஆன்மீகத்தில் மும்மலங்கள் என்று அழைக்கப் படுகின்றன.  இவை உயிர்களைப் பிணைத்து பிறவித் தொடரை உண்டாக்கு கின்றன.  ஆணவம் என்பது "நான்" என்ற அகங்காரம் அல்லது நான் பெரியவன் என்ற எண்ணம்,  கன்மம் என்பது செயல்கள்,  மாயை என்பது அறியாமை அல்லது உலக மாயை ஆகும்.  பரபிரம்மத்திலிருந்து ஒரு துளி,  நான் எனும் அகந்தை கொள்ளும் போது அடுத்த பிறவிக்கு அது வழி வகுக்கிறது. அதுவே அதன் முதல் உறை ஆகும். அது முற்பிறவில் சேர்த்த கர்மாவை பொறுத்து, அது எங்கு பிறக்க வேண்டும் என முடிவுச் செய்யபடுகிறது. அவ்வாறு பிறந்த பிறவியில் நல்ல வசதி வாய்ந்த இடத்தில் பிறந்த போது, நன்கு விபரம் தெரிய ஆரம்பிக்கும்போது. அதற்கு நான் எவ்வளவு பெரிய இடத்தில் பிறந்துள்ளேன். எங்க அப்பா யார், எனும் கர்வம் மேல் எழும் போது அதுவே அதன் இரண்டாவது உறை. அந்த மாதிரி கர்வம் கொள்ளுபோது இந்த உலகம் மாயை எ...

கர்மா

Image
 ஹிந்து சனாதனதர்மம் அடிக்கடி அடிக்கடி உபயோகிக்கின்ற ஒரு சொல் #கர்மா#. கர்மா என்பது என்ன என்பதே இந்த பதிவு. கர்மா என்பது பற்றி எனது நண்பரின் அனுபவ பதிவு. கர்மா என்றால் என்ன  கர்மா என்பது ஒரு விதமான செயல்  அதாவது நல்லது மற்றும் தீயது  அதாவது நீங்கள் செய்யக்கூடிய நல்ல மட்டும் தீய செயல் என்பதாம்  நீங்கள்...  நல்லது செய்தால் நல்ல கர்ம வினை பலன் உண்டாகும்  தீயது செய்தால் தீய கர்ம வினை பலன் உண்டாகும்  அதாவது  எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று சொல்வோம் அல்லவா . அதை தான்  முள்ளை முள்ளால் எடுப்பது போல  வைரத்தை வைரத்தால் அறுப்பது போல  நீங்கள் செய்யக்கூடிய வினைக்கு தகுந்த எதிர்வினை உண்டு என்பதாம்  (((ஸ்ரீ கணேஷ் ஜோதிடர் ..)))) கர்மா என்பது ஒரு சமஸ்கிருத சொல். அது "செயல்" அல்லது "தொழில்" எனப் பொருள்படும்.  இந்து மதங்களில், கர்மா என்பது ஒருவரின் செயல்களின் விளைவுகளையும், அவை எதிர்காலத்தில் அந்த நபரின் தலைவிதியை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் குறிக்கிறது.  கர்மா என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது.  நாம் செய்யும...
Image
 குரு என்பவர் யார், அவர் நம்மை எவ்வாறு செம்மைபடுத்துவார். சிஷ்யன் என்பவர் யார் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.  குருவும் சீடனும் ஒரு மெழுகுவர்த்தி மற்றும் அதன் சுடரைப் போல ஒன்றுதான்.  சீடன் தீவிர ஆர்வமுள்ளவனாக இல்லாவிட்டால், அவனை சீடன் என்று அழைக்க முடியாது.  ஒரு குரு அன்பும் தன்னலம் அற்றவனாகவும் இல்லாவிட்டால்,  அவனை குரு என்று அழைக்க முடியாது.  உண்மை மட்டுமே யதார்த்தத்தை உருவாக்குகிறது, பொய்யை அல்ல. குரு என்பவர் ஞானம், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் ஒரு நபர். சிஷ்யன் அல்லது சீடர் என்பவர் குருவிடம் இருந்து கற்றுக்கொள்பவர் அல்லது அறிவு பெறுபவர்.  குருவும், சீடரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். குரு:- குரு என்பவர் ஞானம், அறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் ஒரு நபர். சிஷ்யன் அல்லது சீடர் என்பவர் குருவிடம் இருந்து கற்றுக்கொள்பவர் அல்லது அறிவு பெறுபவர்.  குருவும், சீடரும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.. சிஷ்யன் (சீடர்): குருவின் அறிவுரைகளைப் பின்பற்றி, ஞானத்தைப் பெற விரும்புபவர் சீடர் ...

