அபிராமிஅந்தாதிபாடல்94

 அபிராமிஅந்தாதிபாடல்94


விரும்பித் தொழும் அடியார் 


விழி நீர் மல்கி, 


மெய் புளகம்


அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி,


அறிவிழந்து


சுரும்பின் களித்து, 


மொழி தடுமாரி, 


முன்சொன்ன எல்லாம்


தரும் பித்தர் ஆவர் என்றால் 


அபிராமி சமயம் நன்றே               


#பொருள்


அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி,


 மெய்சிலிர்த்து, 


ஆனந்தம் ததும்பி, 


அறிவு மறந்து, 


வண்டைப் போல் களித்து, 


மொழி தடுமாறி,


முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால்,


அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச் சிறந்ததாகும்.


#பொருளுரை


அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியார்கள் நிலை எப்படி இருக்கும்? 


அவளின் மெய்யடியார்களின் கண்களிலே எப்போதும் கண்ணீர் ததும்பி நிற்கும். 


அவர்களது உடல் விதிர்விதிர்த்து ஒரு வித நடுக்கம் காணப்படும்.


 அவர்களது மேனி சிலிர்த்து, அவர்களது மனதிலும், 


நினைவிலும், மேனியிலும் ஒருவித ஆனந்த மயக்கம் காணப்படும்.


அந்த ஆனந்த மயக்கத்திலே, அவர்கள் சுய அறிவுடன் செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. 


பித்தர்கள் போன்றே தென்படுவார்கள். 


பித்தர்கள் போன்றே செயல் படுவார்கள்.


தேன் உண்ட வண்டு போல, எப்போதும் அவர்கள்


 'அபிராமி' என்னும் இன்ப மயக்கத்திலே இருப்பதால், 


தான் இன்னது செய்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இராது.


அவர்களிடம் நாம் ஏதாவது கேட்டாலும், அவர்களுக்கு,


 தம்மிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது என்ற உணர்வே இருக்காது. அப்படியே அவர்கள் பதில் சொன்னாலும், 


அவர்கள் சரியான பதிலாகச் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 


அவர்கள் அந்த அன்னையின் உணர்விலேயே தோய்ந்து கிடப்பதால், தாம் என்ன சொல்லுகிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வே அற்றுத்தான் அவர்கள் இருப்பார்கள்.


ஆனால், 


அப்படிப்பட்டவர்கள் என்ன சொன்னாலும், 


பித்தர்கள் போல் உளறினாலும்கூட, அவை சரியானவையாகவே அமையும்.


அவர்கள் சொன்ன எல்லாம் நிறைவேறும்.


அவர்களின் வாக்கு பலிக்கும்.


 அவர்கள், 


தாமாக ஏதும் சொல்வது இல்லை. அபிராமியிலே தோய்ந்து அந்த வாக்கு வருவதால், 


அது அபிராமியின் வாக்கே ஆகிவிடுகிறது. 


அதனால்தான் வாக்பலிதம் ஏற்படுகிறது.


இப்படி, 


தனது அடியாரின் வாக்கிலும், மனத்திலும், உடலிலும் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய, 


அந்த அன்பர்கள் எது சொன்னாலும் அவை யாவையும் மெய்யாக்கி நடத்திக் காட்டக்கூடிய


இந்த அபிராமியின் சமயம் நல்ல சமயம்தானே என்று கூறுகிறார் பட்டர்.


அவளை சரணடைந்தால் அனைத்தும் பலிக்கும்.


அதற்கு உதாரணம் அபிராமி பட்டரே,அவளை சரணாகதி அடைந்ததால் அமாவாசை நிலவானது பௌர்ணமி நிலவானது அம்பாளின் கருணையே தவிர வேறொன்று இல்லை.


அவள் பாதம் சரணாகதி அடைவோம் என்கிறது இந்த 94வது அபிராமி அந்தாதி பாடல்.


#ஓம்ஶ்ரீஅபிராமிதாயே#.


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?