அபிராமிஅந்தாதிபாடல்97

 #அபிராமிஅந்தாதிபாடல்97


.


ஆதித்தன், 


அம்புலி, 


அங்கி குபேரன், 


அமரர்தம் கோன்,


போதிர் பிரமன் 


புராரி, 


முராரி 


பொதியமுனி,


காதிப் பொருபடைக் கந்தன், 


கணபதி, 


காமன் 


முதல்


சாதித்த புண்ணியர் 


எண்ணிலர் போற்றுவர், 


தையலையே     


#பொருள்.


என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, 


அவற்றின் பயனையும் அடைந்த


 சூரியன், 


சந்திரன், 


அக்கினி, 


குபேரன், 


தேவர்களின் தலைவன் இந்திரன்,


 தாமரை மலரில் உதித்த பிரம்மன்,


 முப்புரங்களை எரித்த சிவபெருமான்,


 முரனைத் தண்டித்த திருமால்,


 பொதியமலை முனியாகிய அகத்தியர், 


கொன்று போர் புரியும் கந்தன்,


 கணபதி, 


மன்மதன் 


முதலாகிய 


எண்ணற்ற தேவர்கள் 


அனைவரும் 


போற்றித் 


துதிப்பர்.


#பொருளுரை      


அவளைப் போற்றி வழிபட்டால், 


ஏழு உலகங்களுக்கும் அதிபராகலாம். உண்மை. 


ஆனால், 


அவ்வாறு வழிபட்டு பெறும் பேறு அடைந்தவர்கள் யாரும் உண்டோ?


அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா? 


என்று ஒரு கேள்வி எழும். 


அந்தக் கேள்விக்கு விடை அளிக்கிறார் பட்டர் இங்கே.


அபிராமித் தாயை வணங்கி, வழிபட்டுப் பெறும் பேறு அடைந்தவர்கள் யார் யார் என்று 


ஒரு பெரும் பட்டியலே இட்டுக் காட்டுகிறார் பட்டர் :


ஆதித்தனிலிருந்து ஆரம்பிக்கிறார். மூன்று கண் உடையவலல்லவா அவள்? 


அதிலே முதலாவது கண் சூர்யன் அல்லவா? "பானு மண்டல மத்யஸ்தா" என்பது அவள் திரு நாமம்.


 இரண்டாவது, சந்திரன். 


அதாவது, அம்புலி.


 "சந்த்ர மண்டல மத்யகா" என்பதும் அவலது நாமம்தான். 


மூன்றாவது, அக்னி. 


இங்கே, 'அங்கி' எனக் குறிப்பிடப்படுவது. 


'வஹ்னி மாண்டல வாசினி" என்பதும் அவளது திரு நாமம்தான்.


இவர்கள் தவிர, 


எத்தனை எத்தனை பேர்!!


குபேரன், 


இந்திரன், 


பிரமன், 


புராரி எனப்படும் முப்புரம் எரித்த சிவபெருமான். 


முராரி எனப்படும் விஷ்ணு.


பகைவரை அழிக்கும் வேல் கொண்ட கந்தன். 


கந்தனது தமையாரான கணபதி.


சிவபெருமானால் எரிக்கப்பட்டும், மீண்டும் உயிர் பெற்றெழுந்த காமன்.


இப்படி, 


அபிராமி அன்னையினால், 


அவலை போற்றுதலினால்,


 சாதித்தவர்கள் எண்ணிரந்தவர்கள். இவர்கள் அனைவரும் சாதித்தது எதனால்? 


அன்னையின் அருளினால் அன்றோ?


இவர்கள் மட்டுமா? 


இன்னும் எத்தனை எத்தனையோ பேர் அன்னையின் பேரருளால் பெரும் சாதனைகள் புரிந்திருக் கின்றனர் என்று சொல்லுகிறார் பட்டர்.


அப்படியிருக்க, 


அவளைப் பணிவதன் மூலம், நாமும் கூட, எண்ணற்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்று பேசுகிறார் பட்டர்.


#அபிராமிதாயே#.

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?