இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக நகரத்தை அமைத்தார்
முப்பாட்டன் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழன் ஏன் கோவிலை மையமாக
வைத்து நகரத்தை அமைத்தான்?.
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண்தான்,
இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன.
அவ்வளவு கோயில்கள் ஏன்?
அதற்கான அவசியம் என்ன?
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
ஆகவே சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்.
அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
கங்கை கொண்ட சோழபுரமும்தான்.
அப்போது வட அமெரிக்காவும்
தென் அமெரிக்காவும் கிடையாது.
லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது.
இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் படையெடுத்து வந்த வந்தேறி ராஜவின் படைகளால் கொள்ளைய டிக்கப்பட்டது.
500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.
#வருவாய்மேலாண்மை#
#RevenueManagement#
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது.
அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.
#சோழநாடுசோறுடைத்து#
எங்கும் மூன்று போகம் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டு இருந்தது.
வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை தங்கத்தை ,சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.
மலேயா காடுகளிலிருந்தும்,
மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
#ஏன்கோவிலைகட்டினார்கள்..?#
Why they are constructed more temples.
தமிழர்கள் ஏன், “கோயில் கோயில்” என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் ...
அவரவர் ஆண்ட பொழுது சில மருத்துவமனை கட்டி, சில கல்விச்சாலை அமைத்து… பலப்பல கோயில்களை கட்டினார்கள்..!
கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அந்தந்த அரசர்கள்… அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?*
இப்படித்தான் உலகின் குருவாக தமிழகம் ஆனது.
#நிதிமேலாண்மை-
#FinancialManagement#.
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது ...வரி வசூல் என்ன,
அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு,
மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு என்று ...
வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வைத்தார்கள்.
Comments
Post a Comment