#அம்பாளின்அனுகிரஹம்#

 #அம்பாளின்அனுகிரஹம்#



அம்பாளின் அனுகிரஹம் நமக்கு இருக்கா என்பதற்கு நமது வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் சான்றாக இருக்கும் என்பதை ஜோசியர் திருமகேஷ் சொல்லக் கேட்டுள்ளேன்.


அதில் சில கோவிலுக்கு செல்லும்போது சுவாமிக்கு தீபராதனை நடப்பது.


சுவாமி புறப்பாடு ஆகி அம்பாள் நமது நேரில் வருவாள் என்பது போன்ற விஷயங்கள் நடந்தால் சுவாமியின் அருள் நமக்கு உள்ளது என்பதை உணரலாம் என்று அவர் கூறுவார்.


அதே மாதிரி நிகழ்வு நடந்ததை நான் தங்களுக்கு பகிர்கிறேன்.


சில சமயம் ஆத்மார்த்த பக்திக்கு அம்பாள் செவிச்சாக்கிறாள்.


ஆஷாட நவராத்திரி தினசரி பாராயணம் நடக்கிறது.


ஞாயிறு அன்று தீடீரென்று மனதில் ஒரு யோசனை வாராஹி அம்பாளை தரிசிக்கலாம் என்று மனதில் ஒரு எண்ணம்.


உடனே ஷெட்டகரை அழைத்து விசாரித்த போது சாயங்காலம் ஆறு மணிமேல் அம்பாளுக்கு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடக்கும் எனவே அதற்கு தகுந்தமாதிரி கிளம்புமாறு கூறினார்.


நானும் குடும்பத்தினரும் அம்பாளை தரிசிக்க அம்பத்தூர் கள்ளிகுப்பம் ஶ்ரீயோமாயா புவனேஸ்வரி பீடத்தை நோக்கி பயணம்.


சரியாக மாலை 6.10மணிக்கு உள்ளே நுழையும் போது மேலே சந்நிதி திறந்து ஆகிவிட்டது.


மேல் சென்று தரிசிக்கலாம் என உத்தரவு. 


மேலே சென்றால் அம்பாள் புவனேஸ்வரி மற்றும் வாராஹிக்கு அலங்காரம் முடிந்து அர்ச்சனை நடந்துக் கொண்டு இருந்தது.


அம்பாளை நல்ல தரிசனம் முடிந்தது கீழே பிரசாதம் பெற்றுக்கொண்டு கிளம்பும் பொழுது தான் எனக்கு இன்று வளர்பிறை பஞ்சமி என்பது தெரியவந்தது.


வளர்பிறை பஞ்சமியில் தனது பக்தன் தன்னை தரிசிக்க வேண்டும் என நினைத்து, 


என மனத்தில் அந்த ஆசையை தூண்டி எனது குடும்பத்துருடன் தன்னை தரிசிக்க வருமாறு ஆணையிட்டாள் என்பதை உணர முடிந்தது.


இதில் நாம் எண்ணுவது நடப்பத்தில்லை.


அதற்கு அம்பாளின் அநுகிரஹம் வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.


காரணம் கோவில் வாசலில் குடி இருப்பார் ஆனால் கோவிலில் சென்று சுவாமியை தரிசிக்கும் எண்ணம் வராது ஆனால் வெளியூரிலிருந்து சுவாமியை தரிசிக்க வருவார்கள்.


இதை ஆன்மீக பயணத்தில் என்னை அம்பாளுடன்  இணைத்த பிறகு இதை என்னால் உணர முடிகிறது.


சகலுமும் அவளே அதில் ஒரு சிறு துரும்பு அல்லது கருவி நாம்.


இதை உணர்ந்தால் நம்மில் நாம் எனும் #அகந்தைதலைக்குஏறாது#.


திருவையாறில் தர்மசவர்த்தினி சந்நிதியில் பாடும் பாடல் ஓன்று ஞாபகத்திற்கு வருகிறது.


தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது


தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது


வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்


திருவையாறு தனில் மேவும் தர்சமவர்த்தினி


வரம் அருள் தாயே – 


இவ்வையகம் வாழ்ந்திட 


வரம் அருள் தாயே -


(வர வேண்டும்  வர வேண்டும் தாயே ) என தொடங்கும்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.