மனதை திறக்கும் சாவி எது?.

Image
 மனதை திறக்கும் சாவி எது?. அருமையான விளக்கம். *நமது தெய்வீக இயல்பின் பிரகாசத்தால் பிரகாசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?  குரு இன்று ஒரு விலைமதிப்பற்ற உதாரணத்தின் மூலம் நம்மை அன்புடன் அறிவூட்டுகிறார்!* எந்தத் தடையும் இல்லாதபோதும் சூரியன் பிரகாசமாக பிரகாசிக்கிறது, ஆனால் நாம் ஒரு வீட்டைக் கட்டி, கதவுகள் மற்றும் ஜன்னல்களால் பொருத்தி, அனைத்தையும் மூடும்போது, ​​இருள் மட்டுமே இருக்கும்,  ஆனால் அந்த வீட்டிற்குள் வெளிச்சம் இல்லை.  சூரியனின் ஒளி வீட்டிற்குள் ஊடுருவ வேண்டும் என்று நாம் விரும்பினால், இரண்டு விஷயங்களில் ஒன்றை நாம் செய்ய வேண்டும்.  நாம் மேற்புறத்தை அகற்ற வேண்டும்,  அதாவது,  தேஹ பிராந்தி  (ஒன்று என்பது உடல் என்ற மாயை)யை நாம் அகற்ற வேண்டும். மேற்புறத்தை இடிக்க வேண்டும்,  இது அஹம்காரம் அல்லது ஈகோ மற்றும் மமகாரம் அல்லது பற்றுதல் ஆகியவற்றால் ஆனது.  மாற்றாக, நாம் ஒரு கண்ணாடியைப் பொருத்தி, வீட்டிற்குள் சூரியன் பிரதிபலிப்பதைக் காணலாம். பின்னர் கண்ணாடியை நகர்த்துவதன் மூலம் வீட்டின் இருண்ட உட்புறத்தில் ஒளியைப் பரப்ப முடியும். ஆனால், சூரியனில் இர...

நாம் எதற்காக பிறந்தோம்?

Image
நாம் எதற்காக பிறந்தோம் என்பதை விளக்கும் அழகான ஒரு சிறுகதை மூலமாக விளக்குகிறார் சேஷாத்ரி ஸ்வாமிகள். ஒரு தினக் கூலியாக துன்பப்பட்டுக் கொண்டிருந்த விவசாயி, அந்த ஊரில் வந்து தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் சென்று தனது நிலையை சொல்லி வருந்தினார்.  முனிவரும் அவருடைய நிலையைக் கேட்டறிந்து, அவருக்கு வேண்டுவது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி தனது குடும்பத்திற்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சிறு நிலம் ஒன்று இருந்தால் போதும் என்றார்.முனிவரும் அவரை காலை வர சொல்லி அனுப்பிவைத்தார்.  காலையில் வந்த விவசாயிடம் இரு சிறு குச்சிகளை கொடுத்து, '  அப்பா..நீ கேட்டது கிடைக்கும். இப்போது  சூர்ய உதயமாகி இருக்கிறது. சூர்ய மறைவுக்கு முன் நீ உன் இடத்தை தேர்வு செய்துகொள். முதல் குச்சியை நீ தேர்ந்தெடுக்கும் இடத்தின் ஆரம்பத்திலும் இரண்டாவது குச்சியை அந்த இடத்தின் முடிவுலும் ஊன்றி விட்டு, சூர்ய மறைவுக்கு முன் இங்கு வந்துவிட வேண்டும். அப்படி வந்து விடும் படசத்தில் நீ தேர்ந்தெடுத்த இடம் உன்னுடையதாகிவிடும்.' என்றார்.  விவசாயி, முனிவரை வணங்கிய பி்ன்னர், குச்சிகளை எடுத்துக் கொண்டு மகி...

தேவியின் திருவடித் தியானம் :

Image
 தேவியின் திருவடித் தியானம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-1 படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மா தான். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன.  இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது.  அந்த பராசக்தியான துரீய  (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம். இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை; மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான பக்குவம் இல்லை.  ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்தான்.  ஆனாலும் முதலடி எடுத்து வைக்கத்தான் வேண்டும். நம் மனசுக்கு ஹிதமாக, ரஞ்சகமாக இருந்தால்தான் முதலடியே வைப்போம்.  அப்படி அத்யாத்ம மார்க்கத்தில் ஹிதமான ஒரு முதலடி இருக்கிறது. அதுவே அம்பிகையின் திருவடி.  எவ்வித சிரமுமின்றி எவர...

