#அபிராமிஅந்தாதிபாடல்-32#

 #அபிராமிஅந்தாதிபாடல்-32#


பலன் - 


#துர்மரணம்#வராமல்#இருக்கும்#


ஆசைக்கடலில் அகப்பட்டு, 


அருளற்ற அந்தகன் 


கைப் பாசத்தில் அல்லல்


 பட இருந்தேனை, 


நின் பாதம் என்னும்


வாசக்கமலம் 


தலைமேல் வலிய வைத்து 


ஆண்டு கொண்ட


நேசத்தை 


என் சொல்லுவேன், 


ஈசர் பாகத்து நேரிழையே.


பொருள்:


ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே, 


ஈசனின் இடப்பாகம் அதாவது வாமபாகம் வீற்றிருக்கும் அன்னை அபிராமி.


நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன். 


ஆசை என்ற சம்சார சாஹரத்தில் தத்திளித்துக்கொண்டு இருக்கிறேன்.


சேஷாத்ரி சுவாமிகள் கூறியது மாதிரி பிறப்பு எனும் முதல் குச்சியை நட்ட நாம்.


அடுத்த குச்சியை எதற்காக எங்கு நடவேண்டும் என தெரியாமல் மனசஞ்சலப்பட்டு கொண்டு இருக்கிறது.


கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன். 


அதற்கு உன்னிடம் சரணாகதி என்பது ஒரே தீர்வு.


அப்போது,  


நின் பாதமாகிய தாமரை மலரை 


என் தலைமேல் நீயாகவே 


(நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய். 


அப்படிப்பட்ட நின் நேசத்தை நான் என்ன என்று சொல்வது?.


தாயானவள் தனது குழந்தை துன்ப படும்போது தானகவே அந்த துன்பத்தை போக்குபவள்.


காரணம் அவள் கருணை உள்ளம் கொண்டவள் என்பதை இந்த பாடலின் மூலம் நமக்கு விளக்கிறார் அபிராமி பட்டர்.


அதன் விளைவே அபிராமி அந்தாதி எனும்  தமிழ் அந்தாதி உருவானது.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.