Posts

Showing posts from December, 2025

அபிராமிஅந்தாதிபாடல்76

Image
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்; நின் குறிப்பு அறிந்து #அபிராமிஅந்தாதிபாடல்76 மறித்தேன் மறலி  வருகின்ற நேர்வழி;  வண்டு கிண்டி வெறித்தேன்  அவிழ் கொன்றை  வேணிப் பிரான்  ஒரு கூற்றை, மெய்யில் பறித்தே,  குடிபுகுதும்  பஞ்ச பாண பயிரவியே             #பொருள்# ஏ  அபிராமி!  பஞ்ச பாணங்களையுடையவளே!  உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன் வரும் வழியைக் கண்டு கொண்டேன்.  கண்டதும் அல்லாமல்,  அவன் வருவதற்கு முன்,  அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே).  வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு,  தானொரு பாதியாக அமர்ந்தவளே! #பொருளுரை# அம்மையே! அபிராமி!  உன் கோலம் முழுதும்,  அழகு முழுவதும், வடிவம் முழுவதும் நான் என் மனதில் வாங்கிக் கொண்டு விட்டேன்.  உன்னை அறிந்து கொண்டதனால், அந்த காலன் வரும் வழியை அறிந்து கொண்டு,  அதனை அடைத்து விட்டே...

அபிராமி அந்தாதி பாடல் 75

Image
 அபிராமி அந்தாதி பாடல் 75 தங்குவர்,  கற்பகத் தாருவின் நீழலில்;  தாயர் இன்றி மங்குவர்,  மண்ணில் வழுவாப் பிறவியை; மால் வரையும், பொங்குவர் ஆழியும்,  ஈரெழ் புவனமும்,  பூத்த உந்திக் கொங்கு இவர்  பூங்குழலாள் திருமேனி  குறித்தே #பொருள்                பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே). #பொருளுரை அபிராமியை, ஈரேழ் புவனங்களையும், மலைகளையும், கடலையும் என இந்த உலகங்களையெல்லாம் படைத்த அந்த அபிராமியை இடை விடாது தியானிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? சொல்லுகிறார் பட்டர். அவர்கள், கற்பக மரங்களின் நிழலிலே இருப்பார்கள். அதே சமயம், அவர்களுக்கு, இந்த மண்ணிலே, ...

அபிராமி அந்தாதி பாடல் 74.

Image
#அபிராமி அந்தாதி பாடல் 74. நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும்,  நாரணனும், அயனும் பரவும்  அபிராம வல்லி அடி இணையைப் பயன் என்று கொண்டவர்,  பாவையர் ஆடவும் பாடவும்,  பொன் சயனம் பொருந்து  தமனியக் காவினில் தங்குவரே        #பொருள்  முக்கண்களையுடைய சிவன்,  திருமால்,  பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும்.  அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள். #பொருளுரை                      அந்த அபிராமவல்லியை யாரெல்லாம் துதிக்கிறார்கள்?  நயனங்கள் மூன்றுடை நாதனாம் சிவ பெருமான் வணங்கி மகிழ்கிறார். அந்த வேதம் வணங்கி வழிபடுகிறது. அகில உலகங்கலையும் காத்து ரக்ஷிக்கும் அந்த நாரயணனும் வழிபடுகிறார். உலகங்களையெல்லாம் படைத்து அருள் செய்யும் அந்த அயனும் - பிரம்மாவும் வழிபடுகிறார். இப்படிப்பட்ட அபிராமிவல்லியின் அடியிணயைப் பரவுவதே பயனாகக...

அபிராமிஅந்தாதிபாடல்73

Image
 தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, #அபிராமிஅந்தாதிபாடல்73 தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம்,  தனுக் கரும்பு, யாமம் வயிரவர்  எத்தும் பொழுது;  எமக்கு என்று வைத்த சேமம் திருவடி,  செங்கைகள் நான்கு,  ஒளி செம்மை, அம்மை நாமம் திரிபுடை,  ஒன்றோடு இரண்டு நயனங்களே                           #பொருள்:- ஏ, அபிராமி!  உன்னுடைய மாலை,  கடம்ப மாலை,  படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்);  வில்லோ கரும்பு;  உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்;  நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும்.  திரிபுரை என்ற பெயரும் உண்டும்.  நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும். #பொருளுரை அவள் கடப்ப மாலை அணிந்து கொண்டிருக்கிறாள்.  பஞ்ச பாணங்களைக் கைக் கொண்டு இருக்கிறாள்.  கரும்பாலான வில்லைக் கொண்டிருக்கிறாள்.  அவளைத் துதிக்கும் பொழுது என்பது நள்ளிரவு -  அப்போதுதான் பைரவர்கள் அம்பிகை...

