நாம் எதற்காக பிறந்தோம்?


நாம் எதற்காக பிறந்தோம் என்பதை விளக்கும் அழகான ஒரு சிறுகதை மூலமாக விளக்குகிறார் சேஷாத்ரி ஸ்வாமிகள்.

ஒரு தினக் கூலியாக துன்பப்பட்டுக் கொண்டிருந்த விவசாயி, அந்த ஊரில் வந்து தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் சென்று தனது நிலையை சொல்லி வருந்தினார். 

முனிவரும் அவருடைய நிலையைக் கேட்டறிந்து, அவருக்கு வேண்டுவது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி தனது குடும்பத்திற்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சிறு நிலம் ஒன்று இருந்தால் போதும் என்றார்.முனிவரும் அவரை காலை வர சொல்லி அனுப்பிவைத்தார். 

காலையில் வந்த விவசாயிடம் இரு சிறு குச்சிகளை கொடுத்து, ' 

அப்பா..நீ கேட்டது கிடைக்கும். இப்போது  சூர்ய உதயமாகி இருக்கிறது. சூர்ய மறைவுக்கு முன் நீ உன் இடத்தை தேர்வு செய்துகொள். முதல் குச்சியை நீ தேர்ந்தெடுக்கும் இடத்தின் ஆரம்பத்திலும் இரண்டாவது குச்சியை அந்த இடத்தின் முடிவுலும் ஊன்றி விட்டு,

சூர்ய மறைவுக்கு முன் இங்கு வந்துவிட வேண்டும். அப்படி வந்து விடும் படசத்தில் நீ தேர்ந்தெடுத்த இடம் உன்னுடையதாகிவிடும்.' என்றார். 

விவசாயி, முனிவரை வணங்கிய பி்ன்னர், குச்சிகளை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினான். ஊர் எல்லையை தாண்டியதும் ஒரு இடத்தில் முதல் குச்சியை ஊன்றி விட்டு, அடுத்த குச்சியை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்... என்று பயணத்தை துவக்கியவன் மறு எல்லையை தேடி சென்றடைந்த போது, 

 பொழுது போய் விட்டதை உணர்ந்ததும், அங்கேயே அந்தக் குச்சியை ஊன்றி விட்டு, . அவசர அவசரமாக திரும்பியவன், இருளில் கால் தவறி ஒரு கிணற்றில் வீழ்ந்து இறந்து விட்டான்.

இதுதான் நம் வாழ்விலும் நடக்கிறது, பிறப்பு எனும் முதல் குச்சியை ஊன்றியாகி விட்டது. 

அடுத்த குச்சி என்ன என்பதை உணராமலையே அதாவது இந்த பிறவியை எடுத்ததன் நோக்கம் என்பதை உணராமல் சம்சார சாகரத்தில் உழன்று மீண்டும் மறு ஜென்மம் எடுகிறோம் என்கிறார் சுவாமிகள்.

அதாவது மறு குச்சியை எங்கு ஊன்றுவது என்று தெளிவு இல்லாமல் தவித்து, நமக்கான கடைமைகளை முடித்து இறைவனிடம் திரும்பாமல், 

இந்த உலகத்திலேயே மரித்து, மீண்டும், மீண்டும் பிறவியில் சிக்கிக் கொள்கிறோம்...

அந்த விவசாயியை போல...

இதைதான் பகவத் பாதாள் 

புனரபி ஜெனனம் புரனபி மரணம் என்றாரோ.

இந்த பிறவிப்பயனின் நோக்கத்தை அறிந்து அதை நோக்கி பயணிக்க குருவின் அருளை வேண்டுவோம்.

அவரே நம்மை  நல்வழிபடுத்துபவர்.

#ஸ்ரீசேஷாத்ரிசுவாமிகளின்திருவடிகளேசரணம்...சரணம்#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.