சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்கள்
கர்மாவை கழிப்பது எவ்வாறு என்ற பதிவை பார்க்கும் முன்.
சைவசிந்தாந்தம் கூறும் மூன்று மலங்களை
காண்போம்
சைவசித்தாந்தின் படி அவை மூன்று விஷயங்களை கூறுகிறது.
மூன்று விஷயங்கள் எதை
குறிக்கிறது.
அவை
#ஆணவம்கன்மம்மற்றும்மாயை#
ஆகியவை ஆன்மீகத்தில் மும்மலங்கள் என்று அழைக்கப் படுகின்றன.
இவை உயிர்களைப் பிணைத்து பிறவித் தொடரை உண்டாக்கு கின்றன.
ஆணவம் என்பது "நான்" என்ற அகங்காரம் அல்லது நான் பெரியவன் என்ற எண்ணம்,
கன்மம் என்பது செயல்கள்,
மாயை என்பது அறியாமை அல்லது உலக மாயை ஆகும்.
பரபிரம்மத்திலிருந்து ஒரு துளி,
நான் எனும் அகந்தை கொள்ளும் போது அடுத்த பிறவிக்கு அது வழி வகுக்கிறது.
அதுவே அதன் முதல் உறை ஆகும்.
அது முற்பிறவில் சேர்த்த கர்மாவை பொறுத்து,
அது எங்கு பிறக்க வேண்டும் என முடிவுச் செய்யபடுகிறது.
அவ்வாறு பிறந்த பிறவியில் நல்ல வசதி வாய்ந்த இடத்தில் பிறந்த போது, நன்கு விபரம் தெரிய ஆரம்பிக்கும்போது.
அதற்கு நான் எவ்வளவு பெரிய இடத்தில் பிறந்துள்ளேன்.
எங்க அப்பா யார், எனும் கர்வம் மேல் எழும் போது அதுவே அதன் இரண்டாவது உறை.
அந்த மாதிரி கர்வம் கொள்ளுபோது இந்த உலகம் மாயை என்ற எண்ணத்தை எண்ண மறக்கிறது.
அதுவே அதன் அடுத்த மூன்றாவது உறை.
இந்த மூன்று உறைக்குள் நாம் இருக்கும் போது,
நாம் இறைவனை அடைவது கடினம்.
இந்த மூன்று உறைக்களை நீக்கி நான் எனும் அகந்தை நம்முள் அடங்கினால் இறைவனைக் காணலாம் என்கிறார் மஹாபெரியவா.
இதற்கு உதாரணம்.
உண்ட உணவு மலமாகி வெளிப்படுவதை அறிவோம்.
இது ஒரு கழிவுப்பொருள்.
வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்றும் உடல் வெளிப்படுத்தும் மலங்கள்.
அதுபோல உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று.
அவற்றைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள்
காமம், வெகுளி, மயக்கம்
எனக் காட்டினர்.
சமயநெறி இவற்றை மும்மலம் அவை
ஆணவம், கன்மம், மாயை
எனக் காட்டியது.
இதற்கு விளக்கம் சொல்லும் சங்கராச்சாரியார்
சூரபன்மன் காமத்தால் அழிந்தான்,
சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான்,
தாரகன் மாயையால் அழிந்தான் என விளக்குகிறார்.
இவை மூன்றும் மேலும்போது நாம் நிலை மறந்து அசுர நிலைக்கு மாறுகிறோம்.
அவ்வாறு இல்லாமல் அவை நம்முள் ஒடங்குபோது உயர்ந்த நிலைக்கு செல்கிறோம். அதனால் தான் பல ஞானிகள் தான் மிக சிறியவன் என்ற எண்ணத்திலே வாழ்ந்து உள்ளனர்.
சிவபெருமானின் திரிசூலம் இம்மூன்றையும் அழிக்கும் ஆயுதம் என்கின்றனர்.
சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும் மறைநெறி என்கின்றனர்.
இதை விளக்கவே இந்த கர்மா என்ற பதிவை பதிவிடுக்கிறேன்.
Comments
Post a Comment