ஐந்து வகை ஸ்நானங்கள்

Image
 ஐந்து வகை ஸ்நானங்கள்    காஞ்சி மகாபெரியவர்… அருளுரை காஞ்சி மகாபெரியவர் சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது.  ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது…  இது, ‘#வாருணம்#’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை,  இரண்டாம்பட்சம்தான்.  இதற்கு அப்பறம் வருவதுதான், ‘#கௌண#மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்!  ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.  இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர்.  அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை #பஸ்மோத்தூளனம்# என்கிறோம்.  பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண...

சரணாகதி தத்துவம்

Image
சரணாகதி தத்துவத்தை தனது100 அபிராமி அந்தாதி பாடல்களிலும் வெவ்வேறு விதமாக கூறுகிறார் அபிராமி பட்டர். அதை தான் சங்கர பகவத்பாதாள் தனது 90வது ஸ்லோகத்தில் கூறியுள்ளார். சௌந்தர்ய லஹரியின் 90வது ஸ்லோகம்,  "நிமஜ்ஜன் மஜ்ஜீவஃ கரணசரண்: ஷட்சரண்ஸதாம்".  இதன் பொருள்,  "தாயே! இந்த என்னுடைய மனம், உடல், மற்றும் புலன்கள், ஆகியவை எப்போதும் உன் பாத கமலங்களைச் சுற்றிவரும் வண்டுகளாக இருக்க வேண்டும்" என்பதாகும். அதன் 90வது ஸ்லோகம்,  மனிதனின் மனம், புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அம்பிகையின் பாதங்களில் சரணடையச் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.  இந்த ஸ்லோகத்தின் பொருள்:  நிமஜ்ஜன்:  மூழ்கிவிடுவது, ஈடுபடுவது மஜ்ஜீவ:  என்னுடைய உயிர், மனம் கரண சரண்: புலன்கள் மற்றும் பாதங்கள் ஷட்சரண்ஸதாம்:  ஆறு கால்களை உடைய வண்டுகள். இது இங்கு அம்பிகையின் பாதங்களைச் சுற்றி வரும் வண்டுகளைக் குறிக்கிறது. இந்த ஸ்லோகத்தில், அம்பிகையின் பாதங்களைத் தன் மனதாலும், புலன்களாலும் விடாமல் பற்றிக் கொள்ளும் பக்தனின் நிலை கூறப்படுகிறது. அவன் அருளால் அவன் தால் வணங்கி. அவன் அருளாலே அவன் தாள் வணங...
Image
அன்னைத் தெய்வம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள்.  இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள்.  தைத்திரீயோபநிஷதமும், ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக’ என்கிறது.  இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது. தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும்.  சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம். எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது.  எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது. பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு.  அம்மாவிடம் நமக்...

#அம்பாளின்அனுகிரஹம்#

Image
 #அம்பாளின்அனுகிரஹம்# அம்பாளின் அனுகிரஹம் நமக்கு இருக்கா என்பதற்கு நமது வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் சான்றாக இருக்கும் என்பதை ஜோசியர் திருமகேஷ் சொல்லக் கேட்டுள்ளேன். அதில் சில கோவிலுக்கு செல்லும்போது சுவாமிக்கு தீபராதனை நடப்பது. சுவாமி புறப்பாடு ஆகி அம்பாள் நமது நேரில் வருவாள் என்பது போன்ற விஷயங்கள் நடந்தால் சுவாமியின் அருள் நமக்கு உள்ளது என்பதை உணரலாம் என்று அவர் கூறுவார். அதே மாதிரி நிகழ்வு நடந்ததை நான் தங்களுக்கு பகிர்கிறேன். சில சமயம் ஆத்மார்த்த பக்திக்கு அம்பாள் செவிச்சாக்கிறாள். ஆஷாட நவராத்திரி தினசரி பாராயணம் நடக்கிறது. ஞாயிறு அன்று தீடீரென்று மனதில் ஒரு யோசனை வாராஹி அம்பாளை தரிசிக்கலாம் என்று மனதில் ஒரு எண்ணம். உடனே ஷெட்டகரை அழைத்து விசாரித்த போது சாயங்காலம் ஆறு மணிமேல் அம்பாளுக்கு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடக்கும் எனவே அதற்கு தகுந்தமாதிரி கிளம்புமாறு கூறினார். நானும் குடும்பத்தினரும் அம்பாளை தரிசிக்க அம்பத்தூர் கள்ளிகுப்பம் ஶ்ரீயோமாயா புவனேஸ்வரி பீடத்தை நோக்கி பயணம். சரியாக மாலை 6.10மணிக்கு உள்ளே நுழையும் போது மேலே சந்நிதி திறந்து ஆகிவிட்டது. மேல் சென்று தரிசிக்கல...