கர்ம வினைகளும்... இறைவனின் அனுக்கிரஹமும்...

 கர்ம வினைகளும்...

இறைவனின் அனுக்கிரஹமும்...


உலகில் படைக்கப்பட்ட ஜீவர்களில், மனிதனுக்கு மட்டுமே, 


ஒரு வாய்ப்பை இறைவன் அளித்திருக்கிறார். 


அது என்ன வாய்ப்பு


அது நம்மை எதிர் நோக்கும் நமது கர்மாவின் செயல்களில், நாமே முடிவு எடுக்கும் ஒரு சுதந்திரம். 


அந்த முடிவுக்கு ஏற்ப நமது கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து ஒன்றை திருப்பி விடுகிறார். 


இது எவ்வளவு நுட்பமான திருப்பம் என்பதை உணரும் போது... மெய் சிலிர்த்துப் போகிறது  ! 


வினைகள் என்னவோ நம்முடையதுதான், 


ஆனால் அதை எந்த வரிசையில் அனுபவிக்கப் போகிறோம் என்பதை, நமது செயல்கள்தான் தீர்மானிக்கிறது என்பதை உணரும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. இதை ஒரு சின்ன உதாரணம் மூலம் அனுபவிப்போம். 


பழைய திரைப்படத்தில் வரும் ஆரம்ப காட்சியில், 


ஒரு சிறுவன் டீக்கடை முன்னே நின்று கொண்டிருப்பான். பசியில் இருக்கும் சிறுவன் யாராவது , ஏதாவது வாங்கிக் கொடுப்பார்களா என்று காத்திருப்பான். 


எவரும் அவனுக்கு உதவாத போது, அவனுக்கு இப்போது இரண்டு வாய்ப்புகளை இறைவன் அளிக்கிறார், 


ஒன்று, கடைக்காராரிடம் தனக்கு ஒரு வேலை கிடைக்குமா ? என்று கேட்கலாம்...


கடைகாரர் சரி எனும் பட்சத்தில் வேலையோடு அவன் பசியும் தீர வாய்ப்பிருக்கிறது. 


இரண்டாவது கடைக்காரர் அந்தப் பக்கம் திரும்பும் போது கடையில் இருக்கும் ஒரு ரொட்டியை  அவருக்குத் தெரியாமல் எடுத்து பசியாற்றிக் கொள்ளலாம்.


முதலாவதை அந்த சிறுவன் செய்திருக்கும் பட்சத்தில் படத்தின் பெயர் ' உழைப்பாளி ' எனவும்...


இரண்டாவதை செய்திருக்கும் பட்சத்தில் படத்தின் பெயர் ' திருடன் ' எனவும் மாறியிருக்க் கூடும். 


இப்படி ஒரு பெரும் மாற்றம் நம் வாழ்வில் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நம் வினைகளில் இருக்குமா என்பதை அறிய மாட்டோம். 


ஆனால் மாற்றத்திற்கான் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 


இதிலிருந்து விடபட  வேண்டுமெனில்  நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை நாமே எடுக்க வேண்டும் என்பதிலொன்றும் மாற்றமில்லை,


 ஆனால் அந்த நொடிக்கு முன், இறைவனிடம் நம் சூழலை ஒப்படைத்து, 


ஒரு பிரார்த்தனையை வைக்க வேண்டும். 


இப்போதும் முடிவை நாம்தான் எடுக்கிறோம் ... 


ஆனால் இறைவனின் அனுக்கிரகத்தோடு...! 


நண்பரின் பதிவு என்னை கவர்ந்தது.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.