அபிராமி அந்தாதி பாடல் 74.

#அபிராமி அந்தாதி பாடல் 74.


நயனங்கள் மூன்றுடை நாதனும்,

வேதமும், 


நாரணனும்,


அயனும் பரவும் 


அபிராம வல்லி அடி இணையைப்


பயன் என்று கொண்டவர், 


பாவையர் ஆடவும் பாடவும், 


பொன் சயனம் பொருந்து 


தமனியக் காவினில் தங்குவரே       


#பொருள்


 முக்கண்களையுடைய சிவன்,


 திருமால், 


பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். 


அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள்.


அரம்பை முதலான தேவ மகளிர் பாடி,


ஆட, பொன் ஆசனமே கிட்டினும்,


அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.


#பொருளுரை                     


அந்த அபிராமவல்லியை யாரெல்லாம் துதிக்கிறார்கள்?


 நயனங்கள் மூன்றுடை நாதனாம் சிவ பெருமான் வணங்கி மகிழ்கிறார். அந்த வேதம் வணங்கி வழிபடுகிறது.


அகில உலகங்கலையும் காத்து ரக்ஷிக்கும் அந்த நாரயணனும் வழிபடுகிறார்.


உலகங்களையெல்லாம் படைத்து அருள் செய்யும் அந்த அயனும் - பிரம்மாவும் வழிபடுகிறார்.


இப்படிப்பட்ட அபிராமிவல்லியின் அடியிணயைப் பரவுவதே பயனாகக் கொண்டவர்கள், 


போயும் போயும், அந்த இந்திர லோகத்தையா அடைவார்கள்? 


என்று கேட்கிறார் பட்டர்.


அந்த இந்திர லோகம், எப்படிப்பட்டது? பாவையர்களின் ஆடலும் பாடலும் நிறைந்தது. 


சயன போகங்கள் நிறைந்தது. ஆனால், 


அதுவும் அழியக் கூடியதுதான். செய்த தவப் பயன் முடிந்துவிட்டால், அந்த போகமும் முடிந்து விடும்தான்.


ஆனால், 


அந்த அபிராமியின் அடியிணைகள் தரும் அரவணைப்பு என்றுமே நீடிக்கக் கூடியது. 


முழுவதுமாக நம்மை இந்த சம்சார பந்தத்டிலிருந்து விடுவித்து, முக்தி நல்கக் கூடியது. 


அந்த அடியிணையைப் பயன் என்று கொண்டு விட்டவர்கள், வேறு எதனையும் பயனாகக் கொள்ள மாட்டார்கள்! 


அந்தப் பயனும்கூட, அவர்கள் விரும்பினால் கிடைத்து விடும்தான் என்றாலும், அழியக்கூடிய அந்தப் பலங்களை விட, 


அந்த போகங்களை விட, அழியாத முக்தி இன்பத்திலேயே அந்த அபிராமியின் அடியார்கள் மனது நிலைத்து இருக்கும் என்பதை இங்கே அபிராமி பட்டர் மிக அழகாக விவரிக்கிறார்.


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்