அபிராமிஅந்தாதிபாடல்72

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்72 என் குறை தீர  நின்று எற்றுகின்றேன்;  இனி யான் பிறக்கில், நின் குறையே  அன்றி யார் குறை காண்?- இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி  மெலிகின்ற நேர்  இடை மெல்லியலாய்!- தன் குறை தீர,  எம்கோன் சடை மேல்  வைத்த தாமரையே                 பொருள்:- ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும்.  அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே!  எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர,  தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே! இந்த வானில் தோன்றும் மின்னலையும் பழிக்குமாறு மெல்லிய இடையைக் கொண்ட தாயே! அம்மா! அந்த சிவ பெருமானும்கூட,  தனது குறை தீர வேண்டுமானால், உன்னைச் சரணடைந்து, உனது பாதங்களைத் தனது சடையின் மேல் வைத்துக் கொண்டார். நானும்,  என் குறை தீர,  உன்னைத் தொழுகின்றேன்.  உன்னைச் சரணடைந்து,  நீயே கதி...

அபிராமிஅந்தாதி பாடல்70

Image
 அபிராமிஅந்தாதி பாடல்71 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்,  பனி மா மதியின் குழவித் திருமுடிக்  கோமள யாமளைக் கொம்பிருக்க, இழவுற்று நின்ற நெஞ்சே!- இரங்கேல், உனக்கு என் குறையே?     #பொருள்:- அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள்.  வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள்.  குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க,  நெஞ்சே!  ஊக்கம் குறைந்து,  ஏக்கம் கொள்ளாதே!  உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை? அவள் அழகுக்கு ஏதேனும் ஒப்புமை உண்டா என்ன? இல்லை! அவளுடைய காலடிகள்,  சிவந்து இருக்கின்றன.  எதனால்? வேதங்கள், அவளது காலடியிலே விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்கின்றன.  அப்படி ம்றைகளாகிய வேதங்கள் விழுந்து விழுந்து வணங்குவதனாலேயே,  அவளுடைய காலடிகள் சிவந்து விட்டனவாம்! சிவந்து,  சிகப்பான தாமரை மலர்கள் போல இருக்கின்றனவாம்! இங்கே,  லலிதா சஹஸ்ரனாமத்தினை நினைவு படுத்துகிறார் பட...

#அபிராமிஅந்தாதிபாடல்70#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்70# கண் களிக்கும்படி கண்டுகொண்டேன்;  கடம்பாடவியில் பண் களிக்கும்  குரல் வீணையும்,  கையும் பயோதரமும், மண் களிக்கும்  பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்பெண்களில் தோன்றிய  எம்பெருமாட்டிதன் பேரழகே                        பொருள்:- ஏ, அபிராமி!  உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன்.  கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே!  நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல்,  வீணை தாங்கிய அழகிய கரங்கள்,  திருமுலை தாங்கிய திருமார்பு,  மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே!  உன்னைக் கண்டு கொண்டேன். அபிராமியைக் கண்ட விததிதினைப் பற்றிப் பேசுகிறா அபிராமி பட்டர் இங்கே. அபிராமியை நான் என் இரு கண்களும் களிக்கும் விதத்தில் கண்டு கொண்டேன்.  கடம்ப வனத்திலே அவள் உறைந்து இருந்த காட்சியை நான் கண்டு கொண்டேன்.  பண்ணும் விரும்பிக் களிக்கும் குரலுடையவள் அவள்.  கையினில் வீ...

#அபிராமிஅந்தாதிபாடல்69

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்69 தனம் தரும்,  கல்வி தரும்,  ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்,  தெய்வ வடிவும் தரும்,  நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்,  நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே- கனம் தரும் பூங்குழலாள்,  அபிராமி, கடைக்கண்களே                           #பொருள் அபிராமி!  மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே!  நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும்.  அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும்.  நல்ல கல்வி தரும்.  சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும்.  நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும்.  நல்லன எல்லாம் கிட்டும். #பொருளுரை அபிராமி அன்னை எங்கும் இருக்கிறாள்,  அவளே எல்லாமாகவும் இருக்கிறாள். அவளை பணிந்து ஏத்துவதே, பாடிக்கொண்டாடுவதே அவளின் அருள்தான்.  நாம் வாழும் வாழ்வே அவளின் கடைக்கண் பார்வை இருப்பதால் தான்.  இருந்தாலும், நம்மை போன்றவர்க்கு, அவளை அடி பணிவதால், என்னென்ன கிடைக்கும் என்று பட்டி...