கர்மா

 கர்மாவைப் பற்றிய எனது அனுபவம்.


இன்று அம்பாளை பிராத்தனை செய்கிறேன் மற்றும் பூஜைகள்


செய்கிறேன் என்றால். 


அதற்கு முன் சொல்லால் துயரத்தை அவள் எனக்கு கொடுத்து அவள் மீது நான் வைத்த பக்தியின்  தன்மையை சோதித்த செய்த பிறகு, அவள் என்னை ஏற்றுக் கொண்டால்.


எப்போது எனது கெட்ட கர்மா குறைந்த பிறகே, அவளை துதிப்பதற்கான எண்ணத்தை எண்ணில் உருவாக்கினால் என்பது சத்யமான வார்த்தை. 


இது எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இதே அனுபவம் இருக்கும் என நம்புகிறேன்.


இது எனது வாழ்வில் எனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம்.


எனக்கு நிறைய சித்த வைத்தியர்கள் மற்றும் ஜோதிடகர்ளுடன் நட்பு உண்டு.


அவர்களுடன் உறையாடும்போது அவர்கள் சொல்கிற சொல் #கர்மா# என்பதாகும்.


அவ்வாறு எனது சித்த மருத்துவர்ஒருவர், நாள்பட்ட வாதத்தை சரிசெய்வதில் வல்லவர். அவருக்கு யாரோ ஒருவர் நாள்பட்ட வாதம் என்றால் அது  அவரது கர்மாவை அனுபவிக்கிறார். 


அதை நீ சரி செய்தால் அந்த கர்மா உன்னை தாக்கும் என கூறி இருக்கிறார்கள்.


 அதனால் இனி வைத்தியம் பார்பத்தில்லை என்று வந்து விட்டேன் என்று எங்களது சித்த குருப்பில் பதிவிட்டு இருந்தார்.


அதற்கு மற்று ஒரு வைத்தியர் கூறினார் அறுபத்து கலையை கற்க வேண்டும் என்றால் பகவான் அனுகிரஹம் இருந்தால் அதை கற்று குரு ஸ்தானத்தில் இருக்க முடியும்.


குரு ஸ்தானத்தில் இருந்து வைத்தியம் பார்க்க மாட்டேன் என்பது தவறு. 


அவரது கர்மா கழியும் தருவாயில் தான் அவர் தங்களிடம் வைத்தியம் பார்க்க வருவார்கள்.


அதனால் வைத்தியத்தில் வரும் பணத்தில் ஒரு பங்கை தர்ம காரியங்களுக்கு செலவழிங்கள் என்பதே அதற்கு பிராயசித்தமே தவிர.


அதை தவிர்த்து வைத்தியம் செய்யமாட்டேன் என்பது சரியான முடிவில்லை என கூறி விளக்கினார்.


தெரிந்த வைத்தியத்தை செய்ய மாட்டேன் என்பது பாபத்தை சேர்த்துக் கொள்வதற்கு சமம் ஆகும் என்றும் கூறினார்.


அதே போல் எனது ஜோதிட நண்பரின்  பதிவு #கர்மாவலியது#என்பதைப் பற்றியது.


இது அவரது பதிவு தங்களின் பார்வைக்கு.


ஜோதிடத்தில் இருந்து விலகி விட்டு 


சராசரி மனித வாழ்க்கைக்கு செல்லலாம் 


ஏதாவது ஒரு தொழில்


அல்லது 


ஏதாவது ஒரு உத்தியோகம் சென்று வாழ்க்கையை நடத்தலாம்


என பலமுறை முயற்சி செய்திருக்கிறேன் 


ஆனால் இயலவில்லை...


கர்மா வலியது..


எனவே நமது சனாதனதர்மம் என்பது #கர்மா# என்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து காலசக்கரம் நகர்க்கிறது என்பதை விளக்குகிறது.


இதற்கு மேற்கூறிய  எடுத்துக் காட்டுகளாக சான்றாக இருக்கும் என  திடமாக நம்புகிறேன்.


#கர்மாவலியது#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.