அபிராமிஅந்தாதிபாடல்95
#அபிராமிஅந்தாதிபாடல்95
நன்றேவருகினும்,
தீதே விளைகினும்,
நான் அறிவது
ஒன்றேயும் இல்லை;
உனக்கே பரம்:
எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்
அழியாத குணக்குன்றே,
அருட்கடலே;
இமவான் பெற்ற கோமளமே!
#பொருள்
ஏ, அபிராமி!
அழியாத குணக்குன்றே!
அருட்கடலே!
மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே!
எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை.
அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன்.
இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும்,
அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன்.
இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
#பொருளுரை
நன்றும் தீதும் அபிராமியின் அடியார்களுக்கு ஒன்றுதான். எதுவுமே,
அவளது செயல்தான்.
அப்படியிருக்க, '
இது நல்லது',
இது நல்லது இல்லை'
என்று ஏதெனும் இருக்க முடியுமா என்ன?
முடியாது.
அதைத்தான் பட்டரும் இங்கே பறை சாற்றுகின்றர்.
"அம்மா!
நான்,
எனக்கு என்று இருப்பவை யாவற்றையும்,
உனது என்று அளித்துவிட்டேன். அர்ப்பணம் செய்து விட்டேன்.
இனி 'எனது' என்று எதுவுமே இல்லை. நான் அறிந்து செய்வது என்று ஒன்றும் இல்லை.
எல்லாம் உனது செயல் தான். ஆதலால், நன்று, தீது என்று ஏதும், எனக்குத் தெரியாது.
குணங்களுக்கு எல்லம் சிகரமாக விளங்குபவளே!
இமவான் புத்ரியே!
உமையே!
அபிராமித் தாயே!
அருட்கடலே!
என்னை நீயே காத்து அருள வேண்டும்"
என்று வேண்டிக் கொள்லுகிறார் பட்டர்.
'இது நான் செய்வது'; '
இது என் காரியம்' என்று இருக்கும் வரைதான் அதனால் விளையும் நன்மைகளும் தீமைகளும் நமக்கு உண்டாகி,
நம்மை வேதனையில் ஆழ்த்தும். எல்லாமே,
அவள் செயல் என்று இருந்துவிட்டாலோ,
எது விளைந்தாலும்,
அவை அனைத்தும் அவளது செயல் என்று தெளிவு இருப்பதனால்,
அதனால் விளையும் நன்மைகளும், தீமைகளும்,
நம்மைத் தாக்குவது இல்லை. இதுவே சரணாகதித் தத்துவம்.
அன்றொருனாள்,
த்ரௌபதி, தன் மானம் காக்கத் தன் முயற்சி எடுத்தாள்.
அது வரையில், கண்ணன் அவளைக் காக்க வரவில்லை.
'கண்ணா! நீயே அபயம்' என்று அவள் இரு கரம் கூப்பியவுடன், அவளது மானம் காக்கப் புடவை சுரந்தது.
அது போல,
நாம் 'நமது முயற்சி' என்று இருக்கும் வரையில்,
அபிராமியும், வாளாவிருப்பாள்.
வேடிக்கை பார்ப்பாள்.
அம்மா!
நீயே துணை என்று அவளது
திருப் பாதங்களில் சரண்புகுந்து விட்டாலோ,
நம்மைக் காப்பது அவளது கடமையாகிவிடுகிறது!
மஹான்களின் திருவாக்கு அம்பாளை சரணடைவதே வேறொன்றும் இல்லை.
#அவள்பாதம்சரணடைவோம்

Comments
Post a Comment